Featured post

Sony Entertainment India releases trailer of action-thriller, Sisu: Road to Revenge; releases on

 *Sony Entertainment India releases trailer of action-thriller, Sisu: Road to Revenge; releases on 21st November, 2025 in English, Hindi, Ta...

Friday, 24 January 2025

Kudumbasthan Movie Review, Kudumbasthan Review

 Kudumbasthan Movie Review, Kudumbasthan Review

ஹாய் மக்களே இன்னைக்கு நம்ம kudumbasathan படத்தோட விவரம் தான் பார்க்க போறோம். Rajeshwar Kalisamy தான் இந்த படத்தை இயக்கி இருக்காரு. இது தான் இவரோட முதல் படமும் கூட . இவரும் பிரசன்னா பாலச்சந்திரனும் சேர்ந்து தான் இந்த படத்தோட கதையை எழுதி இருக்காங்க.  இந்த படத்துல  மணிகண்டன் , saanve , குரு சோமசுந்தரம்  இவங்க தான் நடிச்சிருக்காங்க.   இந்த படத்தை புரொடியூஸ் பண்ணி இருக்கிறது  எஸ் வினோத்குமார்.

Kudumbasthan Movie REview : https://www.youtube.com/watch?v=iWh8_VgDD5c
 இந்த படம் நாளைக்கு தான் ரிலீஸ் ஆகப்போகுது. இந்த படத்தோட டைட்டில் போஸ்டர  சிலம்பரசன் தான் ரிலீஸ் பண்ணி இருக்காரு. ஃபேமிலி ட்ராமா கதைனாலே  அதை கொண்டு வர விதம் ரொம்பவே கஷ்டம் அப்படியே அது கொண்டு வந்தாலும்  எல்லா டைமும் ஒர்க் ஆகுமானு  தெரியாது. ஆனா இந்த குடும்பஸ்தன் படம்  ஃபேமிலி sentiments ஓட  சேர்ந்து காமெடியும் கொண்டு வந்திருக்காங்கன்னு தான் சொல்லணும்.  இன்னும் சொல்லப்போனா  டைரக்டர் விசு  அதுக்கப்புறம் வீ சேகர் இவங்களோட படங்கள் மாதிரி தான் இந்த படமும் பாக்குற ஆடியன்ஸ சிரிக்க வைக்குது. 


படத்தோட title  க்கு ஏத்த மாதிரியே ஹீரோ ஃபேமிலி மேனா இருக்காரு அவருடைய தினசரி வாழ்க்கையில நடக்குற விஷயங்கள் கஷ்டங்கள் இதப்பத்தி தான் இதுல சொல்றாங்க அது மட்டும் இல்லாம இவரு  வேலை பாக்குற இடத்துல எல்லா வாட்டியும்  நோஸ்கட் வாங்குறதுக்கு  இதுல காமிச்சி இருக்காங்க. படத்தோட ஆரம்பத்துல பாத்தீங்கன்னா naveen அ  நடிச்சிருக்க மணிகண்டன் ஒரு பொண்ணை லவ் பண்ணி அதுக்கப்புறம் கல்யாணமும் பண்ணிக்கிறாரு  கல்யாணம் ஆகி ஒரு வருஷம்  முடிஞ்சிடுது. இப்பதான் இவரோட வாழ்க்கை தலைகீழா மாறிடுது ஏன்னா  திடீர்னு இவருடைய வேலை இவர்கிட்ட இருந்து பறிபோயிடுது இதுக்கு அப்புறம் தொடர்ந்து நிறைய பிரச்சனைகள் தான் இவரை சந்தித்து இருக்காரு ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்துல எப்பேர்பட்ட கஷ்டங்கள் எல்லாம் வரும் அப்படி என்றத அடிப்படையா வச்சு காமெடியோட அதேசமயம்  சென்டிமென்ட் ஓட இந்த கதையை சொல்லி இருக்காங்க . 

இந்த படத்துல காமெடிக்கு பஞ்சமே இல்லாம இருக்கு அதுவும் முக்கியமா சொல்லப்போனால் பர்ஸ்ட் ஹாஃப்ல வர மூணு காமெடி சீன்ஸ் கண்டிப்பா வாயை விட்டு சிரிக்கிற அளவுக்கு நல்லாவே இருக்கும்.  செகண்ட் ஹாஃப் கொஞ்சம் சீரியஸா போனாலும் கடைசி வரைக்கும் காமெடிக்கு பஞ்சமே இல்லாம தான் வச்சிருக்காங்க அண்டு இந்த படத்தோட கிளைமாக்ஸ் செம்மையா இருக்கு. என்ன இந்த படத்துல மெயினான விஷயம் என்னன்னா மணிகண்டனுக்கும் குரு சோமசுந்தரத்துக்கும் நடுவுல நடக்குற  ஈகோ பிரச்சனை தான் சோ இத சுத்தி நடக்குற விஷயங்கள்தான் புல்லா போகஸ் பண்ணி வச்சிருப்பாங்க. 

குட் நைட் அதுக்கப்புறம் லவ்வர் படங்களை கொடுத்த மணிகண்டன் மறுபடியும் ஒரு சூப்பர் ஹிட்டான படத்தை தான் கொடுத்திருக்கிறார் னு தான்  சொல்லி ஆகணும். ரொம்ப எதார்த்தமா அதே சமயம் comedy ஆவும் தன்னோட நடிப்பை இந்த படத்துல பதிவு பண்ணிருக்காரு. குரு somasundram அ பத்தி சொல்லியே ஆகணும் manikandan ஓட brother in law நடிச்சு இவரு ஒரு பக்கம் manikandan வாட்டி எடுக்கறதுல்லாம் வேற level ல இருந்திச்சு. இவரோட நடிப்பும் பக்கவா குடுத்திருக்காரு. இந்த படத்தோட கதை கேக்கறதுக்கு எளிமையா இருந்தாலும் அதை கொடுத்து இருக்கிற விதம்  ரொம்ப அருமையா இருந்தது.  இந்த காலகட்டத்தில் நடக்கிற  ஒரு சாதாரண மிடில் கிளாஸ் குடும்பத்தில் இருக்கிற பிரச்சனைகளை  சீரியஸாவும் அதேசமயம் காமெடியாகவும்  நம்மள சந்திக்க வச்சிட்டு போயிருக்கு னே  சொல்லலாம். இந்த படத்துல நடக்குற நிறைய விஷயங்களை நம்ம ரியாலிட்டியோட connect பண்ணிக்க முடியுது. அதாவது மாசக்கடைசியில நம்ம கையில காசு இருக்காது  அப்ப பார்த்து தான் நிறைய செலவு வரும்  நிறைய ரிப்பேர் ஆகும். இந்த மாதிரி விஷயங்களை பார்க்கும் போது தான்   எல்லாரோட வீட்டுலயும் ஒரு டெம்ப்ளட் மாதிரி இதுவே நடந்துட்டு இருக்குன்னு தெரிய வருது. 

இந்தப் படத்தை   டைரக்ட் பண்ணி கதை எழுதி இருக்கிறது youtube சேனல் தானே  நக்கலைட்ஸ் புகழ்  பிரசன்ன பாலச்சந்திரன் அதுக்கப்புறம் ராஜேஸ்வர் காளி சாமி தான்.  இவங்களோட எக்ஸ்பீரியன்ஸா வச்சு தான்  இந்த படத்துக்கு  சூப்பரான டயலாக்சும்  அதேசமயம்  ஸ்கிரீன் playum அழகா கொண்டு வந்திருக்காங்க. இந்த படத்துல வர ஒன் லைன் காமெடி எல்லாமே பக்காவா இருக்கு அதோட நிறைய காமெடி சீன்ஸ் ரசிக்கிற மாதிரியும்  புதுசாவும்  இருந்துச்சுன்னு தான் சொல்லணும்.        

 எல்லாருமே  இந்த படத்தை பார்த்து ரசிக்கிற மாதிரியும் சிரிக்கிற மாதிரியும்  ஒரு பக்காவான கமர்சியல் படத்தை கொடுத்திருக்காங்க.  கண்டிப்பா இந்த படத்தை நாளைக்கு தியேட்டர்ல போய் பாக்குறதுக்கு மறந்துடாதீங்க.  முக்கியமா உங்க பேமிலி அண்ட் பிரண்ட்ஸ் கூட்டிட்டு போய் பாத்துட்டு வாங்க.

No comments:

Post a Comment