Featured post

Delhi Sharks Clinch Title !!!!

Delhi Sharks Clinch Title !!!!   Delhi Sharks emerged victorious at the DAVe BABA VIDYALAYA Tamil Nadu Open Trios Tenpin Bowling Tournament ...

Wednesday, 29 January 2025

இந்த காதலர் தினத்தன்று, **ஆஹா தமிழ்** அதன் புதிய வெப் சீரிஸ்

இந்த காதலர் தினத்தன்று, **ஆஹா தமிழ்** அதன் புதிய வெப் சீரிஸ்  **"மதுரைப் பையனும் சென்னைப் பொண்ணும்"** மூலம் ஒரு புத்துணர்ச்சியூட்டும் காதலைக் கொண்டுவருகிறது. 




மதுரை பையனுக்கும் சென்னைப் பெண்ணுக்கும் இடையிலான கலாச்சார மற்றும் தனிப்பட்ட வேறுபாடுகளை ஆராயும் ஒரு மனதைக் கவரும் வெப் சீரிஸ் ஆக தயாரிக்கப்பட்டுள்ளது.


பிரபல இணைய மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளினி ஏஞ்செலின் இந்த தொடரின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவருக்கு இணையாக தொடரின் நாயகனாக கண்ணா ரவி நடிக்கின்றார் .இவர்களுடன் ரேணுகா , குரேஷி, ஷ்யாமா ஷர்மி மற்றும் பலர் இணைந்து நடிக்கின்றனர்.


விக்னேஷ் பழனிவேல் இயக்கும் இந்த வெப் சீரிஸ் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வரும் பிப்ரவரி 14 அன்று வெளியாகவுள்ளது .காதலை கொண்டாடும் இந்த தொடரை காதலர் தினத்தன்று ஆஹா ஓடிடி தளத்தில் காணத்தவறாதீர்கள்.


---  


**

No comments:

Post a Comment