தமிழக மீனவரை கொல்லும் சிங்களத்தின் வணிகத்தை முடக்க
'தாம்ரோ பர்னிச்சர்' கடைகள் முற்றுகை- சென்னை.
'மீனவரெல்லாம் இந்தியரா,
இல்லை அவர்கள் அன்னியரா?
வரி வாங்கும் இந்தியாவே
மீனவரை காக்க மறுப்பதேன்?
தமிழர் மண்ணில் சிங்களன் வணிகம்.
செத்து மிதப்பதோ
தமிழ் மீனவர் தினம்தினம்.
தடை செய்திடுவோம்
சிங்களன் வணிகத்தை
என்ன ஆச்சு? என்ன ஆச்சு?
இலங்கை மீதான 2013 பொருளாதார தடை
சட்டமன்ற தீர்மானம்
என்ன ஆச்சு?
இலங்கை மீது பொருளாதார தடையை நடைமுறைப்படுத்து.
இழுத்து மூடு, இழுத்து மூடு!
தம்ரோ கடைகளை இழுத்து மூடு!!'
எனும் முழக்கங்களோடு எழுச்சிகரமாக அண்ணாநகர் 'தாம்ரோ கடை' முற்றுகை 10 ஆகஸ்டு 2024 காலை தொடங்கியது.
மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் தோழர் திருமுருகன் காந்தி மற்றும் தோழர் பிரவீன் குமார், தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் தோழர் கே,எம். சரீப், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் குடந்தை அரசன், எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயலாளர் தோழர் ஏ.கே. கரீம், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சென்னை மாவட்ட தலைவர் தோழர் குமரன், தமிழர் விடுதலைக் கழகத்தின் தலைவர் தோழர் சௌ.சுந்தரமூர்த்தி மற்றும் எஸ்.டி.பி.ஐ.கட்சி சென்னை மாவட்ட செயலாளர் தோழர் ரஷீத், த.பெ.திக தோழர் ஆவடி நாகராசன், தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மூத்த- மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் தோழர்.சண்முகராஜா, ராஜசேகர், அப்துல்ரகுமான், இர்ஷாக் அலி, உமர் அலி மற்றும் தமிழர் விடியல் கட்சியின் தோழர்கள் உள்ளிட்ட
ஏராளமான தோழமைகள் முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்று கைதாகினர். எழுச்சியுடன் நடந்த இப்போராட்டம் இலங்கை அரசிற்கும், சிங்கள முதலீட்டாளர்களுக்கும் நெருக்கடியும், எச்சரிக்கையும் விடுப்பதாகும்.
திமுக அரசு இலங்கை கடற்படை மீது கொலை வழக்கை பதிவு செய்ய வேண்டும். இதுவரை இவ்வாறான மூன்று கொலைகளுக்கு வழக்கு பதியாமல் திமுக அரசு மெள காப்பது இலங்கையை ஊக்குவிப்பதாகும். இந்திய பாஜக அரசு இலங்கை அரசுக்கு ஆதரவளித்து மீனவர் படுகொலையை ஊக்குவிக்கும் போக்கை நிறுத்த வேண்டும். இலங்கை கடற்படைக்கு பயிற்சி கொடுக்கும் வெட்கக்கேடான செயலை நிறுத்த வேண்டும். அதானி துறைமுகத்திற்காக இலங்கையை மிரட்டி பணிய வைக்கும் பாஜக கும்பல் தமிழ் மீனவர் படுகொலையை கண்டிப்பது கூட செய்வதில்லை.
இலங்கை மீது கொலை வழக்கை பதிவு செய்ய அழுத்தம் தராத எதிர்க்கட்சி அதிமுக மெளனம் கலைக்க வேண்டும். எடப்பாடியார் விடியா அரசு என அழைப்பதன் வழியாக ஆட்சி மாற்றம் செய்துவிடலாமென கனவு காண்பதை நிறுத்தி ஆக்கப்பூர்வமான அழுத்தங்களை பதிவு செய்ய மறுக்கிறார். இலங்கையின் இப்படுகொலையை கண்டிக்காத ராகுல் காந்தியும், டில்லி காங்கிரஸ் கட்சியும் வாய் திறக்க வேண்டும். நெய்தல்படை என நாம்தமிழரின் சினிமாத்தனமான வசனத்தை தவிர வேறெதுவும் கட்சி தொண்டர்களை அணிதிரட்டியதாக வரலாறு இல்லை. இவ்வாறு பேசுவதோடு நிறுத்திக் கொள்பவர்களால் எவ்வித முன்னேற்றமும் காணாது தமிழினம். வீதிக்கு வராதவர்களால் புரட்சியும் செய்ய இயலாது, அரசியல் மாற்றத்தையும் கொண்டு வர இயலாது. இனிமேலாவது தமிழர்கள் போராடும் இயக்கங்களோடு கைகோர்த்து அணி திரள வேண்டும். ஓட்டு வாங்குவதை மட்டும் செய்துவிட்டு அதிகாரத்திற்கு ஆசைகொள்ளும் கட்சிகள் மக்களை அநாதைகளாக்குகின்றன.
போராட்ட ஆற்றலாய்
அணிதிரள் தமிழா!
பலி கேட்பவனுக்கு
வலி கொடுத்திடு!!
எழட்டும்
திராவிடம்!
வெல்லட்டும்
தமிழ்த்தேசியம்!!
வீழட்டும்
பேரினவாதம்!!!
மே பதினேழு இயக்கம்.
No comments:
Post a Comment