Featured post

En Kadhale- Announcement of Release Date

 *En Kadhale-  Announcement of Release Date.* Sky wanders Entertainment, produced, written and directed by Jayalakshmi under the banner Sky ...

Saturday, 25 January 2025

நடிகை *பாயல் ராஜ்புத்* நடிக்கும் பான் இந்தியா படம்...

 நடிகை *பாயல் ராஜ்புத்* நடிக்கும் பான் இந்தியா படம்...







இயக்குனர் *முனி* இயக்கத்தில் நடிகை *பாயல் ராஜ்புத்* நடிக்கும் பான் இந்தியா படம் இன்று பூஜையுடன் பிரம்மண்டாமாக துவங்கியது...


*பாயல் ராஜ்புத்* முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் *வெங்கடலச்சிமி* படம்  பிரமாண்டமான தொடக்க விழாவுடன் ஆரம்பிக்கப்பட்டது.


▪️ முனி இயக்க, பான் இந்தியா படமாக ஆறு மொழிகளில் வெளியாகிறது. 

▪️ ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் தொடங்கப்பட்டது.


பழங்குடி பெண் ஒருத்தி  பழிதீர்க்கும் அதிரடி ஆக்‌ஷன் படம். 


RX 100 படத்தில் கவனம் பெற்று,  மங்களவாரம் படத்தில்  ரசிகர்களின் இதயங்களை நடிப்பால் வென்ற  திறமையான நடிகை பாயல் ராஜ்புத், தனது வரவிருக்கும் திரைப்படமான வெங்கடலச்சிமி மூலம் பான்-இந்தியா நடிகையாக அடுத்த கட்டத்திற்கு செல்கிறார். ஆறு மொழிகளில் வெளியாகும் இந்தப் படத்தின் மூலமாக இந்திய அளவில்  பரந்துபட்ட பார்வையாளர்களின்  கவனத்தைப் பெற வாய்ப்புண்டு. முனி இயக்கத்தில் ராஜா மற்றும் என். எஸ். செளத்ரி தயாரிக்கும் இப்படம் ஹைதராபாத்தில் உள்ள ராமநாயுடு ஸ்டுடியோவில்  பிரமாண்டமான பூஜையுடன் தொடங்கப்பட்டது.


படம் குறித்து இயக்குநர் முனி கூறுகையில், "வெங்கடலச்சிமியின் கதையை நான் கற்பனை செய்தபோது, பாயல் ராஜ்புத் முக்கிய கதாபாத்திரத்திற்குச் சரியான தேர்வாக இருந்தார். இந்த பான்-இந்தியா படம் தெலுங்கு, இந்தி, பஞ்சாபி, கன்னடம், மலையாளம் மற்றும் தமிழ் மொழிகளில் வெளியாகிறது. ஒரு பழங்குடி பெண்ணின் அதிரடியான பழிவாங்கும் ஆக்‌ஷன் படமாக, வெங்கடலச்சுமி இந்திய சினிமாவில் ஒரு புதிய அலையை உருவாக்க உள்ளது" என்றார்.


கதாநாயகி பாயல் ராஜ்புத் மிகுந்த

 உற்சாகத்துடன் , "மங்களவாரத்திற்குப் பிறகு, நான் பல ஸ்கிரிப்ட்களைக் கேட்டேன், ஆனால் எதுவும் என்னை ஈர்க்கவில்லை. இயக்குநர் முனி வெங்கடலச்சிமியை விவரித்தபோது, நான் ஈர்க்கப்பட்டேன். இந்தக் கதை மிகவும் அழுத்தமாக, அதிரடியுடன் இருப்பதால், மக்கள் என்னை 'வெங்கடலச்சிமி' என்று என்றென்றும் நினைவில் வைத்திருக்கக்கூடும். இந்த பான்-இந்தியா படம் எனது வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்" என்று கூறினார்.


தனது அழகு மற்றும் சிறப்பான நடிப்பாற்றலால்  இளைஞர்களின் விருப்பத்திற்குரியவராக மாறியுள்ள பாயல் ராஜ்புத், இப்போது இந்தப் படத்தில் ஒரு சவாலான மற்றும் தனித்துவமான பாத்திரத்தில் நடிக்கிறார்.  ஆரம்ப நிலையிலேயே திரைத்துறையில் இந்தப் படம் பரபரப்பான பேசுபொருளாகியுள்ளது.


படக்குழு விவரம்: 👇🏻


கதை திரைக்கதை இயக்கம்: *முனி*

இசை: *விகாஸ் பதிஷா*

தயாரிப்பாளர்கள்: *ராஜா, NS செளத்ரி*

மக்கள் தொடர்பு : *ஷேக்*




No comments:

Post a Comment