Featured post

Padma Shri Thota Tharrani’s Art Showcase - ‘Footnotes on Cinema’ Captivates Chennai, Celebrating Celluloid on Canvas

 Padma Shri Thota Tharrani’s Art Showcase - ‘Footnotes on Cinema’ Captivates Chennai, Celebrating Celluloid on Canvas The city came alive wi...

Saturday, 17 August 2024

ஹாஷ்டேக் FDFS புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் திரவ் இயக்கத்தில்

 *ஹாஷ்டேக் FDFS புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் திரவ் இயக்கத்தில் திரவ்-நிகிலா- விஜய்- விபிதா நடித்துள்ள படம் ’டோபமைன் @ 2.22’!*  






எளிமையான, புது சிந்தைனைகளுடன் வரும் கதைகளை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்க திரை ஆர்வலர்கள் ஆர்வமாக உள்ளனர். அதுபோன்ற கதைகள் வரும்போது நிச்சயம் அது பெரும் வெற்றி பெரும் என்பதில் சந்தேகம் இல்லை. அதுபோன்ற பல கதைகள் இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. திறமையான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் ‘டோபமைன் @ 2.22' படத்தில் இணைந்துள்ளனர். திரவ் இந்தப் படத்தை இயக்கி அதில் முதன்மை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.


படம் பற்றி இயக்குநர், நடிகர் திரவ் பகிர்ந்துகொண்டதாவது, “’டோபமைன் @ 2.22’ படத்தின் கதை வெவ்வேறு பின்னணியைச் சேர்ந்த ஏழு பேரைச் சுற்றி வருகிறது. அவர்களின் வாழ்க்கை இன்னும் நடக்காத ஒரு கொலையால் இணைக்கப்படுகிறது. அந்த சமயத்தில் அவர்களின் உணர்வுகள் மற்றும் ஒரு விஷயத்திற்கு அடிமையாதல் பற்றிய கதையாக இது நகரும். 18-20 நாட்களில் முழுப் படப்பிடிப்பையும் சென்னையின் அனைத்துப் பகுதிகளிலும் படமாக்கி முடித்துள்ளோம். ‘குட்நைட்’, ‘லவ்வர்’ படங்கள் புகழ் நிகிலா ஷங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்” என்றார்.  


மேலும் அவர் கூறுகையில், “விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கனா காணும் காலங்கள்- சீசன்3’யில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் விஜய் டியூக், யூடியூப் தொடரான, ‘ஷாலினி ஸ்டோர்’ மூலம் நன்கு அறியப்பட்டவர். அவரும் படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தில் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் ‘குற்றம் கடிதல்’ புகழ் சத்யா நடித்துள்ளார். விபிதா, சதீஷ், சாம்சன் மற்றும் ’நூடுல்ஸ் படத்தில் நடித்த மாஸ்டர் சக்திவேலன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்”


படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் தங்கள் திறமையால் படத்தை சிறந்ததாக உருவாக்கியுள்ளனர். குறிப்பாக, க்ளைமாக்ஸில் இடம்பெறும் பாடல் அனைவரையும் பிரதிபலிக்கும் மற்றும் தொடர்புபடுத்தும் வகையில் கபில் கபிலன் அதை பாடியுள்ளார். படத்தில் இடம்பெறும் ஆங்கிலப் பாடல் ஒன்றை ’கைதி’, ‘லியோ’ புகழ் சரண்யா கோபிநாத் பாடியிருக்கிறார். 


ஆலன் ஷோஜி படத்திற்கு இசையமைக்க, பிருத்வி ராஜேந்திரனின் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு மற்றும் பாடல் வரிகளை திரவ் கையாண்டுள்ளார். ஆனந்த் ராமச்சந்திரன் மற்றும் கிஷோர் காமராஜ் ஆகியோர் ஒலிப்பதிவிலும் பப்ளிசிட்டி டிசைனில் தினேஷூம் பணியாற்றியுள்ளனர். சுரேஷ் சந்திரா மற்றும் அப்துல் நாசர் இந்த படத்திற்கான மக்கள் தொடர்பு பணிகளை கவனிக்கின்றனர். 


முன்னதாக ’வெப்பம் குளிர் மழை’ படத்தைத் தயாரித்த ஹாஷ்டேக் FDFS  புரொடக்ஷன்ஸ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. இந்த திரைப்படம், நாம் அடிக்கடி சந்திக்கும் மக்கள், வாழ்க்கை முறை மற்றும் சமகால பிரச்சனைகளை எதிரொலிக்கும்.

No comments:

Post a Comment