Featured post

Pottuvil Asmin Recites Tribute Poem Before Vairamuthu at “Miller” Film Launch in Jaffna

 Pottuvil Asmin Recites Tribute Poem Before Vairamuthu at “Miller” Film Launch in Jaffna The launch of the Tamil film “Miller” in Jaffna wit...

Monday, 16 December 2024

Week end இல் வேகமெடுத்து பாக்ஸ் ஆஃபிஸ் - இல் கலக்கும் மிஸ் யூ...

 *Week end இல் வேகமெடுத்து பாக்ஸ் ஆஃபிஸ் - இல் கலக்கும் மிஸ் யூ...*










என்.ராஜசேகர் இயக்கத்தில், சித்தார்த், ஆஷிகா ரங்கநாத் நடிப்பில் வெளியான மிஸ் யூ திரைப்படத்தை 7 மைல்ஸ் பெர் செகண்ட் நிறுவனத்தின் சாமுவேல் மேத்யூ தயாரித்து இருக்கிறார்.. 


டிசம்பர் 13ஆம் தேதி, வெளியான மிஸ் யூ திரைப்படத்தின் முதல்நாள் காட்சிகள் ஓரளவு மக்களால் திரையரங்குகளில் பார்க்கப்பட்டது. ஆனால் பார்வையாளர்களுக்கு இத்திரைப்படம் கொடுத்த அனுபவம், அவர்களை நேர்மறையாக விமர்சனம் செய்ய வைத்தது.. பார்த்தவர்கள் கொண்டாடியதுடன்,  குடும்பத்துடன் பார்க்க இத் திரைப்படம் நல்ல தேர்வு என ஆதரவு தெரிவித்தனர். பெரிய அளவில் ரசிகர்களின் ஆரவாரக் கொண்டாட்டத்துடன் இத்திரைப்படம் முதல் நாள் முதல் காட்சி வெளியாகவில்லை என்றாலும்,  தற்பொழுது தரமான திரைப்படம் என்னும் மதிப்புடன் வார இறுதி நாட்களில் முன்பதிவை மும்மடங்கு பெருக்கி இருக்கிறது. 


குறிப்பாக, ஒட்டு மொத்த குடும்பமும் ஒன்றாக அமர்ந்து பார்த்து ரசிக்கும் படியான திரைப்படங்கள் வெளியாகி சில காலம் ஆகிவிட்டது. அந்தக் குறையை நீக்கி இருக்கிறது மிஸ் யூ திரைப்படம்.. திரையரங்கில் ஒட்டு மொத்த குடும்பமும் ஒன்றாக அமர்ந்து, பார்த்து, ரசித்து, சிரித்து, மகிழ்ச்சியுடன் திரையரங்கில் இருந்து வெளியேற இது ஒரு நல்ல வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. அப்படி அந்த குடும்பங்கள் பகிரும் வார்த்தைகள் தான் மிஸ் யூ திரைப்படத்தின் வெற்றி ஆக மாறி இருக்கிறது. வித்தியாசமான காதல் கதை, அதற்கேற்ற திரைக்கதை, சிறப்பான நகைச்சுவை, ஆழமான வசனங்கள், அருமையான இசை என எல்லா அம்சமும் மிஸ் யூ படத்தை கொண்டாடும் காரணிகளாக மாறியுள்ளன. 


மிஸ் யூ திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான 7 மைல்ஸ் பெர் செகண்ட், பொதுமக்களின் நேர்மறையான விமர்சனங்களால் ஊக்கம் பெற்று, நம்பிக்கையுடன் மிஸ் யூ திரைப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்த முயற்சி வரும் நாட்களில் மேலும் அதிகமாக,  திரையரங்குகளை நோக்கி ரசிகர்களை ஈர்க்கும் எனும் நம்பிக்கையை கொடுத்துள்ளது. 


திரைத்துறை பின்னணியில் இயங்கி வருபவர்கள்  "மிஸ் யூ" படம் வரும் வாரங்களில் இன்னும் அதிகமாக,  திரையரங்குகளை நோக்கி பார்வையாளர்களை ஈர்க்கும் என கணித்துள்ளனர்.  தற்போதைய சூழ்நிலையில் குடும்ப உறவுகளை மைப்படுத்திய,  ஒரு ஃபீல் குட் காதல் திரைப்படம் வெளியாகி உள்ளது என்றால் அது மிஸ் யூ மட்டுமே. அதிலும்,  நகைச்சுவை, காதல், மனத்தைத் தொடும் காட்சியமைப்புகள் மட்டுமல்லாமல் நல்ல கதையம்சத்தையும் கொண்டுள்ளது மிஸ் யூ படம்.  அப்படிப்பட்ட ஒரு நல்ல படைப்பிற்கு ரசிகர்களின் ஆதரவு கிடைத்தால் அது எப்படிப்பட்ட வெற்றியை கொடுக்கும் என்பதை மிஸ் யூ திரைப்படம் உணர்த்தியுள்ளது. 


தற்போது வெளியான படங்களில் ஒரு ஆச்சரியத்தக்க வெற்றியை தனதாக்கியிருக்கிறது மிஸ் யூ திரைப்படம்.

No comments:

Post a Comment