Madraskaaran Movie Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம madraskaran படத்தோட review அ தான் பாக்க போறோம். இன்னிக்கு தான் இந்த படம் release ஆயிருக்கு. vaali mohan das எழுதி இயக்கி இருக்கற இந்த படத்துல Shane Nigam , Kalaiyarasan, Niharika Konidela, Aishwarya Dutta, Karunas, Pandiarajan லாம் நடிச்சிருக்காங்க. வாலி, rangoli படத்துக்கு அப்புறம் இது தான் இவரு இயக்கி இருக்கற ரெண்டாவுது படம். இந்த கதை ஒரு action drama genre ல கொண்டு வந்திருக்காங்க. வாங்க இந்த படத்தோட கதை க்கு போலாம். shane nigam சென்னை ல தான் தங்கி இருக்காரு. இவரோட சொந்த ஊர் புதுக்கோட்டை ல இருக்கற ஒரு சின்ன கிராமம். தான் love பண்ணிட்டுருக்கற பொண்ண தன்னோட சொந்த ஊர்ல தான் கல்யாணம் பண்ணிக்கனோம் னு ஆசை படுறாரு. அதன் படியே அவரோட ஊர்ல கல்யாண வேலை எல்லாம் செமயா ready பண்ணிட்டு இருக்காங்க. ஆனா இவரோட கல்யாணம் தான் smooth அ போகல. ஒரு சின்ன accident நடக்குது இதுனால shane ஓட life ஏ தலைகீழா மாறிடுது. அப்படி இவரோட life ல என்னாச்சு ? இந்த பிரச்சனையா கடந்து வந்தாரா? இவரோட கல்யாணம் நல்ல படியா முடிஞ்சதா ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையா இருக்கு.
Madraskaaran Movie Video Review:
https://youtu.be/GRPXkUxZyBs?si=cqdErqTnwYKhi1IF
இந்த படத்துல நடிச்சிருக்க cast ஓட performance அ பாக்கலாம். shane nigam மலையாள actor இவருக்கு இது தான் முதல் தமிழ் படம். இவரோட முதல் படமே action படமா அமைச்சிருக்கு னு தான் சொல்லணும். இவரோட dialogue delivery , action scenes னு எல்லாமே செமயா பண்ணிருக்காரு. அது மட்டும் கிடையாது, பேமிலி members கிட்ட பேசுற விதம், அம்மாகிட்ட குறும்பு தனமா நடந்துகிறது இல்லனா இவரோட அத்தைங்களுக்கு கிட்ட தனக்கு வேண்டியதை எல்லாம் nice அ வாங்கிக்கிறது னு எல்லாமே ரசிக்கிற மாதிரி இருக்கு. அதோட heroine கிட்ட இவரோட romance part யும் நல்ல இருந்தது.
niharika தான் shane க்கு ஜோடியா நடிச்சிருக்காங்க. இவங்க ரெண்டு பேரோட chemistry நல்ல இருந்தது. இவங்களோட performance யும் நல்ல இருந்தது. அடுத்ததா கலையரசன். இவரோட நடிப்பை பத்தி நமக்கு நல்ல தெரியும். இவரை இந்த படத்தோட வில்லன் நும் சொல்ல முடியாது ஹீரோ னும் சொல்ல முடியாது. அந்த மாதிரி ஒரு எதார்த்தமான கதப்பாத்துறதுல நடிச்சிருக்காரு னு தான் சொல்லணும். இவரோட performance யும் செமயா குடுத்திருந்தாரு. இவருக்கு wife அ நடிச்சிருக்கறது iswarya dutta . இவங்களோட screen presence ரொம்ப கம்மியா இருந்தாலும் தன்னோட role அ புரிஞ்சிக்கிட்டு செமயா நடிச்சிருக்காங்க. இவங்கள தவிர மத்த supporting actors அ வர karunas , pandiyarajan , geetha kailasam , deepa , னு எல்லாருமே படத்துக்கு ஒரு பக்க பலமா தன்னோட நடிப்பை பதிவு பண்ணிருக்காங்க னு தான் சொல்லணும்.
இந்த படத்தோட technical side னு பாக்கும் போது sam c s தான் music compose பண்ணிருக்காரு. இந்த படத்துல வர எல்லா songs யும் நல்ல இருக்கும். முக்கியமா கல்யாண song னு ஒன்னு வர்ரது அது தான் இந்த படத்துல highlight அ இருக்கு. அதுமட்டுமில்லாம இவரோட bgm எல்லாமே set யிருந்தாலும் action scenes க்கு செமயா bgm அ குடுத்திருக்காரு னு தான் சொல்லணும். சென்னை , புதுக்கோட்டை ல இருக்கற இடங்கள், characters ஓட emotions அதோட action scenes எல்லாம் பாக்கறதுக்கு மிரட்டற மாதிரி கேமரா ல பதிவு பண்ணிருக்காரு cinematographer பிரசன்னா எஸ்.குமார் .
இந்த படத்துல வர action sequences எல்லாமே பக்கவா cherograph பண்ணிருக்காங்க அதுக்காக stunt master க்கு ஒரு பெரிய கைத்தட்டல் அ குடுத்தே ஆகணும். director இந்த படத்தை ல என்ன சொல்லாவற்ரு ன்றது தெளிவா எந்த distraction யும் இல்லாம பக்கவா கதையை edit பண்ணிருக்காரு editor ஆர்.வசந்தகுமார். கதை ரொம்ப simple அ இருந்தாலும் அதுல action , family , romance னு எல்லாமே எடுத்துட்டு வந்து ஒரு நல்ல கதையை கொண்டு வந்திருக்காரு. முக்கியமா சொல்ல போன நடந்த விஷயத்துக்கும் hero க்கும் சம்பந்தமே இல்லனு தெரிய வரும்போது, shane அதுக்கான காரணத்தை கண்டுபிடிக்க ஆரம்பிக்குறாரு. இந்த விஷயங்கள் எல்லாம் ஒரு thriller பாணி ல டைரக்டர் குடுத்திருக்காரு னு சொல்லணும்.
மொத்தத்துல ஒரு தரமான action படம் தான் madraskaran , கண்டிப்பா இந்த படத்தை theratre ல பாக்க miss பண்ணிடாதீங்க.
No comments:
Post a Comment