Featured post

En Kadhale- Announcement of Release Date

 *En Kadhale-  Announcement of Release Date.* Sky wanders Entertainment, produced, written and directed by Jayalakshmi under the banner Sky ...

Saturday, 21 December 2024

யோகி' பாபு, ரூபேஷ் ஷெட்டி, வர்ஷா விஸ்வநாத் ஆகியோர் நடிப்பில் தயாராகி

 *'யோகி' பாபு, ரூபேஷ் ஷெட்டி, வர்ஷா விஸ்வநாத் ஆகியோர் நடிப்பில் தயாராகி வரும் புதிய திரைப்படம் சன்னிதானம் (P.O) 2025 - ஆம் ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகவுள்ளது!*






'தூது மதிகே' போன்ற திரைப்படங்களை தயாரித்த கன்னட தயாரிப்பு நிறுவனமான 'சர்வதா சினி கராஜ்' மற்றும் மலையாள திரை உலகில் வீரப்பன், சூர்யவம்சி, வாங்க்கு(தயாரிப்பு), நல்ல சமயம்(வெளியீடு), விரைவில் வெளியாகவுள்ள ருதிரம்(படைப்பாக்க தயாரிப்பு) போன்ற திரைப்படங்களை தயாரித்த முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான 'ஷிமோகா கிரியேஷன்ஸ்' உள்ளிட்ட நிறுவனங்கள் தயாரிக்க, அமுதா சாரதியின் வசனம் மற்றும் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் 'சன்னிதானம் (P.O)'. இத்திரைப்படத்தை மது ராவ், V விவேகானந்தன் மற்றும் ஷபீர் ஃபடான் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.


இத்திரைப்படத்தில் 170-க்கும் மேற்பட்ட படங்களில் பலதரப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்து தமிழ்த் திரையுலகில் தனக்கென முத்திரை பதித்திருக்கும் 'யோகி'பாபு, கன்னட திரையுலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான ரூபேஷ் ஷெட்டி மற்றும் வர்ஷா விஸ்வநாத் ஆகிய மூவரும் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இவர்களுடன் சித்தாரா, பிரமோத் ஷெட்டி, 'மூணாறு' ரமேஷ், கஜராஜ், ராஜா ருத்ரகொடி, சாத்விக், அஷ்வின் ஹாசன், வினோத் சாகர், 'கல்கி' ராஜா, விஷாலினி, தாஷ்மிகா லக்ஷ்மன் மற்றும் மது ராவ் உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள்.


இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் சபரிமலை ஐயப்பன் சன்னிதானம், பம்பை, எருமேலி போன்ற இடங்களிலும், தமிழ்நாட்டில் சென்னை மற்றும் பொள்ளாச்சியிலும் விறுவிறுப்பாக நடைபெற்று இறுதி கட்டத்தை எட்டியுள்ளதோடு, தயாரிப்புக்கு பிந்தைய பணிகளும் நடைபெற்று வருகின்றன.


சபரிமலைக்கு பயணிக்கும் ஐயப்ப பக்தர்கள் செல்லும் வழியில் அவர்கள் எதிர்பாராத சம்பவம் ஒன்று நிகழ்கிறது. அதனால் அவர்கள் எதிர்கொள்ளும் நிகழ்வுகளே இத்திரைப்படமாக உருவாகியுள்ளது. சன்னிதானம் (P.O) மனித உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டு, கதைக்கு முக்கியத்துவம் உள்ள விதத்தில்  உருவாகியுள்ளது.


இத்திரைப்படத்திற்கு கதை மற்றும் திரைக்கதை அஜினு ஐயப்பன் எழுத, அருண்ராஜ் இசையமைக்கிறார். படத்தின் ஒளிப்பதிவாளராக வினோத் பாரதியும்,  படத்தொகுப்பாளராக பி.கே-வும் பணியாற்றுகிறார்கள். விஜய் தென்னரசு கலை இயக்கத்தை மேற்கொள்ள, மெட்ரோ மகேஷ் சண்டை பயிற்சியை வடிவமைக்க, ஜாய் மதி நடனத்தையும் கவனிக்கிறார்கள். நடராஜ் ஆடை வடிவமைப்பாளராகவும், மோகன் ராஜன் பாடலாசிரியராகவும் பணிபுரிந்துள்ளார்கள்.


சன்னிதானம் (P.O) திரைப்படம் தமிழ், கன்னடம், துளு, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பான் இந்தியத் திரைப்படமாக தயாராகி வருகிறது; 2025 கோடை விடுமுறைக்கு வெளியீட முடிவு செய்யப்பட்டுள்ளது. படத்தின் வெளியீட்டுத் தேதி அதிகாரப் பூர்வமாக விரைவில் அறிவிக்கப்படும்.


*படக்குழு:*


'யோகி'பாபு

ரூபேஷ் ஷெட்டி

சித்தாரா

பிரமோத் ஷெட்டி

வர்ஷா விஸ்வநாத்

'மூணாறு' ரமேஷ்

கஜராஜ்

ராஜா ருத்ரகொடி

சாத்விக்

அஷ்வின் ஹாசன்

வினோத் சாகர்

'கல்கி' ராஜா

விஷாலினி

தாஷ்மிகா லக்ஷ்மன்

மது ராவ்


*தொழில்நுட்ப குழு:*


வசனம் மற்றும் இயக்கம்: அமுதா சாரதி

கதை மற்றும் திரைக்கதை: அஜினு ஐயப்பன்

தயாரிப்பாளர்கள்: மது ராவ், V விவேகானந்தன் மற்றும் ஷபீர் ஃபடான்

தயாரிப்பு: சர்வதா சினி கராஜ் மற்றும் ஷிமோகா கிரியேஷன்ஸ்

ஒளிப்பதிவு: வினோத் பாரதி

இசை: அருண்ராஜ்

படத்தொகுப்பு: பி.கே

கலை இயக்கம்: விஜய் தென்னரசு

துணை இயக்குனர்கள்: ஷக்கி அஷோக் மற்றும் சுஜேஷ் அன்னியப்பன்

சண்டைப் பயிற்சி: 'மெட்ரோ' மகேஷ்

பாடல்கள்: மோகன் ராஜன்

நடன இயக்கம்: ஜாய் மதி

ஆடை வடிவமைப்பு: நடராஜ்

ஒப்பனை: C ஷிபுகுமார்

தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர்கள்: ரிச்சர்ட் மற்றும் D. முருகன்

நிர்வாக தயாரிப்பு: விலோக் ஷெட்டி

இணை இயக்குனர்கள்: முத்து விஜயன், ராஜா சபாபதி, ராஜா ராம்

உதவி இயக்குனர்கள்: அக்னி மகேந்திரன், சரவணன் ஜீவா

விளம்பர வடிவமைப்பு: VM ஷிவகுமார்

படங்கள்: ரெனி மோன்

மக்கள் தொடர்பு: ரியாஸ் K அஹ்மத் மற்றும் பாரஸ் ரியாஸ்

No comments:

Post a Comment