Featured post

En Kadhale- Announcement of Release Date

 *En Kadhale-  Announcement of Release Date.* Sky wanders Entertainment, produced, written and directed by Jayalakshmi under the banner Sky ...

Monday, 23 December 2024

சங்ககிரி ராஜ்குமார் இயக்கத்தில் சத்யராஜ், சேரன் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் 'பயாஸ்கோப்

 *சங்ககிரி ராஜ்குமார் இயக்கத்தில் சத்யராஜ், சேரன் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் 'பயாஸ்கோப்'*



*சினிமா குறித்து எந்த அறிமுகமும் இல்லாத கிராமத்து மக்கள் எப்படி ஒரு திரைப்படத்தை உருவாக்கினார்கள் என்பதை கலகலப்பாக சொல்லும் உண்மைக் கதை*


*ஜனவரி 3 அன்று 'பயாஸ்கோப்' வெளியாகிறது*


*டீசரை ஆர்யா, சசிகுமார் வெளியிட்டனர்*


Teaser: https://youtu.be/N553oI40RYg 


பெரிதும் பாராட்டப்பட்ட 'வெங்காயம்' திரைப்படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்த இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் தனது அடுத்த படைப்பாக உருவாக்கியுள்ள படம் 'பயாஸ்கோப்'. 25 டாட்ஸ் கிரியேஷன்ஸ் சார்பில் சந்திர சூரியன், பிரபு சுப்பிரமணி, பெரியசாமி தயாரித்துள்ள இப்படம் ஜனவரி 3 அன்று வெளியாகிறது. டீசரை நடிகர்கள் ஆர்யா மற்றும் சசிகுமார் வெளியிட்டனர். 


சினிமா குறித்து எதுவும் தெரியாத கிராமத்து மக்கள் திரைப்படம் எடுக்கும் கலகலப்பான உண்மைக் கதையை திரையில் சொல்லும் 'பயாஸ்கோப்' திரைப்படத்தில் சத்யராஜ் மற்றும் சேரன் சிறப்பு தோற்றத்தில் நடிக்க, சங்ககிரி ராஜ்குமார், சங்ககிரி மாணிக்கம் முக்கிய பாத்திரங்களில் தோன்றுகின்றனர். மேலும், இந்த உண்மைக் கதையில் அசலான கதை மாந்தர்களே அவரவர் வேடங்களை ஏற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 


'பயாஸ்கோப்' குறித்து பேசிய இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார், "ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்து நான் 'வெங்காயம்' திரைப்படத்தை எப்படி எடுத்தேன், அதில் சந்தித்த சவால்கள் என்ன, அந்த திரைப்படம் ஏற்படுத்திய தாக்கங்கள் எத்தகையவை என்பதை வெளிப்படுத்தும் படம் தான் 'பயாஸ்கோப்'. 'வெங்காயம்' திரைப்படம் உருவான கதையை ஆவணப்படமாக எடுக்க வேண்டும் என்று இயக்குநர் மிஸ்கின் உள்ளிட்ட பலர் தெரிவித்திருந்தனர். அதன் விளைவாக 'பயாஸ்கோப்' திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறோம்," என்றார். 


தொடர்ந்து பேசிய சங்ககிரி ராஜ்குமார், "பயாஸ்கோப் திரைப்படம் ரசிகர்களை கவரும் வகையில் உருவாகியுள்ளது. சினிமாவைப் பற்றி எந்த அறிமுகமும் இல்லாமல் கிராமத்து மக்கள் எப்படி ஒரு திரைப்படத்தை உருவாக்கினார்கள் என்பதை கலகலப்பாகவும் படம் முழுக்க நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறோம். இப்படத்தை எடுத்த அனுபவம் அலாதியானது," என்றார்.


'பயாஸ்கோப்' திரைப்படத்திற்கு தாஜ்நூர் இசையமைக்க, முரளி கணேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் வெளியீட்டுக்காக புரொடியூசர் பஜார் நிறுவனத்துடன் சங்ககிரி ராஜ்குமார் கைகோர்த்துள்ளார். படத்தின் ஓடிடி வெளியீட்டு உரிமையை ஆஹா பெற்றுள்ளது. 


***

No comments:

Post a Comment