Featured post

Sony Entertainment India releases trailer of action-thriller, Sisu: Road to Revenge; releases on

 *Sony Entertainment India releases trailer of action-thriller, Sisu: Road to Revenge; releases on 21st November, 2025 in English, Hindi, Ta...

Thursday, 30 January 2025

ஃபேன்டஸி-ஹாரர், த்ரில்லர் திரைப்படமான அகத்தியா, வரும் பிப்ரவரி

 *"ஃபேன்டஸி-ஹாரர்,  த்ரில்லர் திரைப்படமான அகத்தியா,  வரும் பிப்ரவரி 28, 2025 அன்று  பிரமாண்டமாக , திரையரங்குகளில் வெளியாகும்  என அறிவிப்பு"*



ஜனவரி 30 2025 : மிகவும் எதிர்பாக்கப்பட்ட ஃபேன்டஸி-ஹாரர் த்ரில்லர், திரைப்படம் ‘அகத்தியா’ ,  ஜனவரி 31 2025 அன்று வெளியாகும்  என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ,  தற்போது பிப்ரவரி 28 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என திரைப்பட குழுவினர்களால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் விரிவான VFX வேலைகளை மேம்படுத்துவதில் தயாரிப்பு குழு கவனம் செலுத்துவதால் தாமதம் ஏற்படுகிறது, இது பார்வையாளர்களுக்கு  பிரமிப்பை ஏற்படுத்தும், அதுமட்டுமின்றி இது ஒரு புதுவிதமான அனுபவத்தை உறுதி செய்யும்.  உலகத் தரம் வாய்ந்த சினிமா காட்சியை  மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு இந்த தாமதம், என  பட குழுவினர்கள் தெரிவித்துள்ளனர்  .  


நட்சத்திர பட்டாளம்  மற்றும் Pan - India விவரங்கள் : 


பா.விஜய் இயக்கிய அகத்தியா படத்தில் ஜீவா, ராஷி கண்ணா, யோகி பாபு, அர்ஜுன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாகும் இப்படம், ஃபேன்டஸி-ஹாரர் விரும்பும் பார்வையாளர்களை கவர தயாராக உள்ளது.


புதுமையான சினிமா அனுபவம் :  அகத்தியா 


அகத்தியா , ஒரு திரைப்படம், என்பதை விட மேலானது - இது கற்பனை, திகில் மற்றும் ஆழமான , உணர்ச்சிகரமான கதைசொல்லல் ! ஆகியவற்றின் பிடிமான கலவையாகும். கண்கவர் காட்சியமைப்புகள், மனதைக் கவரும் இசையமைப்பு மற்றும் தீவிரமான கதையுடன், அகத்தியா திரைப்படம் சினிமா அனுபவங்களை மறுவரையறை செய்ய தயாராக உள்ளது.  பார்வையாளர்கள்  புதுவிதமாக மாறுபட்ட கற்பனைக் கூறுதல் மற்றும்  நீண்ட நாட்களுக்குப் பிறகு  ஒரு அழுத்தமான கதைக்களம் நிரம்பிய ஒரு எட்ஜ்-ஆஃப்-தி-சீட் த்ரில்லரை எதிர்பார்க்கலாம்.



தயாரிப்பாளர்களின் பார்வை : 


வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பாளர் டாக்டர் கே. ஐசரி கணேஷ்,    மற்றும் WAM India நிறுவனத்தின் தயாரிப்பாளர் அனீஸ் அர்ஜுன் தேவ்  தயாரிக்கும் இத்திரைப்படம் ,  பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுக்கும் என்பதில் எந்தவித மாற்றுகருத்தும் இல்லை.   காமெடி, திகில்  என பல சுவாரசிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.    பலவிதமான சவால்கள் மற்றும் எல்லைகளை கடந்து  திரைப்படத்தின் காட்சி கலைத்திறன் மேலோங்கி நிற்கிறது,  அதுமட்டுமின்றி ஒரு லட்சிய ஒத்துழைப்பை பிரதிபலிக்கிறது.   தயாரிப்புக் குழுவினர்களின்  உழைப்பால் இப்படம் உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களை ஈர்க்கும் இணையற்ற பிரம்மாண்டத்தின் காட்சிகளை தங்களுக்கு வழங்க காத்திருக்கிறது. 


ஃபேன்டஸி-ஹாரர்,  த்ரில்லர்  மற்றும் உணர்ச்சிகளின் தனித்துவமான கலவையுடன் ,  பாரம்பரிய வகைகளை தாண்டிய   அகத்தியா திரைப்படம் வரும் பிப்ரவரி 28 2025 அன்று  திரையிடப்படும் போது மறக்க முடியாத ஒரு அனுபவத்திற்கு தயாராகுங்கள்

No comments:

Post a Comment