Featured post

Desiya Thalaivar Movie Review

Desiya Thalaivar Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம தேசிய தலைவர் படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படம் இன்னிக்கு தான் release ஆயிருக...

Tuesday, 17 December 2024

மலையாளத் திரைப்படமான ருதிரத்தில் ஜேஸன் என்ற கதாபாத்திரத்தின் மூலம்

 *மலையாளத் திரைப்படமான ருதிரத்தில் ஜேஸன் என்ற கதாபாத்திரத்தின் மூலம் கவர்ந்திழுக்கும் புதுவரவாக மாறியுள்ளார் பி கே பாபு!*






மலையாள சினிமாவில் நினைவு கூறத்தக்க புது வரவான பி. கே. பாபு டிசம்பர் 13,2024-அன்று திரைக்கு வந்த "ருதிரம்" திரைப்படத்தில் ஜேசன் என்ற கதாபாத்திரத்தில் அவர் கொடுத்த அசத்தலான நடிப்பால் கவனம் ஈர்த்துள்ளார். இந்த படத்தை ஜிஷோ லான் ஆண்டனி இயக்கியிருக்கிறார், அதில்  அபர்ணா பாலமுரளி மற்றும் ராஜ் பி ஷெட்டி முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படம் வெளியான பிறகு விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது.


ஜேசனாக பி. கே. பாபு அளித்த அழுத்தமான மற்றும் ஆழமான நடிப்பு, "ருதிரம்" திரைப்படத்தின் சிறந்த அம்சங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. தனது பாணியை கொண்டு கதாபாத்திரத்திற்கு உயிரூட்டிய அவர், அவரது இயல்பான நடிப்பும் திரையுலகில் பெரும் பாராட்டுகளை பெற்றிருக்கிறது.  


தன் முதல் படத்தைக் குறித்து பி. கே. பாபு கூறியதாவது: "அபர்ணா பாலமுரளி, ராஜ் பி ஷெட்டி போன்ற அபாரமான நடிகர்களுடன் திரையை பகிர்ந்து கொள்வதுடன் திறமையான குழுவுடன் பணிபுரிய கிடைத்த வாய்ப்பு, எனது கனவு பலித்த தருணம்.  ரசிகர்களிடமிருந்து வரும் ஆதரவும் நன்றியுணர்வும் எனக்கு மகிழ்ச்சியளிக்கின்றன."  


அதீத உணர்ச்சிகளுடன் கூடிய திகில் மற்றும் மனம் ஈர்க்கும் கதையம்சங்களை மையமாகக் கொண்ட "ருதிரம்,"  அழுத்தமான திரைக்கதை, வலுவான நடிப்பு, கவர்ந்திழுக்க கூடிய ஒளிப்பதிவின் மூலம் சிறந்த மலையாள படங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.  


திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி பாராட்டுக்களை பெற்றுக் கொண்டிருக்கும் "ருதிரம்" படத்தின் மூலம், பி. கே. பாபு மலையாள சினிமாவின் நம்பிக்கைக்குரிய புதுவரவாக தன்னை நிரூபித்துள்ளார். அவரது அடுத்த படத்துக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

No comments:

Post a Comment