Featured post

En Kadhale- Announcement of Release Date

 *En Kadhale-  Announcement of Release Date.* Sky wanders Entertainment, produced, written and directed by Jayalakshmi under the banner Sky ...

Saturday, 11 January 2025

காதலிக்க நேரமில்லை” படத்தின் முன் வெளியீட்டு விழா

 *“காதலிக்க நேரமில்லை” படத்தின் முன் வெளியீட்டு விழா!!*












ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில், இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் ரொமான்ஸ் திரில்லராக உருவாகியுள்ள  திரைப்படம் “காதலிக்க நேரமில்லை”. பொங்கல் கொண்டாட்டமாக ஜனவரி 14 அன்று இப்படம் திரைக்கு வருகிறது. இப்படத்தின் வெளியீட்டை ஒட்டி, படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து, படம் குறித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். 


இந்நிகழ்வினில்… 


ரெட் ஜெயன்ட் மூவீஸ் சார்பில் அர்ஜூன் துரை பேசியதாவது....

காதலிக்க நேரமில்லை ஜனவரி 14 ரிலீஸாகிறது. ஜெயம் ரவி சார் நீண்ட காலம் கழித்து திரையில் ரொமான்ஸ் செய்துள்ளார். பார்க்க மிக நன்றாக உள்ளது. நித்யா மேனன் ரொம்ப செலக்டிவாக தான் கதாப்பாத்திரங்கள் செய்கிறார். திருச்சிற்றம்பலம் படத்திற்குப் பிறகு, இந்தப்படம் மிக முக்கியமானதாக இருக்கும். ஜெயம் ரவி, நித்யா மேனன் ஜோடி உங்களைக் கவர்வார்கள். வினய் மிக வித்தியாசமான ரோல் செய்துள்ளார். அனைவரும் நன்றாக நடித்துள்ளனர். கிருத்திகா எல்லோரும் பார்த்து ரசிக்கும்படி அருமையான ரொமான்ஸ் படம் தந்துள்ளார். அனைவரும் படம் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி. 


கலை இயக்குநர் சண்முகராஜா பேசியதாவது....

என்னுடைய முதல் மேடை இது. இந்த இடத்திற்கு வர ரொம்ப கஷ்டப்பட்டுள்ளேன். என்னை நம்பி இப்படத்தைத் தந்த கிருத்திகா மேடமிற்கு நன்றி. படம் மிகச் சிறப்பாக வந்துள்ளது,. அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி. 



ஒளிப்பதிவாளர் கேவ்மிக் ஆரி பேசியதாவது...

2 வருடத்திற்கு முன் என்னிடம் இந்த திரைக்கதை தந்தார் கிருத்திகா. சில பக்கங்கள் படித்துவிட்டு அவரிடம் நிறையப் பேசினேன். அவர் எப்படி இந்த திரைக்கதை எழுதினார் என ஆச்சரியமாக இருந்தது. ஜெயம் ரவி   சார் சிங்கப்பெண்களின் படைப்பு. ஜெயம் ரவி மிக மெச்சூர்டான பெர்ஃபார்மன்ஸ் தந்துள்ளார். நித்யா மேனன் பெர்ஃபெக்டான பெர்ஃபார்மன்ஸ் தந்துள்ளார். அவர் ஒரு ஏஞ்சலிக் ஆக்டர். வினயை உன்னாலே உன்னாலே பட்டத்திற்குப் பிறகு பார்க்கிறேன். மிக அழகாக நடித்துள்ளார். மிக அழகான படம் தந்துள்ளோம். பார்த்துவிட்டு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி. 


எடிட்டர் லாரன்ஸ் கிஷோர் பேசியதாவது... 

"காதலிக்க நேரமில்லை" ரொம்ப ஸ்பெஷலான படம், எனக்கு ரொம்ப பிடிச்ச ஜானர். கிருத்திகா மேடமுக்கும் எனக்கும் பெரிய ஜர்னி. மேடம் கதை எழுதியபோதே ரொம்ப போல்டா மெச்சூர்டா, இதை எழுதியுள்ளீர்கள் என்றேன். அதை விஷுவலாக அவர்கள் எடுத்திருந்ததைப் பார்த்த போது, இன்னும் ஆச்சரியப்பட்டேன். ரொம்பவும் மெச்சூர்டாக படம் எடுத்திருந்தார்கள். மேடம் எடுத்த படத்திலேயே இது தான் பெஸ்ட். எடிட்டிங்கில்   எனக்கு  நிறைய ரெபரென்ஸ் தந்தார்கள். மிக அற்புதமான நடிகர்கள், ஜெயம் ரவி, நித்யா மேனன், வினய் சார் மூவருக்கும் நான் பயங்கர ஃபேன். பானு, படத்தில் ஒரு இடத்தில் அட்டகாசமாக நடித்துள்ளார். தொழில் நுட்ப கலைஞர்கள் எல்லோரும் முழு உழைப்பைத் தந்துள்ளனர். எல்லா வேலையும் முடிந்த பிறகு தலைவன் ஏ ஆர் மியூசிக் பார்த்தேன் வேற லெவவில் இருந்தது. ஒரு நல்ல படம் தந்துள்ளோம் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி. 


நடிகை T J பானு பேசியதாவது....

காதலிக்க நேரமில்லை, இந்தக்கதையை மிக அன்பாக, மிக இயல்பாக என்னிடம் சொன்னார்கள், எனக்கு மிக அருமையான கேரக்டர். எல்லோரும் ரொம்ப ஃபிரண்ட்லியா இந்தப்படம் செய்தோம். கிருத்திகா மேடமிற்கு நன்றி. அவர் கன்வின்ஸ் செய்யாமல் இருந்திருந்தால், இந்தப்படம் செய்திருக்க மாட்டேன். படத்தை அட்டகாசமாக எடுத்துள்ளார். அனைவரும் பாருங்கள் நன்றி. 



நடிகர் வினய் பேசியதாவது....

பட இயக்குநர் கிருத்திகா எனக்கு மிக வித்தியாசமான ரோல் தந்துள்ளார். நான் எப்போதும் இயக்குநரைச் சார்ந்து தான் இருப்பேன். என் கேரியரில் முதல் முறையாகப் பெண் இயக்குநர் படத்தில் நடித்துள்ளேன். மிக அட்டகாசமாக இயக்கியுள்ளார். செட் அவ்வளவு ஜாலியாக இருந்தது. செட்டை அவர் கண்ட்ரோல் செய்த விதம் வியப்பைத் தந்தது. சின்ன சின்ன நகைச்சுவை காட்சிகள் வைத்து சமூக கருத்துக்கள் சொல்லியுள்ளார். இந்தப்படம் மூலம் ஏ ஆர் ரஹ்மானை முதன் முதலில் சந்தித்தேன். டிஜே பானுவை இந்தப்படத்தில் சந்தித்தேன். மிக அற்புதமான நடிகை. ஜெயம் ரவி மிக நல்ல நடிகர். எனக்கு டான்ஸ் ஆடவே வராது. ஆனால் ரவி மிக அழகாக நடனம் ஆடுகிறார். ஒளிப்பதிவாளர் எங்கள் எல்லோரையும் அழகாகக் காட்டியுள்ளார். படம் மிக நன்றாக வந்துள்ளது அனைவருக்கும் நன்றி. 



நடிகை நித்யா மேனன் பேசியதாவது....

எப்போதும் நான் கதை கேட்கும் போது, இந்தக்கதை அப்படியே திரையில் வருமா ? எனும் சந்தேகம் இருக்கும். இப்படத்தில் அது அற்புதமாக வந்துள்ளது. கிருத்திகா எனக்கு நல்ல ஃப்ரண்ட்.  அவர் ஒரு ரைட்டராக, இயக்குநராகக் கலக்கியுள்ளார். இந்த செட்டில் அனைவருமே எந்த ஈகோ இல்லாமல் இயல்பாக இருந்தார்கள், படம் நன்றாக வர அதுவும் காரணம். இது ரோம் காம் இல்லை நிறைய டிராமா படத்தில் இருக்கிறது. கிருத்திகா அதை அருமையாகக் கையாண்டுள்ளார்.  இந்தப்படம் செய்தது எனக்குப் பெருமை. படம் எனக்குப் பிடித்துள்ளது, உங்களுக்கும் பிடிக்கும். பொங்கலுக்கு வருகிறது, படம் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி. 



நடிகர் ஜெயம் ரவி பேசியதாவது....

மிக அழகான மேடை இவர்களுடன் வேலை பார்த்தது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த அழகை மிக அழகாகப் படம்பிடித்துள்ளார் இயக்குநர். டைட்டிலே அட்டகாசமாக இருந்தது. கிளாசிக் பட டைட்டில் கிடைத்தது மகிழ்ச்சி. படத்தில் நித்யா மேனன் பேருக்குப் பிறகு ஏன் உங்கள் பெயர் எனக் கேட்டார்கள், என் மீதான கான்ஃபிடண்ட் தான். ஏன் கூடாது திரை வாழ்க்கையில் நிறைய விசயங்களை உடைத்துள்ளேன் இது மட்டும் ஏன் கூடாது. ஷாருக்கான் சார் பார்த்துத் தான் இந்த முடிவை எடுத்தேன். பெண்கள் இல்லாமல், நம் உலகம் இல்லை அவர்கள் இல்லாமல் நாம் இல்லை இனி பெண் இயக்குநர்கள் படத்தில் இதை ஃபாலோ செய்வேன். எனக்கு மிக கஷ்டமான காலம் இருந்தது, நான் நடித்த படங்கள் ஓடவில்லை,  நான் என்ன தப்பு செய்தேன் என யோசித்தேன். என் மீது தவறு இல்லாதபோது ஏன் துவண்டு போக வேண்டும் எனத் தோன்றியது. அடுத்த வருடமே என் மூன்று படம் ஹிட். துவண்டு போவது தோல்வியில்லை, விழுந்தால் எழாமல் இருப்பது தான் தோல்வி. நான் கண்டிப்பாக இந்த  வருடம் மீண்டு வருவேன். அடுத்தடுத்து மிக நல்ல வரிசையில் படம் செய்து வருகிறேன். காதலிக்க நேரமில்லை, பாலசந்தர் சார் தன்னுடைய படங்களில்  பல விசயங்களை சர்வசாதாரணமாக உடைத்திருப்பார். அதே போல் ஜென் ஜி தலைமுறையில் கிருத்திகா அதைச் செய்துள்ளார். இது யூஏ சர்டிபிகேட் படம் அனைவரும் குடும்பத்துடன் வந்து பார்த்து, ரசியுங்கள் நன்றி. 



இயக்குநர் கிருத்திகா உதயநிதி பேசியதாவது... 

மீடியா நண்பர்கள் எனக்கு எப்போதும் ஆதரவு தந்துள்ளீர்கள், இந்த படத்திற்கும் ஆதரவு தாருங்கள். ஜெயம் ரவியிடம் முதன் முதலில் கதை சொன்ன போது, நார்மலாகவே எல்லா ஹீரோக்களும் கதை சொன்னால்,  எத்தனை கன்ஸ்  வரும்,  எத்தனை கத்தி, எத்தனை சண்டை வரும் எனக் கேட்பார்கள், ஆக்சன் பட ஹீரோக்கள் மற்ற ஜானர் படம் பண்ணத் தயங்குவார்கள், நான்  நம் படத்தில் ஒரு சின்ன கத்தி கூட இல்லை என்று சொன்னேன். ஆனால் நான் செய்கிறேன் என்று என்னை நம்பி வந்தார். எந்த இடத்திலும் அவர் யோசிக்கவே இல்லை. மிக அருமையாக நடித்துள்ளார். அவர் என்னை பாலசந்தர் சாருடன் ஒப்பிட்டது ரொம்ப கூச்சமாக உள்ளது. நான் அவரின் பெரிய ஃபேன், அவருடன் ஒப்பிட்டது மகிழ்ச்சி. நித்யாமேனன் அவர் எப்போதும் ரொம்ப செலெக்ட்டிவாக, கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்த கதையைச் சொல்வதற்கு முன்னே, கொஞ்சம் தயங்கினேன். அவர் ஒத்துக் கொள்வாரா இல்லையா? என்ற தயக்கம் இருந்தது. ஆனால் அவர் கேட்டவுடன் நான் செய்கிறேன் என்றார்.  மிக அட்டகாசமாக நடித்திருக்கிறார். வினய் இந்த கேரக்டர் பற்றிச் சொன்ன போது, நான் செட்டாவேனா? எனத் தயங்கினார், ஆனால் சிறப்பாகச் செய்துள்ளார். பானு சின்ன கேரக்டர் தான்,  அவர் முதலில் ஒத்துக்கொள்ளவில்லை, என் டீம் வேறு பலரைக் காட்டினார்கள், ஆனால் எனக்கு யாரும் செட்டாகவில்லை கடைசி வரை பானு தான் என் மனதில் இருந்தார். அவர் நான் விட மாட்டேன், என நடிக்க ஒத்துக்கொண்டார். யோகிபாபு வந்தாலே ஷூட்டிங்க் ஸ்பாட் ஜாலியாக இருக்கும். யோகிபாபு இல்லாமல் தமிழ் படம் எடுக்க முடியாது, அவரும் சின்ன ரோல் செய்துள்ளார். இந்தப்படம் விஷுவலாக  நன்றாக  இருக்கக் காரணம் கேவ்மிக் தான் அத்தனை உழைத்துள்ளார், எடிட்டிங்கில் கிஷோர் நிறையச் செய்துள்ளார். நானும் அவரும் எடிட்டிங்க் டேபிளில் தான் சினிமா நிறையக் கற்றுக்கொண்டோம். ஏ ஆர் ரஹ்மான் சார் பற்றி சொல்ல நிறைய இருக்கிறது. மியூசிக்கில் கரக்சன் எதுவாக இருந்தாலும் சொல்லுங்கள் என்பார், அவர் இசையைப் பற்றி  எப்படி கருத்துச் சொல்ல முடியும், அவர் ஒரு லெஜெண்ட் என்பது அவரே உணராமல் இருக்கிறார். தயாரிப்பு, என் சொந்த தயாரிப்பு எனப் பலரும் நினைத்துக் கொள்கிறார்கள், ஆனால் ஒவ்வொன்றிற்கும் நான் கணக்கு சொல்ல வேண்டும், நான் தயாரிப்பாளர் ஃப்ரண்ட்லி இயக்குநர். இப்படம் என் கனவு நனவானதாக அமைந்துள்ளது, உங்கள் அனைவருக்கும் பிடிக்குமென நம்புகிறேன் நன்றி.  



இயக்குநர் கிருத்திகா உதயநிதியின் வித்தியாசமான திரைக்கதையில், ஒரு மாறுபட்ட காதல் காவியமாக உருவாகும் இப்படத்தில் முன்னணி நட்சத்திர நடிகர் ஜெயம் ரவி நாயகனாக நடிக்கிறார், நித்யா மேனன் நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் நடிகர்கள் வினய், யோகிபாபு, T J பானு, லால், ஜான் கொகேய்ன், லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 


ரெட் ஜெய்ன்ட் மூவீஸ்  சார்பில்  பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தின் தயாரிப்பு பணிகளை இணைத் தயாரிப்பாளர் திரு செண்பகமூர்த்தி செய்துள்ளார். இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். U கேவ்மிக் ஆரி ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்புப் பணிகளை லாரன்ஸ் கிஷோர் செய்துள்ளார்.  

  


ஜனவரி 14 பொங்கல் கொண்டாட்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

No comments:

Post a Comment