Featured post

Dhanush- DSP break records with the Electrifying First Single Poyivaa Nanba from

 *Dhanush- DSP break records with the Electrifying First Single Poyivaa Nanba from Sekhar Kammula’s Bilingual Cinematic Spectacle Kuberaa* S...

Friday, 2 August 2024

விஜய் தேவாரகொண்டாவின் 'VD12'

 *விஜய் தேவாரகொண்டாவின் 'VD12' படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு*




விஜய் தேவரகொண்டா- கௌதம் தின்னனுரி- சித்தாரா என்டர்டெய்ன்மென்ட் கூட்டணியில் தயாராகும் 'VD 12' திரைப்படம்- 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28 ஆம் தேதி அன்று வெளியாகிறது.


'ரௌடி' என ரசிகர்களால் அன்புடன் போற்றப்படும் விஜய் தேவரகொண்டா தனது அசத்தலான நடிப்புத் திறமையால் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்து, இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் புகழ் பெற்றிருக்கிறார். இவர் தற்போது 'ஜெர்ஸ்ஸி' & 'மல்லி ராவா' ஆகிய படங்களின் மூலம் தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநரான கௌதம் தின்னனுரி இயக்கத்தில் உருவாகி வரும் 'VD 12 'எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதிரடி ஆக்சன் என்டர்டெய்னராக உருவாகி வரும் இந்த திரைப்படம் - அனைத்து தரப்பு ரசிகர்களையும் பரவசப்படுத்தும் வகையில் தயாராகி வருகிறது. 


இந்தப் படத்திற்கு தற்போது ' VD 12' என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கிறது. பார்வையாளர்களுக்கு இதற்கு முன் எப்போதும் இல்லாத புதுமையான அனுபவத்தை வழங்குவதற்காக தயாரிப்பாளர்கள் மிகுந்த கவனத்துடனும், ஆர்வத்துடனும் அயராது உழைத்து வருகின்றனர். 


தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு இலங்கையின் இயற்கை எழில் சூழ்ந்த இடங்களில் நடைபெற்று வருகிறது. அறுபது சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதால்.. இந்த திரைப்படத்தை எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28 ஆம் தேதி அன்று வெளியிட பட குழு தீர்மானித்திருக்கிறது. இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் ஆகஸ்ட் மாதமான இம்மாதத்திற்குள் வெளியிடப்படும். 


கிரிஷ் கங்காதரன் - ஜோமோன் டி. ஜான் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு 'ராக் ஸ்டார்' அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். தேசிய விருது பெற்ற கலைஞரான நவீன் நூலி படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். 


இந்த திரைப்படத்தை சித்தாரா என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் சூரிய தேவரா நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா ஆகியோர் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்து வருகிறார்கள். இந்த திரைப்படத்தை ஸ்ரீ காரா ஸ்டுடியோஸ் வழங்குகிறது.‌ 


ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் விஜய் தேவரகொண்டா நடித்து வரும் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் உள்ளிட்ட கூடுதல் விவரங்கள் விரைவில் தயாரிப்பாளர்களால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். 


நடிகர்கள் & தொழில்நுட்பக் குழுவினர்:


படத்தின் தலைப்பு : ( VD 12) - பெயரிடப்படாத திரைப்படம் 

நடிகர்கள் : விஜய் தேவரகொண்டா 

எழுத்து & இயக்கம் : கௌதம் தின்னனுரி 

இசை : அனிருத் ரவிச்சந்தர் 

ஒளிப்பதிவாளர்கள் : கிரிஷ் கங்காதரன் & ஜோமோன் டி. ஜான் 

படத்தொகுப்பு : நவீன் நூலி 

தயாரிப்பு வடிவமைப்பு : அவினாஷ் கொல்லா 

தயாரிப்பாளர்கள் : நாக வம்சி எஸ் & சாய் சௌஜன்யா 

தயாரிப்பு நிறுவனங்கள் : சித்தாரா என்டர்டெய்ன்மென்ட் & ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் 

வெளியீட்டு தேதி : 28 மார்ச் 2025.

No comments:

Post a Comment