Featured post

En Kadhale- Announcement of Release Date

 *En Kadhale-  Announcement of Release Date.* Sky wanders Entertainment, produced, written and directed by Jayalakshmi under the banner Sky ...

Saturday, 11 January 2025

அஜித்குமார் ரேசிங்கின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

 *அஜித்குமார் ரேசிங்கின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!*



கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு துபாய் 24H சீரிஸூக்கான கார் ரேஸ் பயிற்சியில் நடிகர் அஜித்குமார் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது. இதுபற்றி, அஜித்குமார் ரேசிங் குழு முழுமையாக மதிப்பீடு செய்துள்ளது.


அணியின் உரிமையாளராகவும், அணியின் ஒருங்கிணைந்த பகுதியாகவும் உள்ள அஜித்குமார் இதில் உள்ள பலவிதமான சவால்களையும் கருத்தில் கொண்டு, அணியினரின் நலனை முன்னுரிமை படுத்தி இருக்கிறார். பலவித ஆலோசனைகளுக்குப் பிறகு பாதுகாப்பு குறித்தான மாற்றங்களையும் கொண்டு வந்துள்ளார். 


பலகட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு, வரவிருக்கும் துபாய் 24H சீரிஸில், அஜித்குமார் ரேசிங்கிற்கு வாகனம் ஓட்டுவதில் இருந்து பின்வாங்குவது என்ற கடினமான ஆனால் தன்னலமற்ற முடிவை அஜித்குமார் எடுத்துள்ளார். தன்னுடைய தனிப்பட்ட விருப்பம் என்பதையும் தாண்டி அணியின் நலன்களுக்கு முன்னுரிமை அளிப்பதில் அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பை இது காட்டுகிறது. அஜித்தின் இத்தகைய ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப் அணியினருக்கு உத்வேகம் அளிப்பதாக அமைந்துள்ளது. 


மோட்டார் ஸ்போர்ட்டின் மீதான அபரிதமான ஆர்வம் கொண்ட அஜித்குமார் துபாய் 24H சீரிஸில் தொடர்ந்து பங்கேற்பார். போர்ஷே 992 கப் காரில் (நம்பர் 901) பாஸ் கோட்டனின் அஜித்குமார் ரேசிங்கின் உரிமையாளராக அஜித் உள்ளார். அதே நேரத்தில் போர்ஷேயில் ரஸூனின் கேமன் ஜிடி4 (நம்பர் 414) அஜித்குமார் ரேசிங்கிற்கு நிகழ்வில் போட்டியிடுகிறார்.



அஜித்தின் இந்த முடிவை துபாய் 24H சீரிஸ் அமைப்பாளர்களால் பாராட்டியுள்ளனர். அஜித் அங்கு இருப்பது போட்டிக்கு கூடுதல் உற்சாகத்தையும் தருகிறது. தன்னுடைய இரு அணிகளுக்காகவும் அஜித் களத்தில் இருப்பது அங்கிருக்கும் ரசிகர்களையும் உற்சாகப்படுத்துவதாக அமைந்துள்ளது.

 


மோட்டார் ஸ்போர்ட் தொடர்ந்து பிரபலமடைந்து வருவதால், அஜித்குமாரின் அர்ப்பணிப்பு ரசிகர்களுக்கு இன்ஸ்பிரேஷனாக மாறியுள்ளது. தான் ஏற்றிருக்கும் இந்த இரண்டு பொறுப்புகளையும் சரியாக செய்ய அவர் எடுத்திருக்கும் இந்த முடிவு ரசிகர்களுக்கு நிச்சயம் மகிழ்ச்சி தரக்கூடியது என்பது உறுதி.


*டீம் அஜித்குமார் ரேசிங்*

No comments:

Post a Comment