Featured post

E5 என்டர்டைன்மெண்ட் சார்பில் காமாட்சி* *ஜெயகிருஷ்ணன் தயாரிக்கும் படம்

 *E5 என்டர்டைன்மெண்ட் சார்பில் காமாட்சி* *ஜெயகிருஷ்ணன் தயாரிக்கும் படம் 'பேரன்பும் பெருங்கோபமும்'.*  'இசை ஞானி' இளையராஜா இசை...

Monday, 13 January 2025

இந்தியாவின் கலாச்சார அடையாளமாக வேட்டியை கொண்டாடும் ராம்ராஜ் காட்டன்

 இந்தியாவின் கலாச்சார அடையாளமாக வேட்டியை கொண்டாடும் ராம்ராஜ் காட்டன்

நடிகர் அபிஷேக் பச்சன், சென்னையின் எப்சி கால்பந்து அணி இணைந்து நடித்துள்ள புதிய விளம்பரம் வெளியீடு


சென்னை, ஜனவரி 13, 2025:பாரம்பரிய மற்றும் கலாச்சார ஆடைகள் உற்பத்தியில் இந்தியாவின் முன்னணி பிராண்டாக திகழும் ராம்ராஜ் காட்டன், நமது கலாச்சார பாரம்பரியத்தை மேம்படுத்துவதில் எப்போதும் முன்னிலை வகித்து வருகிறது. வேட்டிகள் மற்றும் பாரம்பரிய ஆடைகளின் ஒப்பற்ற பிராண்டாக திகழும் ராம்ராஜ் காட்டன் தற்போது அதன் புதிய விளம்பரத்தை அறிமுகம் செய்துள்ளது. இதில் பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் மற்றும் சென்னையின் எப்சி கால்பந்து அணியின் வீரர்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த விளம்பரம் பல்வேறு பிராந்திய மொழிகளில் பத்திரிக்கை, டிஜிட்டல் தளங்கள் மற்றும் தொலைக்காட்சிகளிலும் வெளியிடப்பட்டு உள்ளது.


இந்த புதிய விளம்பரம் குறித்து ராம்ராஜ் காட்டன் நிறுவனர் மற்றும் தலைவர்  கே.ஆர். நாகராஜன் கூறுகையில், எங்கள் நிறுவனத்தைப் பொறுத்தவரை பாரம்பரிய இந்திய ஆடைகளை அனைவரும் அணிய வேண்டும் என்பதை ஊக்குவித்து வருகிறோம். பாரம்பரியத்தின் அடையாளமாக திகழும் வேட்டிக்கு எங்கள் பிராண்ட் துவங்கப்பட்டதில் இருந்து முக்கியத்துவம் அளித்து வருகிறோம்.  இளைய தலைமுறையினருக்கு வேட்டியை கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக அதில் பல்வேறு புதுமைகளை புகுத்தி அறிமுகப்படுத்துவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம், பாரம்பரியத்தில் வேரூன்றி, நேர்த்தியையும் பாணியையும் வெளிப்படுத்தும் ஒரு வெளிப்பாடாக அதை மாற்றி உள்ளோம். நமது கலாச்சார வேர்களைப் புதுப்பிக்கவும் மேம்படுத்தவும் நாங்கள் தொடர்ச்சியாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். மேலும் இந்த விளம்பரம் பாரம்பரியமும் நவீனமும் இணைந்து இருப்பது போன்று எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.


மேலும் கே.ஆர். நாகராஜன் கூறுகையில், வேட்டி என்பது வெறும் தென்னிந்திய உடை மட்டுமல்ல; அது இந்தியாவின் பன்முகத்தன்மை வெளிப்படுத்தும் கலாச்சாரத்தின் பிரதிபலிப்பாகும். காலத்தால் அழியாத இந்த ஆடை, மாநிலங்கள் மற்றும் தலைமுறைகளைக் கடந்து மக்களை எவ்வாறு இணைக்கிறது என்பதையும், வேற்றுமையிலும் ஒற்றுமையைக் வெளிப்படுத்தும் வகையில் நடிகர் அபிஷேக் பச்சன் மற்றும் சென்னையின் எப்சி கால்பந்து அணியுடன் இணைந்து நாங்கள் இந்த புதிய விளம்பரத்தை வெளியிட்டுள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார். 


இந்த தொலைக்காட்சி விளம்பரம் குறித்து இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பி.ஆர். அருண் ஈஸ்வர் கூறுகையில், இந்தியாவின் பல்வேறு கலாச்சாரம் மற்றும் மரபுகளைப் பிரதிபலிக்கும் வகையில், 4,000க்கும் மேற்பட்ட தனித்துவமான ஆடைகளில் வேட்டியும் முக்கியத்துவம் பெறுகிறது. அதை கொண்டாடும் வகையில், இளம் தலைமுறையினர் வேட்டி கட்டுவதை பெருமையாக கருத வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு இந்த விளம்பரத்தை நாங்கள் எடுத்துள்ளோம். 


காலத்தால் அழியாத மற்றும் எந்த காலத்திற்கும் ஏற்ற வேட்டியை பாரம்பரிய நிகழ்ச்சிகளில் அவர்கள் அணிந்து கொள்ளும் வகையில், நவீன பேஷனுடன் வழங்கி வருவதால், முக்கிய நிகழ்ச்சிகளின் அவர்களின் விருப்பமான ஆடையாக அது மாறும் என்று நாங்கள் நம்புகிறோம் என்றும் அவர் தெரிவித்தார். 


இந்த தொலைக்காட்சி விளம்பரம், கலாச்சாரப் பெருமையினை வெளிப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது. இதில், அபிஷேக் பச்சன் தனது நண்பரின் வீட்டிற்கு ஒரு விருந்துக்காக ராம்ராஜ் காட்டன் வேட்டி மற்றும் சட்டையுடன் வருகிறார். சென்னையின் எப்சி கால்பந்து அணியின் உரிமையாளரான அவரையும் அவரது அணியையும், விருந்தினர்கள் அவர் அணிந்துள்ள வேட்டி மற்றும் சட்டையை பார்த்து கிண்டல் செய்கின்றனர்.  ஆனால் அதற்கு அபிஷேக் பச்சன் நகைச்சுவையாக, பதில் அளிக்கிறார்.  


அதேபோல, சென்னையின் எப்சி அணியிலும் உள்ள வீரர்கள் கூட, வெவ்வேறு நகரங்களைச் சேர்ந்தவர்கள் என்பதையும் அவர் கூறுகிறார், வேட்டி தென்னிந்தியாவிற்கு மட்டும் தனித்துவமானது அல்ல என்றும், அது நாட்டின் கூட்டு பாரம்பரியத்தின் பிரதிபலிப்பு என்றும், ஒவ்வொரு மாநிலமும் காலத்தால் அழியாத வேட்டிக்கு அதன் தனித்துவமான அழகைச் சேர்க்கிறது என்றும் கூறுவதுபோல இந்த விளம்பரம் எடுக்கப்பட்டு உள்ளது. 


"ராமராஜ் காட்டன் உடன் அபிஷேக் பச்சன் காலத்தால் அழியாத நேர்த்தியையும் கலாச்சாரத்தையும் கொண்டாடுகிறார்" என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த விளம்பரம் பல்வேறு மொழிகளில் பத்திரிக்கை, டிஜிட்டல் ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சிகள் என, நாடு முழுவதும் வெளியிடப்பட்டு உள்ளது.



Video link: https://youtu.be/387ItkDLr8A

No comments:

Post a Comment