Featured post

Wonderla Chennai to Open on December 2: A New Era of Entertainment for Tamil Nadu

 Wonderla Chennai to Open on December 2: A New Era of Entertainment for Tamil Nadu India’s first Bolliger & Mabillard (B&M) Inverted...

Sunday, 22 December 2024

தி ஓல்ட் மிர்ச்சி பிரியாணி கடையின் 6 வது கிளையை நடிகர் ஆர்யா திறந்து வைத்தார்

 *தி ஓல்ட் மிர்ச்சி பிரியாணி கடையின் 6 வது கிளையை நடிகர் ஆர்யா திறந்து வைத்தார் !!*









சென்னையின் பாரம்பரியமிக்க பிரியாணி கடையான தி ஓல்ட் மிர்ச்சி பிரியாணி கடையின் 6 வது கிளை, சென்னை அண்ணாநகரில், கோலாகலமாக துவக்கப்பட்டது. பிரபல நடிகர் ஆர்யா இக்கடையை துவக்கி வைத்து வாழ்த்துத் தெரிவித்தார். 


2009 ல் ராம்குமார், சுந்தர், காந்தினி ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்ட சென்னை துரைப்பாக்கத்தில், துவங்கப்பட்ட தி ஓல்ட் மிர்ச்சி பிரியாணி கடை, காரம் தூக்கலாக வித்தியாசமான சுவையில், தனித்துவமான பிரியாணியை வழங்கி, மக்களின் மனதில் இடம்பிடித்தது. இந்த 15 வருடங்களில் இக்கடை, துரைப்பாக்கம், தரமணி, ஆழ்வார்பேட்டை , வேளச்சேரி மற்றும் காட்டுப்பாக்கம் என 6 இடங்களில் கடை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. 


இந்நிலையில் இக்கடையின் 6 வது கிளை அண்ணாநகரில் நடிகர் ஆர்யா துவக்கி வைத்தார். 


நடிகர் ஆர்யா தெரிவித்ததாவது…

எனக்கு தி ஓல்ட் பிரியாணி ரொம்ப பிடிக்கும். அண்ணாநகர் பிரியாணிக்கு பெயர் பெற்ற இடம், இங்கு நிறைய வாடிக்கையாளர்கள் பிரியாணி சாப்பிடுவார்கள். தி ஓல்ட் பிரியாணி கடையில் பிரியாணி தான் ஸ்பெஷலே, இவர்கள் இங்கு கடையை ஆரம்பித்தது நல்ல விசயம். கண்டிப்பாக இந்தக்கடை நல்ல வெற்றியைப் பெறும். வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment