Featured post

Manidhargal : A Night of Twists Begins With a Powerful First Look

 "Manidhargal : A Night of Twists Begins With a Powerful First Look" "Debut Director Raam indhra’s 'Manidhargal' Grab...

Wednesday, 1 January 2025

20 வருடங்களுக்குப் பிறகு ' 7ஜி ரெயின்போ காலனி 2' !

 20 வருடங்களுக்குப் பிறகு ' 7ஜி ரெயின்போ காலனி 2' !





 7ஜி ரெயின்போ காலனி 2 படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது!  


தமிழ் சினிமாவில் நெஞ்சை தொட்ட காதல் காவியமாக 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் '7ஜி ரெயின்போ காலனி' . செல்வராகவன் இயக்கமும் யுவன் சங்கர் ராஜாவின் இசையும் இணைந்து இப்போது வரை இப்படத்தில் பாடல்களும் படமும் நீங்கா இடத்தை தமிழ் சினிமாவில் பெற்று இருக்கிறது. 

இப்படம் வெளியாகி 20 வருடங்களை கடந்து வட்ட நிலையில் இதன் இரண்டாம் பாகத்தை இயக்குனர் செல்வராகவன் இயக்கி வருகிறார்.  தன் தனித்துவமான சினிமாவியல் மற்றும் உணர்ச்சி நிறைந்த கதைசொல்லலால் ரசிகர்களை மீண்டும் கவர இருக்கிறார். பிரபல தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம் மற்றும் ஸ்ரீ சூர்யா மூவிஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்கள். 

 முதல் பாகத்தில் நடித்த ரவி கிருஷ்ணா, இப்படத்திலும் தனது மைல்கல்லான கதாபாத்திரத்தில் மீண்டும் நடுக்க இருப்பதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அவருக்கு ஜோடியாக அன்னஸ்வரா ராஜன் கதாநாயகியாக நடிக்கிறார்.  


இவர்களுடன் ஜெயராம், சுமன் செட்டி மற்றும் சுதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கவிருக்கிறார்கள். 

முதல் பாகத்தில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, படத்தின் ஒளிப்பதிவாளராக ராம்ஜி பணிபுரிகிறார்.   


படம் குறித்து தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம் கூறியதாவது: “7ஜி ரெயின்போ காலனி ' முதல் பாகம் தமிழ் சினிமா வரலாற்றில் சிறப்பான இடத்தைப் பிடித்தது. இரண்டாம் பாகத்திலும் அதே எதிர்பார்ப்பையும் மேஜிக்கையும் பூர்த்தி செய்ய  நாங்கள் எங்களது சிறப்பை கொடுத்து உழைத்து வருகிறோம்”  என்றார்.

No comments:

Post a Comment