Featured post

En Kadhale- Announcement of Release Date

 *En Kadhale-  Announcement of Release Date.* Sky wanders Entertainment, produced, written and directed by Jayalakshmi under the banner Sky ...

Friday, 17 January 2025

மத கஜ ராஜா - வை ராஜா- வாக கொண்டாடும் மக்களின்

 அனைவருக்கும் வணக்கம், 

மத கஜ ராஜா - வை

ராஜா- வாக கொண்டாடும் மக்களின் பேராதருடன் 100கோடி வசூலை எதிர்நோக்கி 



தமிழர் திருநாளாம் பொங்கல் அன்று வெளியான மத கஜராஜா திரைப்படம் மக்களின் பேர் ஆதரவுடன் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. 


12 ஆண்டுகளுக்குப் பிறகு இத்திரைப்படம் வெளியான போதும் மக்கள் அளித்த வரவேற்பில் பல திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகள் ஆகவும் இன்னும் பல திரையரங்குகளில் காட்சிகளை அதிகரித்தும் வருகின்றனர். 


மக்களின் பேராதருடன் 100கோடி வசூலை எதிர்நோக்கி


இதற்கெல்லாம் மிக முக்கியமான காரணம் திரைப்படம் நன்றாக இருந்தால் அதனை மக்கள் எப்போது வெளியானாலும் மக்களின் ஆதரவும் பாராட்டுகளும் கிடைக்கும் என்பதற்கு இப்படம் மிகப்பெரிய சாட்சியாக அமைந்துள்ளது. 


திரையுலகில் நல்ல திரைப்படங்கள் பல சமயங்களில் வெளியிட முடியாத சூழ்நிலையில் காலம் கடந்து வெளியாகி தோல்வியும் அடைந்துள்ளது உதாரணமாக இளைய தளபதி விஜய் அவர்கள் நடித்த உதயா என்கிற திரைப்படம் பல ஆண்டுகள் கழித்து வெளியான போது மக்களின் வரவேற்பு திரைப்படத்திற்கு கிடைக்கவில்லை. 


ஆனால் மதகஜராஜா அதற்கெல்லாம் விதிவிலக்கா அமைந்துள்ளது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர் எப்படி மக்களிடம் பிரசித்தி பெற்ற ஒரு நிகழ்வாக இருக்குமோ அதுபோல் மதகஜராஜாவும் குறிஞ்சி மலர் போல பிரசித்தி பெற்று வருகிறது. 


நீதித்துறையில் ஒரு ஆங்கில சொல் உண்டு " Justice denied is Justice delayed " என்பார்கள் அதேபோல் திரையுலைகளும் நல்ல கதைக்களம் கொண்ட திரைப்படங்கள் வெளியாவதில் தாமதம் ஏற்படுமாயின் அவை தோல்வி படமாக அமையும் என்பதையும் மாற்றி மதகஜராஜா தொடர் வெற்றியைப் பெற்று வருகிறது அதற்கெல்லாம் காரணம் தமிழக மக்களின் வரவேற்பு மட்டுமே.

No comments:

Post a Comment