Featured post

Indra Movie Review

Indra Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம indra படத்தோட review அ தான் பாக்க போறோம். sabarish nanda தான் இந்த படத்தை இயக்கி இருக்காரு. இ...

Sunday, 18 August 2024

பேபி ஷாலினி போல தமிழ் திரையுலகிற்கு

 பேபி ஷாலினி போல தமிழ் திரையுலகிற்கு மீண்டும் ஒரு குட்டி நடிகை!






அப்பா மீடியா  தயாரிப்பில் "எங்க அப்பா" என்ற தலைப்பில் மியூசிக்கல் ஆல்பம் தயாராகி உள்ளது! இதில் ஐந்து வயது குட்டி நடிகை லக்‌ஷனா ரிஷி நடித்துள்ளார்.


லக்‌ஷனா ரிஷி  இரண்டு வயதில் இருந்தே நடிப்பின் மீது பேரார்வம் கொண்டு, திருக்குறள், சிலப்பதிகாரம் ஆகியவற்றை முகபாவனையோடு பேசி வந்தார். தற்போது 'எங்க அப்பா' படப்பிடிப்பில் மலை, காடு, நதி, அருவி ஆகிய பகுதிகளில் பயம் இல்லாமல் நடித்து, படக்குழுவினரின் பாராட்டுக்களை பெற்றுள்ளார்.


அப்பாவை இறைவனாக நினைக்கும் குழந்தை. தந்தை மகள் அன்பு தான் கதை.


எழுத்து, இயக்கம் டாக்டர் எஸ்.வி.ரிஷி, ஒளிப்பதிவு ரெஜி மற்றும் கணேஷ், இசை சந்தோஷ் சாய், எடிட்டிங் பிரகாஷ் மப்பு, விஜய் டிவி சூப்பர் சிங்கர் பிரியங்கா பாடியுள்ளார். மக்கள் தொடர்பு கோவிந்தராஜ், தயாரிப்பு அப்பா மீடியா.


கேரள வனப்பகுதி மற்றும் தமிழக எழில் பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றது. விரைவில் வெளிவருகிறது "எங்க அப்பா"!


@GovindarajPro

No comments:

Post a Comment