Featured post

*'A Beautiful Breakup’ Teaser Unveiled – A Haunting Love Story Set for Valentine’s Day 2026

 *'A Beautiful Breakup’ Teaser Unveiled – A Haunting Love Story Set for Valentine’s Day 2026* A Beautiful Breakup is a romantic supernat...

Wednesday, 15 January 2025

குயின் அனுஷ்கா ஷெட்டி நடிக்கும், “காதி”படத்தில், தேசி ராஜு பாத்திரத்தில்

குயின் அனுஷ்கா ஷெட்டி நடிக்கும், “காதி”படத்தில், தேசி ராஜு பாத்திரத்தில் நடிக்கிறார் விக்ரம் பிரபு !!*



குயின் அனுஷ்கா ஷெட்டி “காதி” படத்தில், இணைந்துள்ள விக்ரம் பிரபுவின் கதாப்பாத்திர கிளிம்ப்ஸ் வெளியானது !!


குயின் அனுஷ்கா ஷெட்டி, கிரியேட்டிவ் டைரக்டர் கிரிஷ் ஜகர்லமுடி, UV கிரியேஷன்ஸ் வழங்கும், ஃபர்ஸ்ட் பிரேம் எண்டர்டெயின்மெண்ட்டின், பான் இந்தியா திரைப்படமான “காதி” படத்தில், இணைந்துள்ள நடிகர் விக்ரம் பிரபுவின் கதாப்பாத்திர கிளிம்ப்ஸ் வெளியானது !!


தென்னிந்திய திரையுலக குயின் அனுஷ்கா ஷெட்டி “காதி” படத்தில் மிரட்டலான அதிரடி கதாப்பாத்திரத்தில்,  நடித்து வருகிறார்.  அவரது பிறந்தநாளில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கதாபாத்திரத்தை  அறிமுகப்படுத்தும் கிளிம்ப்ஸ் வெளியிடப்பட்டது.  முன்னெப்போதும் இல்லாத வகையில், மிரட்டலான ஆக்சன் கதாப்பாத்திரத்தில் தோன்றும் கிள்ம்ப்ஸ் ரசிகர்களிடம் பெரும் வரவேர்பைக் குவித்தது. 


UV கிரியேஷன்ஸ்  வழங்கும் இப்படத்தினை, ராஜீவ் ரெட்டி மற்றும் சாய் பாபு ஜகர்லமுடி ஆகியோர் இணைந்து  தயாரிக்கின்றனர். வேதம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அனுஷ்கா மற்றும் க்ரிஷ் மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளனர். UV கிரியேஷன்ஸ்  பேனரில் அனுஷ்கா நடிக்கும் நான்காவது படம் இது என்பது குறிப்பிடதக்கது. 


இப்படத்தில் முதன்மை கதாப்பாத்திரத்தில்  தமிழ் நடிகர் விக்ரம் பிரபு தேசி ராஜு என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தயாரிப்பாளர்கள் அவரது ஃபர்ஸ்ட் லுக் மற்றும் அவரது கதாப்பாத்திரம் குறித்த கிள்ம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளனர். 


இந்த கிளிம்ப்ஸ் வீடியோ அடர்ந்த காடுகள் மற்றும் கரடுமுரடான காட்டுப் பகுதிகள் வழியாக விக்ரம் காவல்துறையால் துரத்தப்படுவதைக் காட்டுகிறது. அதைத்தொடர்ந்து  அவர் வில்லன்களை எதிர்கொள்ளும் அதிரடி ஆக்சன் காட்சி காட்டப்படுகிறது.  விக்ரம் மற்றும் அனுஷ்கா இருவரும் தங்கள் பைக்குகளை அருகருகே சவாரி செய்து, ஒருவரையொருவர் பார்த்து புன்னகைப்பது, அவர்களுக்கு இடையிலான அற்புதமான கெமிஸ்ட்ரியை உணர்த்துகிறது. 


அதிரடி ஆக்சனுடன், நுட்பமான காதல் உணர்வுகளும் நிரம்பிய அழகான வீடியோவாக இந்த கிளிம்ப்ஸ் அமைந்துள்ளது. இது படத்தின் மீதான ஆவலைத் தூண்டுவதாக அமைந்துள்ளது. 


விக்டிம், கிரிமினல், லெஜண்ட் என்ற டேக்லைன், “காதி” வழக்கமான கதையைத் தாண்டியதாக  இருக்கும் என்று உறுதியளிக்கிறது; இது மனிதநேயம், உயிர்வாழ்வு மற்றும் மீட்பு பற்றிய ஆய்வாக உள்ளது. க்ரிஷின் இயக்கத்தில் ஒரு மாறுபட்ட அனுபவத்தை பார்வையாளர்கள் எதிர்பார்க்கலாம். இது சரி தவறுகளுக்கு அப்பாற்பட்ட  வரலாற்று நாயகியின் கதை.


காதி ஒரு க்ரிப்பிங் ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகிறது, க்ரிஷ் அனுஷ்காவை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிரடி ஆக்சன் நாயகியாக வழங்கவுள்ளார்.  இப்படம் தற்போது இறுதிக்கட்ட தயாரிப்பில் உள்ளது.


ராஜீவ் ரெட்டி, சாய்பாபு ஜகர்லமுடி தயாரித்துள்ள காதி திரைப்படத்தில் சிறப்பு மிக்க பிரபலமான தொழில்நுட்பக் குழு உள்ளது. மனோஜ் ரெட்டி கடசானி ஒளிப்பதிவு செய்ய, நாகவெல்லி வித்யா சாகர் இசையமைக்கிறார். படத்திற்கு தோட்டா தரணி கலை இயக்குனராகவும், சாணக்யா ரெட்டி தூறுப்பு படத்தொகுப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள். சிந்தாகிண்டி ஸ்ரீனிவாஸ் ராவ் கதை வழங்க, சாய் மாதவ் புர்ரா வசனம் எழுதியுள்ளார்.


அதிக பட்ஜெட் மற்றும் உயர்மட்ட தொழில்நுட்ப தரங்களுடன்  பெரிய பட்ஜெட்டில்,  பிரம்மாண்டமான திரைப்படமாக இப்படம் உருவாகிறது. இந்த பான் இந்தியா திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வருகிற ஏப்ரல் 18 ஆம் தேதி வெளியாகவுள்ளது.


நடிகர்கள் : அனுஷ்கா ஷெட்டி


தொழில்நுட்பக் குழு: 

எழுத்து & இயக்கம் : கிரிஷ் ஜகர்லமுடி

தயாரிப்பாளர்கள்: ராஜீவ் ரெட்டி, சாய்பாபு

ஜாகர்லமுடி 

வழங்குபவர் : UV கிரியேஷன்ஸ் 

பேனர்: ஃபர்ஸ்ட் பிரேம் என்டர்டெயின்மென்ட்டின் 

ஒளிப்பதிவு இயக்குனர்: மனோஜ் ரெட்டி கடாசானி 

கலை இயக்குனர்: தோட்டா தரணி 

இசையமைப்பாளர்: நாகவெல்லி வித்யா சாகர் வசனங்கள்: சாய் மாதவ் புர்ரா 

கதை: சிந்தகிண்டி ஸ்ரீனிவாஸ் ராவ் 

எடிட்டர்: சாணக்யா ரெட்டி தூறுப்பு 

ஸ்டண்ட் : ராம் கிருஷ்ணன் 

மக்கள் தொடர்பு : சதீஷ்குமார் S2 Media சந்தைப்படுத்தல் : ஃபர்ஸ்ட் ஷோ 

பப்ளிசிட்டி டிசைனர் : அனில்-பானு


https://youtu.be/KOlNznwqQWA



*

No comments:

Post a Comment