Featured post

Pottuvil Asmin Recites Tribute Poem Before Vairamuthu at “Miller” Film Launch in Jaffna

 Pottuvil Asmin Recites Tribute Poem Before Vairamuthu at “Miller” Film Launch in Jaffna The launch of the Tamil film “Miller” in Jaffna wit...

Thursday, 30 January 2025

காதல் என்பது பொதுவுடமை* *படத்தின் டிரெய்லர் வெளியானது

 *காதல் என்பது பொதுவுடமை*

*படத்தின் டிரெய்லர் வெளியானது*



பிப்ரவரி 14  ல் திரைப்படம் வெளியாகிறது.

BOFTA G. தனஞ்ஜெயன்  வெளியிடுகிறார்.


இயக்குனர் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் 

லிஜோமோல், வினித், ரோகிணி, கலேஷ், தீபா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'காதல் என்பது பொதுவுடமை' .  

மனிதர்களுக்குள் காதல் வருவது  இயல்பானதாக இருந்தாலும்  காதலுக்கென்று வரைமுறைகளை வகுத்துவைத்துள்ள இந்த சமூகத்தில்  இயல்பானதாக இருக்கும் காதலுக்குள் மிகமுக்கியமான உளவியல் சிக்கலை பேசும் படமாக உருவாகியுள்ளது 'காதல் என்பது பொதுவுடமை'

நடிகர் வினித் பல வருடங்களுக்குப்பிறகு இந்தபடத்தில் நடித்திருக்கிறார்.


ரோகிணி, லிஜோமோல் , வினித் மற்றும் பலர் நடித்திருக்கும் இந்த படம் சர்வதேச திரைப்படவிழாக்களிலும் சிறந்த வரவேற்பையும் , அனைவரும் பார்க்க வேண்டிப ஒரு முக்ககிய படம் என்ற பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.


இன்று வெளியான  படத்தின் ரெய்லர் இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.


பிப்ரவரி 14 ல் வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தை  கிரியேட்டிவ் எண்டர்டெய்னர் & டிஸ்ட்டிபியூட்டர் (CEAD) சார்பில் G.தனஞ்ஜெயன் வெளியிடுகிறார்.

 https://youtu.be/zo75HMkj4u8?si=fQ0A1R9weLqtGdn2

No comments:

Post a Comment