Poorvegam Movie Review
ஹலோ மக்களே இன்னைக்கு பூர்வீகம் படத்தோட review தான் பார்க்க போறோம். நம்ம நாட்டுக்கு விவசாயம் எவ்வளவு முக்கியம் என்றது உங்க எல்லாருக்கும் நல்லா தெரியும். அதோட முக்கியத்துவத்தை சொல்றதா தான் இந்த படம் அமைச்சிருக்கு னு நம்ம சொல்லலாம். இந்த படத்தை ஜி krishanan தான் இயக்கி இருக்காரு அதுக்கு அப்புறம் ப்ரெய்ன் டச் ஃபிலிம் ஃபேக்டரி டாக்டர் ஆர் முருகானந்த் இந்த படத்தை produce பண்ணிருக்காரு. இந்த படத்துல கதிர், மியா ஸ்ரீ தான் lead role ல நடிச்சிருக்காங்க. இவங்களாலோட சேந்து போஸ் வெங்கட், சங்கிலி முருகன், இளவரசு, YSD சேகர், சூசன், ஶ்ரீ ரஞ்சனி, ஷாஸ்னா லாம் நடிச்சிருக்காங்க. இந்த படத்தோட shooting அ பாத்தீங்கன்னா மெயின் அ தஞ்சாவூர் , மாயவரம், அரியலூர் அப்புறம் சென்னை ல தான் நடிச்சிருக்காங்க.
Poorvegam Movie Video Review: https://www.youtube.com/watch?v=GKRzdu0pywc
ஒரு காலத்துல விவசாயம் தான் எல்லாருக்குமே தொழிலா இருந்தது காலப்போக்கில நல்ல வருமானம் கிடைக்கணும் நல்ல காலேஜ்ல இல்ல நல்ல ஸ்கூல்ல படிக்கணும்ன்றதுக்காக எல்லாருமே தன்னுடைய சொந்த கிராமத்தை விட்டுட்டு நகரத்துக்கு வந்த செட்டில் ஆயிட்டாங்க. அதனாலேயே அவங்களோட மெயின் ஆன தொழில் விவசாயத்தைப் பற்றி எதுவுமே தெரியாம இருந்துட்டாங்க. சொல்லப்போனா நகரத்தில் வந்து தங்குன எல்லோருக்குமே அவங்களோட பூர்வீக தொழிலான விவசாயத்தை அடியோடு மறந்துட்டாங்கன்னு தான் சொல்லணும். இந்த மாதிரி ஒரு அடிப்படையில தான் இந்த படத்தோட கதை அமைஞ்சிருக்கு.
இப்போ வாங்க இந்த படத்தோட கதைக்குள்ள போவோம். bosevenkat விவசாயி அ இருந்தாலும் தன்னோட பையன் கதிரை நல்ல படிக்க வச்சு ஒரு governement job ல சேர வைக்கணும்னு ஆசை படுறாரு. அப்பா ஓட ஆசை படியே city க்கு வந்து நல்ல படிச்சு ஒரு government job ல சேருறாரு. இது மட்டும் கிடையாது கதிர் ஒரு பெரிய பணக்காரனோட பொன்னையும் கல்யாணம் பண்ணிக்குறாரு. கடைசியா கதிர் சொந்தமா chennai ல வீடு கட்டி அப்பா அம்மா வ கவனிக்க முடியாம city லேயே settle ஆகிடுறாரு. என்னதான் bose venkat தன்னோட பையனோட வெற்றி க்கு சந்தோஷப்பட்டாலும் முன்னாடி மாதிரி தன்னோட பையன் கிட்ட பேச முடியல அதோட கதிர் கிட்ட இருந்து ரொம்ப தூரமா விலகி இருக்கற மாதிரி ஒரு சூழல் வருது. இப்படி படிப்புக்காகலாவும் வேலைக்காகவும் சென்னை க்கு வந்த கதிர் தன்னோட அப்பா அம்மாவை தன்னோட வேரு என்னனு புரிஞ்சுகிட்டு மனம் மாரி வருவாரா இல்லையான்றது தான் இந்த படத்தோட கதையா இருக்கு.
இப்பதான் நம்ம நாட்டுல விவசாய நிலம் ரொம்ப கம்மி ஆயிட்டே வருதா ஆனா மக்கள் தொகை கூடிகிட்டே தான் இருக்கு. இப்படி இருந்தும் நம்ம விவசாயத்தை உதாசீன படுத்தோம்னா கண்டிப்பா எதிர்காலத்துல உணவு க்கு பஞ்சம் வர வாய்ப்பு இருக்கு. இன்றய தலைமுறையினர் கண்டிப்பா இதுக்கு ஒரு முடிவு கண்டுபிடிச்ச தான் எல்லாராலயும் நிம்மதியா சந்தோசமா இருக்க முடியும். ஒருத்தன் எவ்ளோ பெரிய பணக்காரனா இருந்தாலும் சரி எவ்ளோ பெரிய ஏழையா இருந்தாலும் சரி உயிர்வாழுறதுக்கு விவசாயம் வேணும். அதா தான் இந்த படத்துல ஒரு சமூக கருத்த கொண்டு வந்திருக்காங்க.
இந்த படத்தை பார்க்கும்போது நமக்கு மாயாண்டி குடும்பத்தார் முத்துக்கு முத்தாக அந்த மாதிரி ஒரு படத்தோட ஃபீல் தான் நமக்கு வருது ஏன்னா விவசாயத்தை ஓட சேத்து பேமிலி செண்டிமெண்ட் யும் இந்த படத்துல கொடுத்து இருக்காங்க. அப்பா அம்மாவை பார்த்துகிறது, தன்னோட பேமிலி குழந்தைகளை பாத்துகிறது னு familysentiments ஓட கதை நகர்து னு சொல்லலாம். ஒரு family குள்ள நடக்கற மனப்போராட்டம், marriage ஆனதுக்கு அப்புறம் நடக்கற விஷயங்கள், நம்மோட பூர்விகம் இல்லனா அவங்களோட குடும்பத்தோட வேர் அ மறந்துட்டு போறதுனால பிற்காலத்துல வர ஆபத்து னு ரொம்ப வித்யாசமா சொல்லிருக்காங்க. bose venkat தான் அப்பாவா நடிச்சிருக்காரு இவரு ஒரு விவசாயி இவருக்கும் இவரோட wife க்கு இருக்கற ஒரே பையன் தான் கதிர். இவரோட acting அ பாத்தீங்கன்னா ரெண்டு விதமா அமைச்சிருக்கும். ஒரு சின்ன கிராமத்துல இருக்கற பையன அதே சமயம் city ல செட்டில் ஆகிருக்க்ற ஒரு family man ஆவும் இருக்காரு. miyasri இவரோட wife அ அவங்க character அ செமயா perform பண்ணிருக்காங்க.
vijay mohan ஓட cinematography ஊர் ஓட அழகை நம்ம கண்ணுமுன்னாடி நிக்க வச்சுட்டாரு னு தான் சொல்லணும். chaanakkya ஓட music இந்த படத்தை இன்னொரு படி மேல எடுத்துட்டு போயிருக்கு னு தான் சொல்லணும். மொத்தத்துல படிச்சாலும் விவசாயத்தை மறந்துதுடாதிங்க சொல்ற படம் கண்டிப்பா இந்த படத்தை பாக்க மறந்துடாதீங்க.
No comments:
Post a Comment