*சிதேஷ் சி கோவிந்தின் கன்னட படம்; ஜியோ பேபியால் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.*
கேரள மாநிலத்தின் பிராந்திய சினிமாக்களில் அற்புதமான படைப்பாளர் ஜியோ பேபி வழங்கும் சிதேஷ் சி கோவிந்த் இயக்கத்தில்
" இது எந்த லோகவாய்யா" படம் வருகின்ற ஆகஸ்ட 9 தேதி வெளியாக இருக்கின்றது.
இது எந்த லோகவய்யா திரைப்படம் கன்னடமொழியில் வெளிவர இருக்கின்றது. ஏற்கனவே, மலையாள சினிமாவில் ஜியோ பேபி இயக்கத்தில் தி கேரட் இந்தியா கிட்சன் மற்றும் தி காதல் கோர் போன்ற படங்கள் விமர்சன ரீதியிலும், வணிக ரீதியிலும் பலத்தப் பாராட்டுகளைப் பெற்றன. அதோடு நின்று விடாமல், ஜியோ பேபி " இது எந்த லோகவய்யா" படத்தை வழங்குகிறார். கன்னட சினிமாவிலும் முத்திரைப் பதிக்க இருக்கின்றார்.
"இது எந்த லோகவய்யா" என்னும் படத்தின் கதையானது, நையாண்டி நாடகப் பாங்கினைக் கொண்டுள்ளது.
கன்னடம், மலையாளம், துளு, கொங்கனி மற்றும் பேரி மொழிகளின் தனித்துவமான கலவையை இந்தப் படம் கொண்டுள்ளது, இது எல்லைப் பகுதியின் வளமான கலாச்சார பன்முகத்தன்மையைக் காட்டுகிறது. இதைப் பிரதிபலிக்கும் வகையில், திரைப்படத்தின் பாடல்கள் பல மொழிக் கூறுகளைக் கொண்டுள்ளன, அவற்றின் நம்பகத்தன்மையையும் கவர்ச்சியையும் சேர்க்கின்றன.
இந்த அரிய ஹைப்பர்லிங்க் நாடகம், ஒரு கருப்பு பூனை பல குடும்பங்களின் பாதைகளைக் கடப்பதில் தொடங்குகிறது, உள்ளூர் மூடநம்பிக்கைகளால் பாதிக்கப்பட்ட மக்களிடம் ஒரு சங்கிலித் தொடர்பை ஏற்படுகிறது. அதுவே அவர்களுக்கு எதிர்பாராத விளைவுகளுக்கு வழிவகுக்கிறது.
கேராள- கர்நாடக பகுதிகளில் வாழும் மக்களின் தனித்துவமான பண்புகளையும், நுணுக்கமான சமூக வர்ணனையும் கூடிய கதையை எழுதியுள்ளார் இயக்குனர் சிதேஷ் சி கோவிந்த் . ஆகஸ்ட் மாதம் 9ஆம் தேதி அன்று கர்நாடக மாநிலம் முழுவதிலும் படம் வெளியாக இருக்கின்ற தகவல் பரவியுள்ளது.
.
No comments:
Post a Comment