Featured post

Actor Karthi honours the Agricultural Community

 *Actor Karthi honours the Agricultural Community!* *Actor Karthi’s Uzhavan Foundation recognises and honours the icons in agriculture.* *Ac...

Sunday, 15 December 2024

காதலர் தினத்தன்று வெளியாகிறது 'காதல் என்பது பொதுவுடமை ' திரைப்படம். BOFTA G.

 காதலர் தினத்தன்று வெளியாகிறது 'காதல் என்பது பொதுவுடமை ' திரைப்படம். BOFTA G. தனஞ்ஜெயன்  வெளியிடுகிறார்.

இயக்குனர் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் 

லிஜோமோல், வினித், ரோகிணி, கலேஷ், தீபா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'காதல் என்பது பொதுவுடமை' .  

மனிதர்களுக்குள் காதல் வருவது  இயல்பானதாக இருந்தாலும்  காதலுக்கென்று வரைமுறைகளை வகுத்துவைத்துள்ள இந்த சமூகத்தில்  இயல்பானதாக இருக்கும் காதலுக்குள் மிகமுக்கியமான உளவியல் சிக்கலை பேசும் படமாக உருவாகியுள்ளது 'காதல் என்பது பொதுவுடமை'

நடிகர் வினித் பல வருடங்களுக்குப்பிறகு திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். காதல் என்பது பொதுவுடமை அவரது நடிப்பில் மிக முக்கியமான படமாக இருக்கும் என்கிறார் இயக்குனர் ஜெயப்பிரகாஷ்.


ரோகிணி, லிஜோமோல் , வினித் மற்றும் பலர் நடித்திருக்கும் இந்த படம் சர்வதேச திரைப்படவிழாக்களிலும் சிறந்த வரவேற்பையும் , அனைவரும் பார்க்க வேண்டிப ஒரு முக்ககிய படம் என்ற பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.


கோவா திரைப்படவிழா, புனே திரைப்படவிழாக்களில் படம் பார்த்த அனைவரும் இந்த படத்தை பாராட்டியதோடு, இப்படிப்பட்ட உளவியல் சிக்கல்களை பேசும் படங்களை ரசிக்கும்விதமாக படமாக்கியதற்கு படக்குழுவினருக்கு வாழ்த்துக்களையும். தெரிவித்திருக்கிறார்கள்.


பிப்ரவரி 14 ல் வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தை  கிரியேட்டிவ் எண்டர்டெய்னர் & டிஸ்ட்டிபியூட்டர் (CEAD) சார்பில் G.தனஞ்ஜெயன் வெளியிடுகிறார்.




No comments:

Post a Comment