Featured post

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் வழங்கும் ‘மிஸ்டர். ஹவுஸ்கீப்பிங்' படத்தின்

 ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் வழங்கும் ‘மிஸ்டர். ஹவுஸ்கீப்பிங்' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு !!  ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில்...

Saturday, 21 December 2024

Mufasa The Lion King Movie Review

Mufasa The Lion King Movie Review 

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம சேனல் ல mufasa the lion king படத்தோட review அ தான் பாக்க போறோம். Barry Jenkins தான் இந்த படத்தை direct பண்ணிருக்காரு.

Mufasa Movie Video Review 

https://youtu.be/1leSFp-2TLs?si=Ub73Le0H_svjEkTX

 1994 ல வெளி வந்த lion king படத்தோட prequel தான் இந்த கதை. கதை ஓட ஆரம்பத்துலயே நமக்கு pride lands அ காமிக்கறாங்க. simba ஓட அப்பாவான mufusa ஓட கதையை சொல்லறது தான் இந்த படம் னே சொல்லலாம். எப்படி mufasa ஒரு அனாதையா இருந்து pride lands ஓட தலைவரா எப்படி ஆனாரு ன்றதா தான் இதுல சொல்லிருக்காங்க. இந்த கதை அ பாத்தீங்கன்னா rafikki , simba ஓட பொண்ணு kiara கிட்ட mufasa ஓட கதையை சொல்லி ஆரம்பிக்குறாரு. 



ஒரு பெரிய வெள்ளம் வருதுனால mufasa அவரோட சின்ன வயசுல தன்னோட parents அ விட்டு பிரிஞ்சு வந்துடுறாரு. அப்போ தான் இவரு takka வை சந்திக்கறாரு. இந்த taka வேற யாரும் கிடையாது lionking படத்தோட வில்லன் ஆனா scar தான். 


இவங்க ரெண்டு பேரும் ஒரு அன்னான் தம்பி மாதிரி ரொம்ப close அ பழகுறாங்க ஆனா காலம் போக போக எதிரியா மாறிடுறாங்க. இவங்களோட ஆரம்ப கால வாழக்கை எப்படி இருந்தது ஏன் இவங்களுக்குள்ள சண்டை வந்தது எப்படி mufasa அ ராஜா ஆனாரு ரொம்ப interesting அ இந்த படத்துல சொல்லிருக்காங்க. 

taka ஓட அப்பாவான Obasi க்கு mufasa வ பிடிக்காது அவரை பொறுத்த வரையும் அனாதையா இருக்கற மிருகங்கள் அ அவரோட எடத்துக்குள்ள கூட்டிட்டு வர கூடாது. அதுனால taka ஓட அம்மா Eshe தான் இவரை வளக்கறாங்க. அதுல இருந்து taka வவும் mufasa யும் ரொம்ப பாசமா பழக ஆரம்பிக்கறாங்க. 

எப்பவும் போல ஆண் சிங்கம் obesi தூங்கிட்டு இருக்கும் போது eshe தான் வேட்டைக்கு போய் எல்லா வேலையும் செய்து. சோ mufasa முழு நேரமும் taka ஓட அம்மா கூட தான் இருக்காரு. 


இதுக்கு நடுவுல தான் albino lion கூட்டத்தை சேர்ந்த kiros ன்ற ஒரு படை இங்க வருது. இவங்க கிட்ட இருந்து mufasa , taka வ பத்திரமா கொண்டு போனும் . இப்படி இவங்க ரெண்டு பேரும் போற இடம் தான் Milele . இந்த இடம் பச்சை பசேல் னு ரொம்ப அழகா ரம்மியமா இருக்கு. இங்க தான் இவங்க ரெண்டு பேரும் sarabi ன்ற பெண் சிங்கத்தோட friend ஆகுறது, அப்புறமா hornbill பறவை Zazu mandrill குரங்கு Rafiki ஓட நட்பு னு எல்லாத்தயும் காமிக்கிறாங்க. ஆனா என்னதான் taka வும் mufasa வும் ரொம்ப close அ இருந்தாலும் sarabi க்கு mufasa வ பிடிச்சி போறது அப்புறம் ஒரு கட்டத்துக்கு மேல mufasa க்கு மரியாதை கிடைக்க ஆரம்பிக்குது இதுல இருந்து taka வுக்கு mufasa வ பிடிக்காம போயிடுது.



ஒருத்தனோட வாழக்கை ல fail ஆனாலும் அதுல இருந்து எப்படி மீண்டு வந்து success ஆகுறான் ன்ற தத்துவத்தை சொல்ற மாதிரி தான் இந்த கதை அமைச்சிருக்கு னு சொல்லலாம். mufasa ஓட character அ கொண்டு வந்திருக்கிற விதம் ரொம்ப நல்ல இருந்தது. mufasa ஓட சின்ன வயசுல நடந்த பெரிய இழப்பு, அப்புறம் taka ஓட ஏற்படுற நட்பு கடைசியா ஒரு தலைவர் அ இவரு எடுக்கற முடிவுகள் னு ரொம்ப அருமையா இவரை காமிச்சிருக்காங்க. ஒரு அனாதையா இருந்து எப்படி mufasa ராஜா ஆனார் ன்ற அந்த emotional journey அ ரொம்ப அருமையா கொண்டு வந்திருக்காங்க.


white lion ஆனா kiros க்கும் obasi க்கு நடுவுல நடக்கற பிரச்சனையா இன்னும் detailed அ காமிச்சிருந்த இன்னுமே நல்ல இருந்திருக்கும். இந்த படத்தோட visuals பாக்குறதுக்கு ரொம்ப நல்ல இருந்தது. pride lands அ பாக்குறதுக்கு ரொம்ப amazing அ இருந்தது. அதுவும் savannah இடத்தை காமிக்கிறதா இருக்கட்டும் characters ஓட expressions னு எல்லாமே ரொம்ப detailed அ குடுத்திருக்கிறது இந்த படத்துக்கு பெரிய plus point னே சொல்லலாம். 


இந்த படம் dubbed version ல hindi, telugu, tamil ல  release ஆயிருக்கு . அதுலயும் பெரிய பெரிய actors தான் இந்த படத்தோட characters க்கு voice குடுத்திருக்காங்க. Telugu ல mahesh babu தான் mufasa க்கு பேசிருக்காரு. அப்புறம் brahmanandam யும் ali யும் டிமோன் and pumba க்கு voice குடுத்திருக்காங்க. Satyadev  taka க்கும் அப்புறம் Ayyappa P Sharma , kiros க்கு voice குடுத்திருக்காரு. தமிழ் ல அர்ஜுன் தாஸ் தான் mufasa க்கு பேசிருக்காரு. ashok selvan taka க்கும், robo shankar யும் singam புலி யும் டிமோன் and pumba க்கு voice குடுத்திருக்காங்க. அப்புறம் nasar kiros க்கு voice குடுத்திருக்காரு. கடைசியா hindi ல பாத்தீங்கன்னா மறுபடியும் sharukh khan தான் mufasa க்கு பேசிருக்காரு. Aryan Khan Simba வா Sanjay Mishra யும் Shreyas Talpade யும் டிமோன் and pumba க்கு voice குடுத்திருக்காங்க. Makarand Deshpande rafikki க்கும் Meiyang Chang taka க்கும் voice குடுத்திருக்காங்க. 


இந்த dubbed version cast அ வேற level ல தான் இருக்குல்ல. அந்த characters ஓட emotions அ புரிஞ்சிகிட்டு எல்லாருமே செமயா பேசிருக்காங்க னு தான் சொல்லணும். இந்த படத்தை பாக்க miss பண்ணிடாதீங்க போய்  உங்க family அண்ட் friends ஓட பாருங்க.

No comments:

Post a Comment