Featured post

En Kadhale- Announcement of Release Date

 *En Kadhale-  Announcement of Release Date.* Sky wanders Entertainment, produced, written and directed by Jayalakshmi under the banner Sky ...

Friday, 27 December 2024

திருக்குறள் " படத்திற்காக இசை ஞானி இளையராஜா

 " திருக்குறள் " படத்திற்காக இசை ஞானி இளையராஜா வித்தியாசமான இசையை கொடுத்திருப்பதாக படக்குழுவினர் பெருமிதம் 


பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை ‘காமராஜ்’ என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரித்த ‘ரமணா கம்யூனிகேஷன்ஸ்’ நிறுவனம், தற்போது மிகப் பிரம்மாண்டமாகத் ‘திருக்குறள்’ என்ற திரைப்படத்தைத் தயாரித்துள்ளது.


அறம் சார் வாழ்வியலை மானுடர்க்கு போதிப்பதில் உலகில் முன்னிலை வகிக்கும் நூல் திருக்குறள். திருக்குறளின் முப்பாலை மையக் கருவாகக் கொண்டு, இப்படத்திற்கான திரைக்கதை எழுதப்பட்டுள்ளது.

படைப்பினூடாக படைப்பாளியைக் கண்டடையும் முயற்சியில் திருவள்ளுவரும் இப்படத்தில் ஒரு பாத்திரமாக வருகிறார். கூடவே வாசுகியும், அதோடு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழரின் வாழ்வியலும் இத்திரைப்படத்தில் முக்கிய அங்கம் வகிக்கிறது.


காதலோடு, வீரமும் தமிழர் வாழ்வில் பிரிக்க முடியாத ஒன்றாகும். அன்றைய தமிழரின் வீரத்தைப் பறைசாற்றும் போர்க்களக் காட்சிகளும் மிகுந்த பொருட்செலவில் படமாக்கப்பட்டுள்ளன. 


இசை கோப்பு பணிகள் முடிந்துவிட்ட நிலையில் இசைஞானி இளையராஜாவை சந்தித்து விட்டு இயக்குனர் பாலகிருஷ்ணன் பகிர்ந்தவை....


இத்திரைப்படத்தைப் பார்த்த இசைஞானி இளையராஜா, உடனடியாக இசையமைக்க இசைவு தெரிவித்தார்.


அதன்படி இரண்டு பாடல்களை அவரே எழுதி இசையமைத்திருக்கிறார். 


தற்போது அனைத்து இசைக் கோர்ப்பு பணிகளையும் முடித்துவிட்டு என்னை அழைத்தார்..   


" முல்லைப் பூவின் வாசம் "   பாடலுக்கு இதுவரை நானே இசையமைக்காத, தொடாத ஒரு வித்தியாசமான ட்யூனை பயன்படுத்தி இருக்கிறேன் என்று சொல்லி அந்த பாடலை எனக்கு காண்பித்தார்.

அது மிகவும் சிறப்பாக இருக்கிறது அந்தப் பாடல் நிச்சயம் 2025 ஆம் வருடத்தின் சிறந்த பாடலாக ஒலிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை  என்றார் இயக்குனர் A.J. பாலகிருஷ்ணன்.


மற்றும் படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் ,இயக்குனர் என படக்குழுவினரை நேரில் அழைத்து வாழ்த்தினார் இசைஞானி இளையராஜா.


ஜி.யூ.போப் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த பின்பு தான், திருக்குறள் உலக அளவில் அறிஞர்களின் கவனத்தை ஈர்த்தது. அதுபோல் இந்நிகழ்விற்குப் பின் சர்வதேச அளவில் உலக மக்களின் கவனத்தையும் நிச்சயம் இந்த திருக்குறள் படம் ஈர்க்கும்.


இப்படத்தில் வள்ளுவராக கலைச்சோழன், வாசுகியாக தனலட்சுமி, பாண்டிய மன்னனாக ஓ.ஏ.கே.சுந்தர், நக்கீரராக இயக்குநர் சுப்ரமணிய சிவா, புலவர் பெருந்தலைச்சாத்தனாக கொட்டாச்சி ஆகியோரோடு, குணாபாபு, பாடினி குமார் மற்றும் முக்கிய நடிக, நடிகையர் பலர் நடித்துள்ளனர்.


இப்படத்தின் கலை இயக்குநராக சுரேஷ் கலேரியும், ஆடைவடிவமைப்பாளராக சுரேஷ் குமாரும் பணியாற்றியுள்ளனர். செம்பூர்.கே.ஜெயராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுத எட்வின் சகாய் ஒளிப்பதிவு செய்துள்ளார்.


இத்திருப்பணியில் மதுரை டி.பி.ராஜேந்திரன் முதன்மைப் பங்களிப்புச் செய்துள்ளார். வி.ஐ.டி.வேந்தர் கோ.விஸ்வநாதன் தலைமையிலான  தமிழியக்கமும் இப்பணியில் இணைந்துள்ளது.   ரமணா கம்யூனிகேஷன்ஸ் இத்திரைப்படத்தைத் தயாரித்துள்ளது.


காமராஜ் படத்தை இயக்கிய ஏ.ஜெ.பாலகிருஷ்ணன் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


செய்தி தொடர்பு

புவன் செல்வராஜ்

No comments:

Post a Comment