Featured post

திரெளபதி2’ படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட்!*

 *’திரெளபதி2’ படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட்!* நேதாஜி புரொடக்ஷன்ஸ் சோலா சக்ரவர்த்தி, ஜி.எம். ஃபிலிம் கார்ப்பரேஷனுடன் இணைந்து தயாரித்த 'திரௌ...

Monday, 30 December 2024

மாஸ் மகாராஜா' டாக்டர். சிவராஜ்குமார் தனது புதிய மெகா பட்ஜெட் படத்திற்காக

 *'மாஸ் மகாராஜா' டாக்டர். சிவராஜ்குமார் தனது புதிய மெகா பட்ஜெட் படத்திற்காக ADD-ONE பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் உடன் இணைகிறார்!* 



கன்னடத் திரையுலகின் பெருமையான டாக்டர். சிவராஜ்குமார் தனது ஹாட்ரிக் வெற்றியின் மூலம், தான் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். 'சூப்பர்ஸ்டார்' ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ படத்தில் தனது மாஸ் நடிப்பால் தமிழ் ரசிகர்களின் இதயங்களைக் கவர்ந்தார். பின்னர், தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அவரது திரைப்படங்கள் தற்போது தமிழ் மற்றும் பிற மொழி ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. மிக அரிதாக, நடிகர்களை அவர்கள் நடிப்பிற்காக மட்டுமல்லாது அவர்களின் இயல்புக்காகவும் நேசிக்கப்படுகிறார்கள். டாக்டர். சிவராஜ்குமார் அத்தகைய நடிகர்களில் ஒருவர். 


அவர் #MB என்ற மெகா பட்ஜெட் படத்தில் விரைவில் பணியாற்ற உள்ளார். மும்பையை சேர்ந்த ADD-ONE பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. தயாரிப்பாளர்கள் மனோஜ் பனோட் மற்றும் கெம்சந்த் காட்கி ஆகியோர் பெரிய அளவிலான நிகழ்வுகளை ஒழுங்கமைத்தவர்கள். முதல் முறையாக திரைப்படத் தயாரிப்பில் களமிறங்குகிறார்கள். அவர்களின் முதல் தயாரிப்பாக #MB திரைப்படம் உருவாகிறது. இந்தப் படத்தை, மறைந்த கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் வெளியான ’வல்லரசு’ படத்தை இயக்கிய இயக்குநர் என்.மஹாராஜன் இயக்குகிறார்.  


படத்தின் படப்பிடிப்பு 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் திட்டமிடப்பட்டுள்ளது. படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக்குழுவினர் குறித்தான விவரம் விரைவில் வெளியிடப்படும்.

No comments:

Post a Comment