Featured post

RSoft Technologies Inaugurates New Innovation Hub in Chennai Pattabiram TIDEL Park

 RSoft Technologies Inaugurates New Innovation Hub in Chennai Pattabiram TIDEL Park Celebrates 12th Anniversary with “12x12x12 Journey” Them...

Thursday, 22 August 2024

மெகாஸ்டார் சிரஞ்சீவி, வசிஷ்டா, யுவி

 *மெகாஸ்டார் சிரஞ்சீவி, வசிஷ்டா, யுவி கிரியேஷன்ஸ் இணையும் விஸ்வம்பரா படத்தின் அதிரடியான ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது !!*



ப்ரீ-லுக் போஸ்டர் பெரும் வரவேற்பைக் குவித்த நிலையில்,  மெகாஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில்,  மிகவும் எதிர்பார்க்கப்படும் கிரேஸி சோஷியோ-ஃபேண்டஸி என்டர்டெய்னர் “விஸ்வம்பரா” படத்தின் தயாரிப்பாளர்கள், ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில், பர்ஸ்ட் லுக் போஸ்டரை தற்போது வெளியிட்டுள்ளனர். 


ஃபர்ஸ்ட் லுக்கில் மாய புராணகதைகளை ஞாபகப்படுத்தும் பின்னணியில், சிறப்பு சக்திகள் மிகுந்த திரிசூலத்தினை ஏந்தியபடி காட்சியளிக்கிறார் சிரஞ்சீவி. இடி மின்னல் பரவ, தெய்வீக கதிரலை சுற்றிலும் பாய்கிறது. 


சிரஞ்சீவி மிக இளமையாகவும் சுறுசுறுப்பாகவும் லேசான தாடியுடன் தோற்றமளிக்கிறார், திரிசூலத்தினை கையில் பிடித்தபடி, மிரட்டலான லுக்கில் அசத்துகிறார். இந்த  கண்கவர் ஃபர்ஸ்ட் லுக், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. 


பிளாக்பஸ்டர் “பிம்பிசாரா” திரைப்படத்தை  வழங்கிய இயக்குநர் வசிஷ்டா, தனது அபிமான நட்சத்திரமான சிரஞ்சீவியுடன் இணைந்து, “விஸ்வம்பரா” திரைப்படத்தை பிரம்மாண்ட படைப்பாக உருவாக்குகிறார். சிறந்த விஎஃப்எக்ஸ், அதிரடி ஆக்சன் காட்சிகள் மற்றும் மனதைத் தொடும் உணர்வுப்பூர்வமான  காட்சிகளுடன் ரசிகர்கள் ஆச்சர்யம் கொள்ளும் வகையில், ஒரு  உலகத்தை உருவாக்கியுள்ளார்.


பிரம்மாண்ட பிளாக்பஸ்டர் தயாரிப்பு நிறுவனமான யுவி கிரியேஷன்ஸ் இப்படத்தினை தயாரிக்கிறது. முன்னணி நட்சத்திர நடிகர்கள் பங்கேற்க உயர்தர தொழில்நுட்ப வல்லுநர்கள் பங்கேற்றுள்ளனர். நடிகை திரிஷா கிருஷ்ணன் மற்றும் ஆஷிகா ரங்கநாத் முன்னணி கதாநாயகிகளாக நடிக்க உள்ளனர், குணால் கபூர் ஒரு சக்திவாய்ந்த கேரக்டரில் நடிக்கின்றார்.


விக்ரம், வம்சி, பிரமோத் ஆகியோர் இணைந்து  பெரும் பொருட்செலவில், இந்த ஃபேண்டஸி ஆக்‌ஷன் அட்வென்சர் திரைப்படத்தை தயாரிக்கிறார்கள். சமீபத்தில் ஆஸ்கார் விருது பெற்ற எம்.எம்.கீரவாணி இப்படத்திற்கு இசையமைக்கிறார், பிரபல லென்ஸ்மேன் சோட்டா K நாயுடு ஒளிப்பதிவு செய்கிறார்.


விஸ்வம்பரா 2025 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதி வெளியிடப்படவுள்ளதாக தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.


நடிகர்கள்: மெகாஸ்டார் சிரஞ்சீவி, த்ரிஷா கிருஷ்ணன், ஆஷிகா ரங்கநாத், குணால் கபூர்


நடிப்பு : மெகா ஸ்டார் சிரஞ்சீவி


தொழில்நுட்பக் குழு: 

எழுத்தாளர் மற்றும் இயக்குநர்: வசிஷ்டா தயாரிப்பாளர்கள்: விக்ரம், வம்சி, பிரமோத் பேனர்: UV கிரியேஷன்ஸ் 

இசை: எம்.எம்.கீரவாணி 

ஒளிப்பதிவு : சோட்டா கே நாயுடு 

தயாரிப்பு வடிவமைப்பாளர்: ஏ.எஸ்.பிரகாஷ்

மக்கள் தொடர்பு : யுவராஜ் 

மார்க்கெட்டிங் : ஃபர்ஸ்ட் ஷோ

No comments:

Post a Comment