Featured post

En Kadhale- Announcement of Release Date

 *En Kadhale-  Announcement of Release Date.* Sky wanders Entertainment, produced, written and directed by Jayalakshmi under the banner Sky ...

Monday, 23 December 2024

மதுரை வெற்றியைத் தொடர்ந்து சென்னையில் தடம்பதிக்கிறது நம்ம ஊரு

 *மதுரை வெற்றியைத் தொடர்ந்து சென்னையில் தடம்பதிக்கிறது நம்ம ஊரு வைப்ஸ்..!*








*சென்னையில் முதல் முறையாக நம்ம ஊரு வைப்ஸ் – எலைட் கோலாகல புத்தாண்டு கொண்டாடம்..!*


* நேரடி இசை மற்றும் நடனத்துடன் பிரமாண்ட ஏற்பாடு

* கிறிஸ்துமஸ் சலுகையாக *ஒரு டிக்கெட் வாங்கினால் ஒரு டிக்கெட் இலவசம்*

* விவி எண்டர்டெய்ன்மெண்ட்ஸ் விழாவில் திரை  நட்சத்திரங்கள் பங்கேற்கிறார்கள்


சென்னை, டிசம்பர் 23, 2024: நடிகர் விஜய் விஷ்வாவின் விவி எண்டர்டெய்ன்மெண்ட்ஸ் நிறுவனம் சார்பில் மதுரையில் நவம்பர் மாதம் நடைபெற்ற நம்ம ஊரு வைப்ஸ் நிகழ்ச்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து சென்னையில் முதல் முறையாக மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் நேரடி இசை மற்றும் நடன நிகழ்ச்சி, புத்தாண்டு கொண்டாட்டத்துடன் நடைபெற உள்ளது. நம்ம ஊரு வைப்ஸ் - எலைட் என்ற பெயரில் 31ம் தேதி மாலை 5 மணி முதல் நள்ளிரவு வரை நடைபெறும் இந்த வண்ணமயமான நிகழ்ச்சியில் திரைத்துறை நட்சத்திரங்கள் பங்கேற்று உற்சாகப்படுத்தவுள்ளனர்.


இன்றைய வேகமான உலகில், மன அழுத்தம் அன்றாட வாழ்வில் ஒரு பொதுவான அங்கமாகிவிட்டது. வேலை, தனிப்பட்ட சவால்கள் அல்லது வெளிப்புற அழுத்தங்கள் ஆகியவற்றால் ஏற்பட்டாலும், மன அழுத்தம் நமது உடல் மற்றும் மன நலனை பாதிக்கிறது. ஆனால் மன அழுத்தத்தைச் சமாளிப்பது மட்டுமல்லாமல் இயற்கையாகவும் திறம்படமாகவும் குறைக்க ஒரு வழி இருந்தால் என்ன செய்வது?


மன அழுத்தத்திற்கு அருமருந்தாக அமையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளா நேரடி இசை மற்றும் நடன நிகழ்ச்சி விவி எண்டர்டெய்ன்மெண்ட்ஸ் சார்பில் இந்தியாவிலேயே முதல் முறையாக நம்ம ஊரு வைப்ஸ் என்ற பெயரில் மதுரையில் கடந்த நவம்பர் மாதம் நடந்தது. மதுரை அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த கோலாகல கொண்டாட்டத்தில் லைவ் மியூசிக், நடனம், தாரை தப்பட்டை, தூள், செண்டமேளம் உள்ளிட்டவை இடம்பெற்றன, இதில் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், குடும்பத்தினர் என ஆயிரம் பேர் வரை பங்கேற்று உற்சாக நடனமாடி மகிழ்ந்தனர். 


மதுரை வெற்றியைத் தொடர்ந்து சென்னையில் முதல் முறையாக மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் நேரடி இசை மற்றும் நடன நிகழ்ச்சி, புத்தாண்டு கொண்டாட்டத்துடன் நடைபெற உள்ளது. நம்ம ஊரு வைப்ஸ் - எலைட் என்ற பெயரில் 31ம் தேதி மாலை 5 மணி முதல் நள்ளிரவு வரை நடைபெறும் இந்த வண்ணமயமான நிகழ்ச்சியில் திரைத்துறை நட்சத்திரங்கள் பங்கேற்று உற்சாகப்படுத்தவுள்ளனர்.  சென்னை, மகாபலிபுரம் அருகே கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள மில்லினியர் பார்க் ரெசார்ட்டில் நடைபெற உள்ள இந்த கோலாகல நிகழ்ச்சியில் பங்கேற்க நபர் ஒருவருக்கு ரூ.3999, ஜோடியாக வருவோருக்கு ரூ.6999 என கட்டணம் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அனுமதி இலவசம். கிறிஸ்துமஸ் சலுகையாக வரும் 25ம்தேதி ஒரு நாள் மட்டும் ஒரு டிக்கெட் வாங்கினால் ஒரு டிக்கெட் இலவசம் என்ற சலுகையும் உள்ளது. 


இந்த கோலாகல கொண்டாட்டத்தில்  பேஷன் ஷோ, லைவ் மியூசிக், நடனம், தாரை தப்பட்டை, தூள், செண்டமேளம், வானவேடிக்கை என வண்ணமயமான பல சிறப்பம்சங்கள் இடம்பெற உள்ளது. அதோடு அன்லிமிடட் இரவு உணவையும் உண்டு மகிழலாம். புத்தாண்டை உற்சாகத்தோடு கொண்டாடி மகிழவும், வரவேற்கவும், மனதிற்கும், உடலுக்கும் புத்துணர்வு கிடைக்கவும் இந்த நிகழ்ச்சி உதவும்.


டிக்கெட்டுகளை தி டிக்கெட் 9 தளத்தில் 


https://www.theticket9.com/event/namma-ooru-vibes-elite-new-year-party-2025 


என்ற தளத்தில் வாங்கிக் கொள்ளலாம்.


இந்த புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில் கே.எஸ்.கே. மீடியா, ஆன்லைன் கிங்க்ஸ், ஏ.எச். குளோபல் விங்க்ஸ், ரேடியோ சிட்டி, டிக்கெட்9, எஸ்2 டிக்கெட்ஸ், தமிழ் கலைக்கூடம் மற்றும் கே.ஒய்.என்., ஆகிய நிறுவனங்களும் தங்களது பங்களிப்பை வழங்குகின்றன. 


இந்த நிகழ்ச்சி குறித்து விவி எண்டர்டெய்ன்மெண்ட்ஸ் நிறுவனர் நடிகர் விஜய் விஷ்வா கூறுகையில், மதுரை வெற்றியைத் தொடர்ந்து சென்னை மக்களுக்கு இந்த நிகழ்ச்சியை கொண்டு வந்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். பாரம்பரிய இசை மற்றும் நடனத்தின் தாளங்கள், மெல்லிசைகள் மற்றும் அசைவுகள் சமூகத்தின் கலாச்சார பாரம்பரியத்துடன் ஆழமாக இணைக்கப்பட்டுள்ளன. இந்த கலை வடிவங்கள் பல நூற்றாண்டுகளாக பொழுதுபோக்குக்காக மட்டுமல்ல, ஆன்மீக மற்றும் உணர்ச்சி சிகிச்சைக்காகவும் உருவாகியுள்ளன. கிளாசிக்கல் நடன நிகழ்ச்சியின் மென்மையான ஊசலாடினாலும் அல்லது நாட்டுப்புற இசைக் குழுவின் தீவிரமான தாளத்தின் மூலமாகவோ, பாரம்பரிய இசை மற்றும் நடனம் தளர்வை ஊக்குவிக்கும், பதட்டத்தைக் குறைக்கும் மற்றும் சமநிலையை மீட்டெடுக்கும் நடைமுறைகளில் ஆழமாக வேரூன்றியுள்ளன. இந்த நிகழ்வில் கலந்துகொள்வதன் மூலம், நேரடி, பாரம்பரிய நிகழ்ச்சிகள் எவ்வாறு மன அழுத்தத்தைக் குறைக்கலாம், மனநிலையை அதிகரிக்கலாம் மற்றும் முழுமையான ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம் என்பதை பங்கேற்பாளர்கள் நேரடியாக அனுபவிப்பார்கள். பாரம்பரிய நேரடி இசையும் நடனமும் ஒன்றிணைந்து மன அழுத்தத்தைக் குறைக்கும் ஒரு குணப்படுத்தும் இடத்தை உருவாக்கும் மறக்க முடியாத அனுபவத்திற்கு எங்களுடன் சேருங்கள். துடிப்பான, ஆத்மார்த்தமான நிகழ்ச்சிகள் மூலம், உணர்வுபூர்வமான வெளியீடு மற்றும் தளர்வு பயணத்தில் நாங்கள் உங்களுக்கு வழிகாட்டுவோம். மனதையும், உடலையும், ஆன்மாவையும் குணப்படுத்த பல நூற்றாண்டுகளாக பயிரிடப்பட்டு வரும் இசை மற்றும் நடனத்தின் மாற்றும் சக்தியை அனுபவிக்கும் வாய்ப்பை தவறவிடாதீர்கள், என்றார்.



மேலும் விபரங்கள் மற்றும் டிக்கெட்டுகளுக்கு 9384788761, 6383379628, 9655983111, 8056610105 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment