மெகா பிரின்ஸ் வருண் தேஜ், கருணா குமார், வைரா என்டர்டெயின்மென்ட்ஸ், எஸ்ஆர்டி என்டர்டெயின்மென்ட்ஸ், இணையும் பான் இந்திய “மட்கா” படத்தின், அதிரடியான ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!
மெகா பிரின்ஸ் வருண் தேஜ், “மட்கா” படம் மூலம், பான் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளார். இப்படம், அவரது திரைவாழ்வின், மிகப் பெரும் பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படமாகும். கருணா குமார் இயக்கத்தில் வைரா என்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் எஸ்ஆர்டி என்டர்டெயின்மென்ட்ஸ் பேனர்களில் டாக்டர் விஜேந்தர் ரெட்டி தீகலா மற்றும் ரஜனி தல்லூரி தயாரிக்கும் இப்படம், மிகப் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. தற்போது ஹைதராபாத்தில் இப்படத்தின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இன்று இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், வருண் தேஜ் இளைஞன் மற்றும் நடுத்தர வயது மனிதன் என இரண்டு அவதாரங்களில் தோற்றமளிக்கிறார். கதாநாயகனின் 24 வருட பயணத்தை காணும் இத்திரைப்படத்தில், நான்கு விதமான கெட்-அப்களில் வருண் தேஜ் தோன்றுகிறார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், அடிதட்டு மனிதனாக இருந்து கிங்காக மாறியுள்ள அவரின் இரண்டு சாயல்களைக் காட்டுகிறது.
போஸ்டரிலல் வருண் தேஜ் இளமையாகவும், துணிச்சலாகவும், சுருட்டு புகைப்பதை காணலாம். அவரது டிரெஸ்ஸிங் ஸ்டைல், ஹேர் ஸ்டைல், வின்டேஜ் ஸ்டைலில் அமைந்துள்ளது. மற்றொரு தோற்றத்தில் அவர், அதே போல் சுருட்டு புகைக்கிறார் ஆனால் அவர் இங்கே பணக்காரராகவும், வயதானவராகவும், கண்ணாடி மற்றும் நரைத்த முடியுடன் இருக்கிறார். அவரது மேஜையில் துப்பாக்கி இருக்கிறது. விளையாடும் அட்டைகளில் இருந்து, கிங் அட்டை பின்னணியாக பயன்படுத்தப்படுகிறது. மிகவும் ஈர்க்கக்கூடிய இந்த ஃபர்ஸ்ட் லுக் பெரும் ஆவலைத் தூண்டுகிறது.
முந்தைய காலப் பின்னணியில் உருவாகும் இப்படத்தில் மீனாட்சி சவுத்ரி மற்றும் நோரா ஃபதேஹி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். ஏ கிஷோர் குமார் ஒளிப்பதிவு , ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார் மற்றும் கார்த்திகா ஸ்ரீனிவாஸ் எடிட்டிங் பணிகளை செய்கிறார்.
இப்படம் தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
நடிகர்கள்: வருண் தேஜ், நோரா ஃபதேஹி, மீனாட்சி சவுத்ரி, நவீன் சந்திரா, சலோனி, அஜய் கோஷ், கன்னட கிஷோர், ரவீந்திர விஜய், பி ரவிசங்கர் மற்றும் பலர்.
தொழில்நுட்பக் குழு:
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்: கருணா குமார்
தயாரிப்பாளர்கள்: டாக்டர் விஜேந்தர் ரெட்டி டீகலா மற்றும் ரஜனி தல்லூரி
தயாரிப்பு நிறுவனங்கள் : வைரா என்டர்டெயின்மென்ட்ஸ், எஸ்ஆர்டி என்டர்டெயின்மெண்ட்ஸ்
இசை: ஜி.வி.பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு : கிஷோர் குமார்
எடிட்டர்: கார்த்திகா ஸ்ரீனிவாஸ் ஆர்
தயாரிப்பு வடிவமைப்பாளர்: கிரண் குமார் மன்னே
CEO: EVV சதீஷ்
நிர்வாக தயாரிப்பாளர்: ஆர்.கே.ஜனா, பிரசாந்த் மாண்டவா, சாகர்
அணிகலன்கள்: கிலாரி லட்சுமி
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்கெட்டிங் : ஹாஷ்டேக் மீடியா
No comments:
Post a Comment