Featured post

Puri Connects Collaborate With JB Motion Pictures For Vijay Sethupathi, Samyuktha, Puri Jagannadh, Charmme Kaur’s Most

 *Puri Connects Collaborate With JB Motion Pictures For Vijay Sethupathi, Samyuktha, Puri Jagannadh, Charmme Kaur’s Most Ambitious Pan India...

Saturday, 14 December 2024

கேம் சேஞ்சர் பட முன் வெளியீட்டு நிகழ்வில், பிளாக்பஸ்டர் கூட்டணி ராம்சரண் - சுகுமார்

 *கேம் சேஞ்சர் பட முன் வெளியீட்டு நிகழ்வில், பிளாக்பஸ்டர் கூட்டணி ராம்சரண் - சுகுமார் ஒன்றாக தோன்றவுள்ளனர் !*



*பட முன் வெளியீட்டு நிகழ்வில், மாஸ்டர் & கேம் சேஞ்சர் இணைந்து தோன்றவுள்ளனர்*


குளோபல் ஸ்டார் ராம் சரண், பிரம்மாண்ட இயக்குநர்  ஷங்கருடன், கேம் சேஞ்சர் படத்திற்காக முதல்முறையாக இணைந்துள்ளார். இப்படத்தின் புரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இம்மாதம் 21ஆம் தேதி அமெரிக்காவின் டல்லாஸ் நகரில், வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்ச்சியை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். 


இந்த முன் வெளியீட்டு நிகழ்ச்சியில், மாஸ்டர் ஃபிலிமேக்கர் சுகுமார், சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். சுகுமார் மற்றும் ராம் சரண் கூட்டணி கடந்த காலத்தில் “ரங்கஸ்தலம்” எனும் கிளாசிக் பிளாக்பஸ்டரை வழங்கினார்கள். கிராமப் பின்னணியில் உருவாகியிருந்த, இந்த ஆக்சன் படம்,  அனைத்து தரப்பிலும் பெரும் பாராட்டுக்களைப் பெற்றது. இந்தக் கூட்டணி விரைவில் தங்கள் இரண்டாவது படமான RC 17 க்காக இணையவுள்ளனர். இப்போதே இது இந்திய சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும்  திரைப்படங்களில் ஒன்றாகியுள்ளது.


“கேம் சேஞ்சர்” அமெரிக்காவில் பிரமாண்டமான முன் வெளியீட்டு நிகழ்வைக் நடத்தும் முதல் இந்தியத் திரைப்படமாகும். இந்த முன் வெளியீட்டு நிகழ்வில் ஏராளமான ரசிகர்களுடன், படத்தின் நடிகர்கள் மற்றும் குழுவினர் கலந்து கொள்ளவுள்ளனர்.


கேம் சேஞ்சர் அரசியல் பின்னணியை மையமாகக் கொண்ட அதிரடி ஆக்சன் திரைப்படமாகும். இப்படத்தில் ராம் சரண் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். ஒரு பாத்திரத்தில் ஐஏஎஸ் அதிகாரியாகவும், மற்றொன்றில் சமூக அக்கறைகொண்ட இளைஞனாகவும் தோன்றுகிறார். 


இப்படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடித்துள்ளார். ஜெயராம், நவீன் சந்திரா, எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.


முன்னணி இசையமைப்பாளர் தமன் எஸ் இசையமைத்துள்ளார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ், தில் ராஜு புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் ஆகியவற்றின் சார்பில் தில் ராஜு மற்றும் சிரிஷ் இப்படத்தை தயாரித்துள்ளனர். கேம் சேஞ்சரின் ஆடியோவை சரிகமா நிறுவனம்  வெளியிடுகிறது.


கேம் சேஞ்சர் திரைப்படம் ஜனவரி 10, 2025 அன்று தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் பிரமாண்டமாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. தமிழில் எஸ்.வி.சி மற்றும் ஆதித்யராம் மூவீஸ் தயாரித்துள்ள இப்படத்தை ஏஏ பிலிம்ஸ் இந்தியில் வெளியிடவுள்ளது. வட அமெரிக்காவில், ஷ்லோகா என்டர்டெயின்மென்ட்ஸ் மூலம் இந்தப் படம் மிகப்பெரிய அளவில் வெளியிடப்படவுள்ளது.

No comments:

Post a Comment