Featured post

Vishnu Vishal Studioz Presents “Aaryan” – Grand Pre-Release Event

 *Vishnu Vishal Studioz Presents “Aaryan” – Grand Pre-Release Event !* Vishnu Vishal’s “Aaryan” Gears Up for Release on October 31 with a Sp...

Monday, 6 January 2025

ராக்கிங் ஸ்டார் யாஷ், தனது பிறந்த நாளை முன்னிட்டு “டாக்ஸிக் எ ஃபேரி டேல் ஃபார்

 *ராக்கிங் ஸ்டார் யாஷ், தனது பிறந்த நாளை முன்னிட்டு “டாக்ஸிக் எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன் அப்ஸ்” படத்தின், அசத்தலான கிளிம்ப்ஸை வெளியிடவுள்ளார்!*



*ராக்கிங் ஸ்டார் யாஷ் “டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன் அப்ஸ்” படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார், மேலும் அவரது பிறந்தநாளில் ஆச்சரியம் காத்திருப்பதாக உறுதியளித்துள்ளார் !!*

கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகை திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், அவரது நடிப்பில், மிகப்பெரும் எதிர்பார்ப்பிலிருக்கும்  “டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்” படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார். அதிரடி மாஸாக இருக்கும் போஸ்டர், யாஷின் பிறந்த நாளில், ஒரு பெரும் ஆச்சரியம் காத்திருக்கிறது என அறிவிக்கிறது. 


ராக்கிங் ஸ்டார் யாஷ் சமூக ஊடகங்களில் இந்த போஸ்டரைப் பகிர்ந்துள்ளார், போஸ்டரில் "நாயகனை கட்டவிழ்த்துவிடுகிறோம்..." என்ற டேக்குடன், யாஷ் வெள்ளை நிற டக்ஷீடோ ஜாக்கெட் மற்றும் ஃபெடோரா உடையில்  மறைவான நிழலில்  காட்சிப்படுத்தப்பட்டுள்ளார்,  புகை வளையத்தை, ஊதியபடி விண்டேஜ் காரில் சாய்ந்து நிற்கிறார். "இருத்தலியல் நெருக்கடி" என்ற வார்த்தைகள், ஒரு இருண்ட மற்றும் புதிரான பயணத்தைக் குறிக்கிறது.


இந்த போஸ்டர் சர்வதேச தரத்துடன்  அழகியலின் வடிவமாக அமைந்துள்ளது.  இந்தத் திரைப்படம் எந்த பாதையில் பயணிக்கும், இதன் கதைக்களம் என்னவாக இருக்கும், என்கிற ஆவலைத் தூண்டுகிறது.  வசீகரம் நிறைந்த ரகசிய செய்தியுடன் கூடிய போஸ்டர், 8-1-25 தேதி மற்றும் 10:25 AM, அன்று ரசிகர்களுக்கு ஆச்சரியம் காத்திருப்பதாக  உறுதியளிக்கிறது. 


https://x.com/TheNameIsYash/status/1876125454517821866?t=aaA1DareelotVxpPO-dUaw&s=19


"எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ் எனும் டேக் லைனுடன்,  உருவாகி வரும் டாக்ஸிக் திரைப்படம், இதுவரையிலான கதைசொல்லல் பாணியிலிருந்து மாறுபட்டு, புதிய ஜானரில்,  மிகப்புதுமையாக தயாராக உள்ளது. "நாயகனை கட்டவிழ்த்துவிடுதல்" என்ற சொற்றொடர் அபரிமிதமான சக்தி மற்றும் அவன் குணத்தின் சிக்கலான தன்மையைக் குறிக்கிறது. "இருத்தலியல் நெருக்கடி" பற்றிய யாஷின் குறிப்பு, வழக்கமான கதைசொல்லலின் எல்லைகளைத் தாண்டும்  ஒரு திரைப்படமாக இருக்குமென்பதை உறுதியளிக்கிறது.


ராக்கிங் ஸ்டார் யாஷ் பிறந்தநாள் நெருங்கி வரும் வேளையில், ரசிகர்கள் 2025 ஆம் ஆண்டில், யாஷின் தரிசனத்துக்காக மிகப்பெரும் எதிர்ப்பார்ப்புடன் உள்ளனர்.  “டாக்ஸிக்” பட  தயாரிப்பாளர்கள் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தளிக்கத் தயாராகி வருகின்றனர்.


KVN புரொடக்ஷன்ஸ் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் ஆகியவற்றின் கீழ் வெங்கட் K. நாராயணா மற்றும் யாஷ் இணைந்து தயாரிக்கும், டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ், சர்வதேச அளவில் புகழ்பெற்ற திரைப்படத் இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்குகிறார். சன்டான்ஸ் திரைப்பட விழாவில் தேசிய விருது மற்றும் குளோபல் ஃபிலிம்மேக்கிங் விருது உட்பட பல பாராட்டுக்களைப் பெற்ற கீது மோகன்தாஸ், இம்முறை மிகப்பெரிய பொழுதுபோக்கு திரைப்படத்தை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.

No comments:

Post a Comment