Featured post

Power Star Pawan Kalyan’s Epic Period Action Film Hari Hara Veera Mallu Part-1

 Power Star Pawan Kalyan’s Epic Period Action Film Hari Hara Veera Mallu Part-1: Sword vs Spirit Enters Final Leg of Shooting Power Star Paw...

Wednesday, 6 November 2024

ராமாயணம் - பாகம் ஒன்று மற்றும் இரண்டு, 2026 மற்றும் 2027

 *ராமாயணம் - பாகம் ஒன்று மற்றும் இரண்டு,  2026 மற்றும் 2027 தீபாவளி அன்று வெளியாகிறது!*



*நமித் மல்ஹோத்ரா, இந்தியாவின் மிகப்பெரிய திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்தார்: ராமாயணம் - பாகம் ஒன்று மற்றும் இரண்டு,  2026 மற்றும் 2027 தீபாவளி அன்று வெளியாகிறது!*


இந்தியாவின் மிகப்பிரம்மாண்ட திரைப்படம் ராமாயணம் - பாகம் ஒன்று மற்றும் இரண்டு 2026 மற்றும் 2027 தீபாவளி அன்று வெளியாகிறது!*


ரசிகர்களே வலாற்றின் சிறப்பு மிக்க பக்கத்தைக் காணத் தயாராகுங்கள்! புகழ்பெற்ற திரைப்பட படைப்பாளியான நித்தேஷ் திவாரி இயக்கத்தில், நமித் மல்ஹோத்ராவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிரம்மாண்டமான திரைப்படம், “ராமாயணம்”, இந்திய சினிமா ரசிகர்களை ஆச்சரியர்த்தில் ஆழ்த்தவுள்ளது.! இந்த காவிய திரைப்படம், இந்தியாவின் மிகவும் நேசத்துக்குரிய கதையினை  மிகப்பிரம்மாண்டமாக தொலைநோக்கு கதைசொல்லலுடன் திரையில் உயிர்ப்பிக்கவுள்ளது.



பிரைம் ஃபோகஸ் ஸ்டுடியோவின் தொலைநோக்கு சக்தியாக, நமித் மல்ஹோத்ரா ஹாலிவுட்டின் சில பெரிய திரைப்படங்களில்  பணிபுரிந்துள்ளார், இதில் டுயூன், இன்செப்ஷன் மற்றும் தி கார்பீல்ட் மூவி போன்ற சமீபத்திய வெற்றித் திரைப்படங்களும் அடங்கும். கூடுதலாக, அவர் ஆங்க்ரி ஃபேர்ட்ஸ் 3ஐயும் சமீபத்தில்  அறிவித்துள்ளார். நமித் மல்ஹோத்ராவின் கதைசொல்லல் பற்றிய ஆழமான புரிதல் அவரை ஹாலிவுட்டின் மிக முக்கியமான இந்தியர்களில் ஒருவராக ஆக்கியுள்ளது!


https://www.instagram.com/p/DCBD-oBzE5o/?igsh=NnNlOXZkNmR1MDhl


சமூக ஊடகங்களில், நமித் மல்ஹோத்ரா ஒரு போஸ்டரை பகிர்ந்து கொண்டு கூறியுள்ளதாவது.., “ஒரு தசாப்தத்திற்கும் முன்னதாக, 5000 ஆண்டுகளுக்கும் மேலாக பில்லியன் கணக்கான இதயங்களை ஆட்சி செய்த, இந்த காவியத்தை பெரிய திரைக்கு கொண்டு வருவதற்கான உன்னதமான தேடலை நான் தொடங்கினேன். இன்று, எங்களது குழு ஒரே ஒரு அரிய நோக்கத்துடன் அயராது உழைக்கும்போது, அது அழகாக வடிவம் பெறுவதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்: நமது வரலாறு, நமது உண்மை மற்றும் நமது கலாச்சாரத்தின் மிகவும் உண்மையான, புனிதமான மற்றும் பார்வைக்கு பிரமிக்க வைக்கும் தழுவல் - நமது "ராமாயணம்" - உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு விரைவில்.


நமது மிகப் பெரிய காவியத்தை பெருமையுடனும், பயபக்தியுடனும் உயிர்ப்பிக்கும் எங்கள் கனவை நிறைவேற்ற எங்களுடன் சேருங்கள்...


2026 தீபாவளியில் பகுதி 1 

மற்றும் 

2027 தீபாவளியில் பகுதி 2 


எங்கள் முழு ராமாயண குடும்பத்திலிருந்து 🙏🪔”


2026 மற்றும் 2027க்கான உங்கள் காலெண்டர்களில்  தீபாவளி  நாளை குறித்து வையுங்கள் இந்தியாவின் மிகப்பெரிய திரைப்படமாக ராமாயணம் பாகம் ஒன்று மற்றும் இரண்டு உங்களை மகிழ்விக்க வருகிறது.

No comments:

Post a Comment