Featured post

திரையரங்குகளில் சாமியாடிய பெண்கள்

 திரையரங்குகளில் சாமியாடிய பெண்கள்! 'ஓம் காளி ஜெய் காளி' வெப்சீரிஸின் சிறப்புத் திரையிடலுக்கு அற்புதமான வரவேற்பு கிடைத்துள்ளது. படத்...

Thursday, 6 March 2025

எமகாதகி படத்திற்கு பெரும் ஆதரவையும் அன்பையும் தந்த தமிழ் திரைப்பட

 எமகாதகி படத்திற்கு பெரும் ஆதரவையும் அன்பையும் தந்த தமிழ் திரைப்பட பிரபலங்கள் மற்றும் ஊடகங்களுக்கு நன்றி !! 




நைசாட் மீடியா வொர்க்ஸ் சார்பில் ஒரு தரமான திரைப்படத்தை ரசிகர்களுக்கு தர வேண்டும் என்பது தான் எங்களது ஒரே நோக்கமாக இருந்தது. இப்படத்திற்கு முன்னணி திரை பிரபலங்கள் மற்றும் ஊடகங்கள் அளித்த பெரும் ஆதரவும், அன்பும் எங்களை திக்குமுக்காடச் செய்துள்ளது.  உங்களின் அன்பால், நீங்கள் தந்த ஆதரவினால்,  எமகாதகி திரைப்படம் பெருமளவிலான  பார்வையாளர்களைச் சென்றடைந்துள்ளது.

நடிகை ரஷ்மிகா மந்தனா, ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகர் கவின், மற்றும் அஞ்சலி  ஆகியோருக்கு  நாங்கள் எங்கள் இதயப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். முழு அன்புடன் எங்கள் படத்திற்கான விளம்பரப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டதுடன்,   எங்களின் படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்த அவர்களின் அன்பு மறக்க முடியாதது. புதுமுக குழுவான எங்களுக்கு இவ்விதமான உதவிகளும் ஆதரவும் பெரும் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் தந்துள்ளது. இந்த அன்பிற்கு நாங்கள் கடமைப் பட்டுள்ளோம். 

கடந்த திங்கட்கிழமை ஊடகங்களுக்கு எமகாதகி படத்தை திரையிட்டபோது, அவர்கள் எங்களின் முதல் பார்வையாளர்களாக இருந்ததால், நாங்கள் கொஞ்சம் பதட்டத்துடனும் இருந்தோம். ஆனால் ஊடகங்களில் இருந்து கிடைத்த உண்மையான, நேர்மையான பாராட்டுக்களும், கருத்துக்களும் எங்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.  உங்கள் ஆதரவு எங்களுக்கு மிகப்பெரிய ஊக்கத்தை தந்ததோடு, எங்களுக்கு பெரும் நம்பிக்கையை அளித்தது. ஊடகங்களில் பகிரப்பட்ட உண்மையான  விமர்சனங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பரவிய பாசிட்டிவ் விமர்சனங்கள், விநியோகஸ்தர்களுக்கும் திரையிடும் இடங்களுக்கும் சென்றடைந்து, இந்த வெள்ளிக்கிழமை நல்ல திரையரங்குகளை பெற்றதன் மூலம் உறுதியாகி இருக்கிறது. 

பல திரைப் பிரபலங்கள் இப்படத்தைப் பார்ப்பதற்குத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார்கள். அவர்களது கருத்துகளை மிகுந்த ஆவலுடன் நாங்கள் எதிர்நோக்குகிறோம். ஒரு இளம், ஆர்வமிக்க குழுவாக, இந்த இனிய வார்த்தைகள், நேர்மையான விமர்சனங்கள், மற்றும் உறுதியான ஆதரவு எங்களுக்குப் பெரும் ஊக்கத்தை அளிக்கின்றன. எங்களின் நன்றியை ஒவ்வொரு ஊடகத்திற்கும் மற்றும் படத்தை பரிந்துரைக்கும் பிரபலங்களுக்கும் உரித்தாக்குகிறோம்.

தமிழ் திரையுலக பார்வையாளர்கள் நல்ல படங்களை கண்டிப்பாக கொண்டாடுவார்கள். எமகாதகி உங்கள் நேரத்திற்கு மதிப்பளிக்கக் கூடிய ஒரு திரைப்படமாக இருக்கும். நாளைய பட வெளியீட்டில்  உங்கள் அன்பான ஆதரவை தொடர்ந்து வழங்குவீர்கள் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். பெரிய திரையில் ரசிகர்கள் படத்தைக் கொண்டாடுவதைக் காண  மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறோம்.


நன்றி மற்றும் அன்புடன்,

எமகாதகி குழு மற்றும் நைசாட் மீடியா வொர்க்ஸ்.

No comments:

Post a Comment