Featured post

குழந்தைகளுடன் யோகிபாபு மற்றும் செந்தில் கலக்கும் “குழந்தைகள்

 குழந்தைகளுடன் யோகிபாபு மற்றும் செந்தில் கலக்கும் “குழந்தைகள் முன்னேற்றக் கழகம்”  திரைப்படம், 2025  ஜனவரி 24 ஆம் தேதி திரைக்கு வருகிறது!!   ...

Sunday, 29 December 2024

விஜயகாந்த், கே.பாலச்சந்தர் இயக்கத்தில் ஹீரோவாக நடிப்பதாக இருந்தது

 விஜயகாந்த், கே.பாலச்சந்தர் இயக்கத்தில் ஹீரோவாக நடிப்பதாக இருந்தது!


கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்கம், மற்றும் தமிழ்நாடு  திரைப்படம் மற்றும் சின்னத்திரை ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் 'கவிதாலயா' பாபு தலைமையில், நடிகர் 'கலைமாமணி' பூவிலங்கு மோகன், கலை இயக்குனர் சுரேஷ், ஒளிப்பதிவாளர்கள் விக்ரமன், முத்துராஜ், சின்னத்திரை இணை இயக்குநர்கள், இணை ஒளிப்பதிவாளர்கள் மற்றும் பிஆர்ஓ கோவிந்தராஜ் ஆகியோர் கேப்டன் 

விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்தினார்கள்!


கே.பாலச்சந்தர் இயக்கிய 'சிந்து பைரவி' படத்தில், ஒரு பாடல் காட்சியில் மட்டும் விஜயகாந்த் நடித்திருந்தார். பிறகு விஜயகாந்த்தை ஹீரோவாக வைத்து கே.பாலசந்தர் ஒரு படம் இயக்குவதாக இருந்து என்ற தகவலை, கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்க பொதுச்செயலாளர் 'கவிதாலயா' பாபு தெரிவித்தார்!


பிரேமலதா விஜயகாந்த், எல்.கே.சுதீஷ், விஜய பிரபாகரன், சண்முகப் பாண்டியன், பார்த்தசாரதி ஆகியோரிடம் நடிகர் மீசை ராஜேந்திரன் அழைத்துச் சென்று அவர்களோடு சிறிதுநேரம் பேச வைத்தார்!


@GovindarajPro

No comments:

Post a Comment