Featured post

Otha Vottu Muthaiya Movie Review

                                        Otha Vottu Muthaiya Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம ஒத்த ஒட்டு muthaiah ன்ற படத்தோட review ...

Thursday, 16 January 2025

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'ஏஸ் '( ACE) படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு

 *'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'ஏஸ் '( ACE)  படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு*



*'ஏஸ்' (ACE) படத்தில் போல்டு கண்ணன் ஆக கலக்கும் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி*


'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி கதையின் நாயகனாக அதிரடியான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ' ஏஸ் ' (ACE) எனும் திரைப்படத்தின் பிரத்யேக காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது. 


இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' ஏஸ்' (ACE) எனும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி. எஸ். அவினாஷ் , திவ்யா பிள்ளை, பப்லு, ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கரண் பகதூர் ராவத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஃபென்னி ஆலிவர் மேற்கொள்ள, கலை இயக்கத்தை ஏ.கே. முத்து கவனித்திருக்கிறார். கமர்சியல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை 7CS என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆறுமுக குமார் பிரம்மாண்டமான பொருட் செலவில் தயாரித்திருக்கிறார். 


இப்படத்தின் டைட்டிலுக்கான டீசர் வெளியாகி மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்தது. இந்த தருணத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதியின் பிறந்த நாளை முன்னிட்டு, ஏஸ் ( ACE)  படத்தின் பிரத்யேக காணொளியை படக் குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள். இதில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி அணிந்து மலேசிய நாட்டின் விமான நிலையத்திற்குள் நடந்து செல்வதும்...பின் அங்கு பிரபலமான வணிக வளாகங்களில் அதிரடி சண்டை காட்சியில் ஈடுபடுவதும்...  ஆட்டம் பாட்டம் கொண்டாட்டங்களில் உற்சாகமாக நடனமாடுவதும், சாலையில் துணிச்சலுடன் செல்வதும்... காட்சிப்படுத்தப்பட்டிருப்பதால் அவருடைய ரசிகர்களை உற்சாகமடைய செய்திருக்கிறது. அத்துடன் இந்த காணொளி மூலம் 'ஏஸ்' திரைப்படம் நூறு சதவீதம் பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாகி இருக்கிறது என்பதும் தெளிவாக தெரிய வருகிறது.

மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதி ஏற்று நடித்திருக்கும் கதாபாத்திரத்தின் பெயர் 'போல்டு கண்ணன்' என்பதால்.. அந்த கதாபாத்திரம் குறித்த ஆவலுடன் கூடிய எதிர்பார்ப்பும் ரசிகர்களிடத்தில் ஏற்பட்டிருக்கிறது.


இந்திய ரசிகர்களை மட்டுமல்லாமல் சீன நாட்டின் ரசிகர்களையும் தன்னுடைய தனித்துவமான நடிப்பால் கவர்ந்திருக்கும் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாகி இருக்கும் 'ஏஸ்' (ACE)   படத்திற்கு தமிழக ரசிகர்கள் மட்டுமல்லாமல் இந்தியா, மலேசியா மற்றும் சர்வதேச ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


https://youtu.be/dul99gEmmDw

No comments:

Post a Comment