Featured post

Teja Sajja Starrer Mirai Crosses 100 Cr Gross Worldwide, Breaches $2 Million Mark In USA

 *Teja Sajja Starrer Mirai Crosses 100 Cr Gross Worldwide, Breaches $2 Million Mark In USA* Teja Sajja is proving true to his super hero ima...

Friday, 17 January 2025

மதகஜராஜா எந்த ஸ்டேஷனிலும் நிற்காமல் போகும் ட்ரெயின்

 *“மதகஜராஜா எந்த ஸ்டேஷனிலும் நிற்காமல் போகும் ட்ரெயின்” ; விஷால் உற்சாகம்*








*“புரட்சித்தலைவர் எம்ஜிஆர் எங்கிருந்தோ என்னை வாழ்த்துகிறார்” ;‘ விஷால் பரவசம்*  


*“ரசிகர்களின் அன்புக்கு திருப்பிக்கொடுக்க முடிந்தது என் நன்றியும் சில சொட்டு கண்ணீரும்..” ; சுந்தர்.சி நெகிழ்ச்சி* 


12 வருடங்களுக்கு முன் தயாரான ஒரு படம் சில காரணங்களால் வெளிவராமல் தடைபட்டு, இப்போது காலம் எவ்வளவோ மாறியிருக்கும் சூழலில் வெளியாகி, அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து பிளாக் பஸ்டர் ஹிட் ஆகிறது என்றால் இது சினிமா வரலாற்றிலேயே இதுவரை நிகழாத அதிசயம்.. அதை நிகழ்த்தி காட்டி இருக்கிறது இந்த பொங்கல் பண்டிகைக்கு வெளியான 'மதகஜராஜா' திரைப்படம்.


சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், சந்தானம், அஞ்சலி, வரலட்சுமி, விஜய் ஆண்டனி (இசை) உள்ளிட்டோரின் கூட்டணியில் பாரம்பரியம் மிக்க ஜெமினி பிலிம்ஸ் சர்க்யூட் தயாரிப்பில் உருவான ‘மதகஜராஜா’ (MGR) திரைப்படம் தடைகள் பல கடந்து லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட் என்பது போல வெளியாகி இந்த பொங்கல் ரேஸில் நம்பர் 1 குதிரையாக ஓடிகொண்டு இருக்கிறது.. அந்தவகையில் பொதுமக்களுக்கு உண்மையான பொங்கல் கொண்டாட்டமாக ‘மதகஜராஜா’ படம் அமைந்துவிட்டது என்றே சொல்லலாம்.


13 வருடங்களுக்கு முன் இந்தப்படம் அறிவிப்பு வெளியான நாளில் இருந்து இப்போது வரை இந்தப்படத்திற்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வெற்றிப்படமாக்கிய ரசிகர்களுக்கும் பத்திரிகை, மீடியா, சோஷியல் மீடியா உள்ளிட்ட ஊடகங்களுக்கு நன்றி தெரிவிக்கும் சந்திப்பை ‘மதகஜராஜா’ படக்குழுவினர் இன்று சென்னை கிரீன் பார்க் ஹோட்டலில் நடத்தினர்.


இந்த  நிகழ்வில்   


*இயக்குநர் சுந்தர்.சி பேசும்போது* 


“எனக்கு தெரிந்து எந்த என்னுடைய எந்த படத்திற்கும் நான் சக்சஸ் மீட் வைத்தது கிடையாது. கடைசியாக ஹி அடித்த  #அரண்மனை4 படம் உட்பட, என் படம் வெளியான பின்பு அடுத்த படத்திற்கு அப்படியே நகர்ந்து விடுவேன். ஆனால் இந்த படம் அதை எல்லாவற்றையும் மீறிய ஒரு சந்தோஷத்தை கொடுத்திருக்கிறது. மற்ற படங்களை விட இது ஒரு ஸ்பெஷல். 13 வருடம் கழித்து இந்த படம் வருகிறது, என்ன பெரிதாக சாதித்து விடப்போகிறது என்று கூட திரையுலகில் சிலர் சொன்னார்கள். ஆனால் மக்களுக்கு இந்த படத்தின் மீது நம்பிக்கை இருந்தது. ஏனென்றால் இந்த படத்தை நாங்கள் அறிவித்த சமயத்திலேயே எங்களுக்கு ரசிகர்களிடம் இருந்து கிடைத்த வரவேற்பு அபரிமிதமானது. தயாரிப்பாளர் மனோகர் பிரசாத், இந்தப் படத்தைப் பார்த்து அதை ரிலீஸ் பண்ணுவதற்கான முயற்சிகளை மேற்கொண்ட  திருப்பூர் சுப்பிரமணியம். ஏசி சண்முகம். ஏ சி எஸ் அருண்குமார். உறுதுணையாக இருந்த மதன் உள்ளிட்ட பலருக்கு நான் இந்த நேரத்தில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


இந்த படம் வெற்றி பெறும் என நான் நம்பினேன். ஆனால் நூற்றுக்கு 99 சதவீதம் பேர் படம் பார்த்துவிட்டு இது நன்றாக இருக்கிறது என்று சொன்னபோது என்னால் என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை. அவர்களுக்கு என்னால் திருப்பிக் கொடுக்க முடிந்தது என் நன்றியும் சில சொட்டு கண்ணீரும் தான். இந்த படத்தில் நடித்த மணிவண்ணன் சார், மனோபாலா, 13 வருடங்கள் கழித்தும் கூட இப்போதும் ரசிகர்களின் கனவுக்கன்னிகளாக வலம் வரும் இந்த படத்தின் கதாநாயகிகளான அஞ்சலி, வரலட்சுமி ஆகட்டும் அனைவருக்கும் நன்றி. வரலட்சுமி கடைசி நேரத்தில் தான் இந்த படத்திற்குள்ளே வந்தார். முதலில் வேறு கதாநாயகி நடிப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அவர் ஒரு வாரம் தள்ளித்தான் வர முடியும் என்கிற சூழல். முதல் நாள் திடீரென வரலட்சுமியை அழைத்து விஷயம் சொன்னதும் உடனே கிளம்பி வந்தார். கலகலப்பு, மதகஜராஜா என என்னுடைய இரண்டு சூப்பர் ஹிட் படங்களிலும் நடித்த ராசியான ஹீரோயின் அஞ்சலி. கார்த்திக், விஷால் போன்ற ஹீரோக்கள் என்னை முழுமூச்சாக நம்பி தங்களை ஒப்படைத்து விடுவார்கள். ஒரு கதாநாயகி அப்படி ஒப்படைப்பது என்பது சிரமம் தான். ஆனால் அஞ்சலி அப்படி இயக்குனரை நம்பி தன்னை ஒப்படைக்கும் நடிகை.


சந்தானமும் நானும் எனது பல படங்களில் பணியாற்றி இருக்கிறோம். இந்த படத்திற்காக 40 நாட்கள் கால்சீட் ஒதுக்கி கொடுத்து நடித்தார். 13 வருடம் கழித்து படம் சிறப்பாக இருக்கு என சொல்கிறார்கள். ஆனால் பாடல்களும் பின்னணி இசையும் கூட அதே பிரஷ் ஆக இருக்கிறது என்று பலரும் சொல்கிறார்கள். பாட்டு மட்டும் இல்லாமல், ஹீரோவுக்கான பின்னணி இசை ஆகட்டும், காமெடிக்கான பின்னணி இசை ஆகட்டும், என்னுடைய படங்களிலேயே இது  அதிக பெஸ்ட் என்று சொல்லலாம். அதற்காக விஜய் ஆண்டனிக்கு நன்றி.


இந்த படத்தில் இடம்பெற்ற தொம்பைக்கு தொம்பை என்கிற பாடலை விஜய் ஆண்டனியை டார்ச்சர் செய்து ஐந்து நாட்கள் வேலை வாங்கி உருவாக்கினேன். ஆனால் பாடல் வெளியான சமயத்தில் அவ்வளவு வரவேற்பு பெறவில்லை என்று எனக்கு வருத்தம் இருந்தது. ஆனால் இப்போது பார்த்தால் அந்த பாடல் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் ரீச் ஆகி உள்ளது. வானமாமலை என்பவர் எழுதிய புத்தகத்திலிருந்து தூய தமிழ் வார்த்தைகளை எடுத்து இதில் பயன்படுத்தியிருந்தோம். அதேபோல சிக்குபுக்கு ரயிலு வண்டி பாடல் இதில் வந்ததே சுவாரசியமான விஷயம். விஜய் ஆண்டனியுடன் பேசிக்கொண்டிருக்கும்போது அவர் வேறு ஒரு படத்திற்காக உருவாக்கி ஆனால் அவர்கள் வேண்டாம் என்று சொன்ன அந்த பாடலை போட்டு காட்டினார். அற்புதமாக இருந்தது. இதை நான் பயன்படுத்திக் கொள்கிறேன் என்று வாங்கிக் கொண்டேன். இப்போது எல்லா திருவிழாவிலும் இந்தப்பாடல் ஒலிக்காத இடமே கிடையாது என்பது போல இவ்வளவு பெரிய ஹிட் ஆகிவிட்டது. 


மேன்மக்கள் மேன்மக்களே என்பதற்கு ஏற்ப ஜெமினி பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தில் எந்த ஒரு விஷயத்திலும் குறுக்கீடு செய்யாமல் என்ன கேட்டாலும் கொடுத்து உதவினார்கள். இந்த மதகஜராஜா மூலம் மீண்டும் ஜெமினி பிக்சர்ஸ் கொடி பறக்க வேண்டும் என விரும்புகிறேன். இந்த படத்திற்காக விஷால் பட்ட கஷ்டங்கள் ஏராளம். தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதற்காக அவர் எடுத்துக் கொண்ட முயற்சியில் காரில் எல்லாம் மயக்கம் போட்டு விழுந்திருக்கிறார். இப்போது இந்த படத்திற்கு மக்கள் கொடுத்திருக்கும் வெற்றி, நாம் உண்மையாக, நேர்மையாக முழு உழைப்பை கொடுத்தால் மக்கள் நமக்கு திருப்பி அன்பை கொடுப்பார்கள் என்பதற்கு விஷாலின் உழைப்பும் மிகப்பெரிய உதாரணம். விஷாலின் மார்க்கெட் இப்போது வரை எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் இந்த படத்தின் வெற்றி என் தம்பி விஷாலுக்கு மிகப்பெரிய மருந்தாக அமைந்துள்ளது.


நான் எம்ஜிஆரின் மிக தீவிரமான ரசிகன். காலையில் கண்விழித்ததுமே ஏதோ ஒரு இடத்தில் அவரது புகைப்படமோ அல்லது போஸ்டரோ பார்த்தால் அல்லது அவரது பாடலை எங்கேயாவது கேட்டால் அன்றைய தினம் முழுவதும் சந்தோஷமாக இருக்கும்/ அப்படி ஒரு சென்டிமென்ட் எனக்கு இருக்கிறது/ அவருடைய பெயரை இந்த படத்திற்கு வைத்ததாலோ என்னவோ அவருடைய ஆசிர்வாதமும் கூடவே அதிர்ஷ்டமும் சேர்ந்து வந்துள்ளது” என்றார்.


*நடிகர் விஷால் பேசும்போது,* 


“ஒரு நாள் செய்தித்தாளில் ஏதோ ஒரு விஷயம் வரும்.. மறுநாள் மறந்து விடுவார்கள்.. ஆனால் விஷாலின் நடுக்கம் உலக அளவில் ரீச் ஆகி விஷால் நல்லா இருக்கணும், விஷால் மீண்டு வரவேண்டும், விஷாலுக்கு உடம்புக்கு என்ன பிரச்சனை, விஷாலை இப்படி பார்த்ததே கிடையாது என மருத்துவர்கள், நீதிபதிகள், ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள், வருமான வரி அதிகாரிகள் இன்னும் பல வெளிநாடுகளில் இருந்து பலரும் தொடர்ந்து அன்பாக விசாரித்தார்கள். அன்று அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முடிந்தபோது எத்தனை பேர் என்னை நேசிக்கிறார்கள், நேசிக்காதவர்கள் கூட என்னை நேசிக்க ஆரம்பித்து விட்டார்கள், பிடிக்காதவர்களுக்கு கூட என்னை பிடிக்க ஆரம்பித்துவிட்டது என்பதை உணர்ந்தேன். மருத்துவர்கள் என்னிடம் அந்த நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டாம், உங்களுக்கு 103 டிகிரிக்கும் அதிகமான கடுமையான காய்ச்சல் இருக்கிறது என என் உடல்நிலையை காரணம் காட்டி அறிவுரை கூறினார்கள். ஆனால் நான் பிடிவாதம் பிடித்து இந்த நிகழ்ச்சிக்கு கிளம்பியதற்கு காரணம் இயக்குனர் சுந்தர் சி தான். 


இந்த 12 வருடங்களில் நாங்கள் ஒவ்வொரு வருடமும் இந்த படம் பற்றி பேசும்போது எனக்கு அவ்வளவு உற்சாகம் கொடுத்தார். அவருக்காகவே இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன். சண்டக்கோழிக்கு பிறகு நான் ரொம்பவே விரும்பி எதிர்பார்த்த படம் மதகஜராஜா. இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி கூட நிச்சயம் இந்த படம் வெளிவரும் என ஊக்கம் கொடுத்தார். 12 வருடம் கழித்து ஒரு படம் வந்து மெகா பிளாக்பஸ்டர் ஆனது இந்த படமாக தான் இருக்கும். காரணம் நான்கைந்து வருடங்களாக வெளிவராமல் இருந்து வெளிவரும் படங்களை கூட மக்கள் புறக்கணித்து இருக்கிறார்கள். இறைவன் இதை தாமதப்படுத்தினாலும், வேறு படங்கள் நீங்கள் பண்ணிக் கொண்டிருங்கள் உங்களுக்கு ஒரு நல்ல நேரத்தை நான் கொடுக்கிறேன் என்று சொல்லித்தான் இந்த 9 நாட்கள் பண்டிகை தொடர் விடுமுறை காலத்தில் இந்த படம் வெளியாகும் விதமாக செய்திருக்கிறார் என்று தான் நான் நினைக்கிறேன்.


விஷால் போதைக்கு அடிமையாகி விட்டார்.. நரம்புத் தளர்ச்சி என்பது போன்று பலர் தங்கள் கற்பனை உலகத்தில் பல செய்திகளை உருவாக்கி வெளியிட்டார்கள். நீங்கள் எப்போதும் என்னை தொடர்பு கொண்டு உண்மை என்ன என என்னிடமே கேட்டு அதை வெளியிடலாம். ஆனால் இதிலும் ஒரு நல்ல விஷயம், எத்தனை பேர் என்னை நேசிக்கிறார்கள் என்பதை என்னால் தெரிந்து கொள்ள முடிந்தது. மருத்துவமனை, டாக்டரிடம் போவது என்றால் எனக்கு பயம். ஆனால் சுந்தர்.சி சார் படங்களில் நடிப்பது என்றால் எனக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சீக்கிரமே குணமாகும். சந்தோஷமாக இருக்கும். சுந்தர் சி யின் படங்களில் நடிப்பது என்பது ஒரு மருந்து போல தான். ஒரு இயக்குநர் 30 வருடங்களாக திரையுலகில் நீடித்திருப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல.


தயாரிப்பாளர் மனோகர் பிரசாத்துடன் நாங்கள் குடும்ப ரீதியாக ரொம்பவே நெருக்கம். நீண்ட நாட்களாகிவிட்டது அவருடைய முகத்தில் இப்படி ஒரு சிரிப்பை பார்த்து. தேவி தியேட்டரில் நான்கு தியேட்டர்களில் சேர்த்து மொத்தம் 8000 பேர் ஒரே நாளில் பார்த்திருக்கிறார்கள். நீங்கள் மீண்டும் முழு வீச்சுடன் இந்த திரையுலகில் வரவேண்டும். உங்களைப் போன்ற தயாரிப்பாளர்கள் வர வேண்டும். ஜிஎஸ்டி, டிடிஎஸ் எதையும் கட்ட மாட்டார்கள்.. சம்பள பாக்கி வைக்கிறார்கள்.. நம்மையே புரொமோஷன் செய்ய வைக்கிறார்கள் உங்களைப் போன்ற தயாரிப்பாளர்கள் இருந்தால் எங்களைப் போன்ற நடிகர்கள் உயிரைக் கொடுத்து வேலை செய்ய தயாராக இருக்கிறோம்.


இடையில் எனது குருநாதர் விஜய் ஆண்டனி என்னை கர்நாடக சங்கீதம் எல்லாம் பாடவைத்து, நாளை 40 ஆயிரம் பேர் பங்கேற்க இருக்கும் லைவ் கான்சர்ட்டில் கூட என்னை பாட வைக்கப் போவதாக சொல்லி இருக்கிறார். அவருக்கு எப்படித்தான் இதற்கெல்லாம் மனசு வருகிறதோ தெரியவில்லை. 1994ல் கல்லூரியில் படிக்கும்போது நாம் இருவரும் பாடல் கம்போசிங் செய்தோம். அதன்பிறகு 2013ல் இந்த படத்திற்காக ஒரிஜினல் ஆகவே கம்போசிங் செய்தோம். 


இந்த படத்தின் எழுத்தாளராக வேங்கட் மிகப்பெரிய பலம். மலையாளத்தில் நிறைய எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். தமிழில் குறைவுதான். இந்த படத்தின் வெற்றிக்கு அவர் ஒரு தூணாக இருந்திருக்கிறார். இத்தனை வருட அன்பான தோழி வரலட்சுமி, ஏதோ பிரிட்ஜில் வைத்தது போல அப்படியே பிரெஷ் ஆக இருக்கிறார். ஒரே ஒரு படம் தான் பண்ணி இருந்தாலும் கூட ஏதோ கல்லூரியில் படித்து நண்பர்களாக இருப்பது போல நாங்கள் பழகுவோம். நான் பல பிரச்சினைகளை, தடைகளை சந்தித்து இருக்கிறேன். ஆனால் எப்போதும் அழும் பழக்கம் கிடையாது. கண்ணாடியின் முன் நின்று பேசுவேன். எதையும் தாண்டி சென்று விடலாம் என எனக்கு நானே பேசி தைரியம் சொல்லிக் கொள்வேன். ஆனால் நான் முதன்முறையாக கண்கலங்கியது ஹனுமன் படத்தில் வரலட்சுமி நடித்த ஒரு காட்சியை பார்த்து அதற்கு தியேட்டரில் ரசிகர்களிடம் கிடைத்த கைதட்டலை பார்த்து நான் கண் கலங்கினேன்.


மீடியாக்களில் மட்டுமல்ல சோசியல் மீடியாக்களிலும் சமீப காலத்தில் ஒரு படத்திற்கு ஆதரவு கொடுத்தார்கள் என்றால் அது மதகஜராஜா படத்திற்கு தான். பிடிக்காத நபர் கூட சத்தம் இல்லாமல் சென்று இந்த படத்தை பார்த்து விட்டு வந்து ஒரு ட்வீட் போட்டிருக்கிறார். புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் 108வது பிறந்தநாளான இன்று எங்கள் எம்ஜிஆரின் (மதகஜராஜா) சக்சஸ் மீட் கொண்டாடுகிறோம். இதைவிட வேறென்ன வேண்டும். மார்க் ஆண்டனியில் அவர் பெயரை பச்சை குத்தினேன். இந்தப் படத்தில் அவர் பெயர் இதில் அவர பெயர் வைத்த டைட்டிலில் நடித்தேன். இரண்டுமே பிளாக் பஸ்டர்கள். எங்கிருந்தோ அவர் என்னை வாழ்த்துகிறார் என்றே நினைக்கிறேன்.


மதகஜராஜா எந்த ஸ்டேஷனிலும் நிற்காமல் போகும் டிரெயின். ஏனென்றால் குடும்ப ரசிகர்களுக்கு பிடித்து விட்டது. நாளை என்னுடைய கர்நாடக சங்கீத பாடலை கேட்பதற்காக 40 ஆயிரம் பேர் வருகிறார்கள் என்பதும் விஜய் ஆண்டனிக்கு நான் பெருமை செலுத்தப் போகிறேன் என்பதையும் நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது. 


மக்கள் எந்த அளவிற்கு காய்ந்து போய் இருக்கிறார்கள் என்பதை இந்த படத்தின் அந்த நான்ஸ்டாப் 20 நிமிட காமெடி காட்சியை அவர்கள் ரசித்த விதத்தில் இருந்து தெரிந்து கொண்டேன். சந்தானத்திற்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நம் காம்பினேஷன் எப்போதுமே ராக்கிங் தான். எல்லோரும் ஒரு வெற்றிடம் இருக்கிறது சொல்கிறார்கள் அவர்கள் சொல்வது போல சந்தானம் மீண்டும் சில படங்களிலாவது விண்டேஜ் காமெடியனாக வந்தால் நன்றாக இருக்கும்” என்று கூறினார். 


அடுத்ததாக இயக்குனர் கவுதம் மேனனுடன் இணைந்து ஒரு படத்தில் பணியாற்ற இருக்கிறேன். அஜய் ஞானமுத்து டைரக்ஷனில் ஒரு படம், துப்பறிவாளன் 2 என வரிசையாக படங்கள் இருக்கிறது. மீண்டும் சுந்தர்சியுடன் இணைந்தும் பணியாற்ற காத்திருக்கிறேன். அவர் சொல்லிவிட்டால் அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு அடுத்த நாளே கிளம்பி வந்து விடுவேன். மீண்டும் எங்கள் காம்பினேஷனில் எப்போது படம் வரப்போகிறது என்று மக்கள் கேட்கிறார்கள். இதற்கிடையில் எங்களுடைய ஆம்பள படத்தை ரீ ரிலீஸ் செய்யப் போகிறோம்” என்றார்.


- Johnson PRO

No comments:

Post a Comment