Featured post

Actor Karthi honours the Agricultural Community

 *Actor Karthi honours the Agricultural Community!* *Actor Karthi’s Uzhavan Foundation recognises and honours the icons in agriculture.* *Ac...

Tuesday, 7 January 2025

ஆத்வி சேஷுவின் ஸ்பை த்ரில்லர் G2 இன் அடுத்த அத்தியாயத்தில்

 *ஆத்வி சேஷுவின் ஸ்பை த்ரில்லர் G2 இன் அடுத்த அத்தியாயத்தில் நடிகை வாமிகா கபி இணைந்துள்ளார்  !!*

 வினய் குமார் சிரிகினீடி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும்  ஸ்பை த்ரில்லர் திரைப்படம் "G2'. தொடர் திரில்லர் திகில் படங்கள் மூலம் கலக்கி வரும் நாயகன் ஆத்வு சேஷ் இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் இம்ரான் ஹாஷ்மியுடன், தற்போது நாயகியாக பாலிவுட் முன்னணி நட்சத்திர  நடிகர்களுடன், G2 ஒரு பிரம்மாண்டமான பான் இந்தியத் திரைப்படமாக உருவாகிறது.



வாமிகா இப்படத்தில் ஆத்வி சேஷுவுக்கு எதிராக முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரது கதாபாத்திரம் உளவு பார்க்கும் இந்த திரைப்படத்தின் களத்தில், ஒரு புதிய ஆற்றல்மிக்க பாத்திரமாக இருக்கும்.  ரசிகர்களுக்கு முற்றிலும் புதிதான திரில் அனுபவமாக இப்படம் இருக்கும். 


சமீபத்தில் அதிவி சேஷுடன் ஒரு ஐரோப்பிய ஷூட்டிங் ஷெட்யூலை முடித்த வாமிகா, படத்தைப் பற்றி வெகு உற்சாகத்துடன் பகிர்ந்துகொண்டதாவது.... “ஜி 2 எனும் அற்புதமான திரை அனுபவத்தின்,  நம்பமுடியாத பயணத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். இந்த ஸ்பை உலகில் அடியெடுத்து வைத்தது சிலிர்ப்பான  மற்றும் சவாலான அனுபவமாக இருந்தது. மிகத் திறமையான நடிகர்கள் மற்றும் குழுவினருடன் பணிபுரிவது,  என் கதாபாத்திரத்திற்கு புதிய ஆற்றலைக் கொண்டுவர எனக்குப் பேருதவியாக அமைந்தது.  நாங்கள் உருவாக்கியுள்ள இந்த புதிய உலகை ரசிகர்கள் பார்வைக்குக் காட்ட, வெகு ஆவலுடன் உள்ளேன்.  


புதிரான உளவாளியாக மீண்டும் நடிக்கும் அதிவி சேஷ் நடிக்க, வாமிகா கபி மற்றும் இம்ரான் ஹாஷ்மியுடன் முரளி ஷர்மா, சுப்ரியா யர்லகட்டா மற்றும் மது ஷாலினி உட்பட ஒரு பெரிய நட்சத்திர நடிகர்கள் குழு இணைந்து நடிக்கின்றனர். 


பீப்பிள் மீடியா ஃபேக்டரி, அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் - மற்றும் ஏகே என்டர்டெயின்மென்ட்ஸ் ஆகியவற்றின் சார்பில் டி ஜி விஸ்வ பிரசாத் மற்றும் அபிஷேக் அகர்வால் தயாரித்துள்ள G2 திரைப்படம் தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் பான் இந்திய வெளியீடாக வெளியாகவுள்ளது.   பவர்ஹவுஸ் நடிகர்கள் மற்றும் ஸ்பை த்ரில்லர் வகையில் இதுவரை இல்லாத களத்தில் உருவாகியுள்ள கதையில், G2 சந்தேகத்திற்கு இடமின்றி முற்றிலும் புதிதான அனுபவமாக இருக்கும். 



G2 விரைவில் பெரிய திரைகளில் வரவிருக்கும் நிலையில், முற்றிலும் புதிய களத்திற்குள் பயணிக்கத் தயாராகுங்கள்!

No comments:

Post a Comment