Featured post

Manidhargal : A Night of Twists Begins With a Powerful First Look

 "Manidhargal : A Night of Twists Begins With a Powerful First Look" "Debut Director Raam indhra’s 'Manidhargal' Grab...

Thursday, 2 January 2025

மீண்டும் கம் பேக் கொடுக்கும் 'ஆரண்ய காண்டம் ' புகழ் யாஸ்மின் பொன்னப்பா

 மீண்டும் கம் பேக் கொடுக்கும் 'ஆரண்ய காண்டம் '  புகழ் யாஸ்மின் பொன்னப்பா 




'ஆரண்ய காண்டம்' படத்தின் மூலம் மக்களிடையே கவனம் ஈர்த்த நடிகை யாஸ்மின் பொன்னப்பா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையுலகுக்கு திரும்ப உள்ளார். மனோதத்துவத்தில் மேற்படிப்பை முடித்து திரும்பி இருக்கிறார். நடிகராகவும் தன்னை மேம்படுத்த பல பயிற்சிகளையும் எடுத்துக்கொண்டு தற்போது திரைத்துறையில் மீண்டும் தன்னை பிசியாக மாற்றிக்கொள்ள இருக்கிறார். 

கேமரா முன் நின்று நடித்த அந்த மேஜிக் தருணங்களை நான் மிகவும் மிஸ் செய்தேன். வித்தியாசமான கதைக்கலங்களுக்குள்ளும் மற்றும் ஏராளமான கதாபாத்திரங்களிலும் என்னை முழுமையாக இணைத்துக் கொண்டு நடிப்பில் இன்னும் பண்பட்ட நிலையை அடைய விரும்புகிறேன். இந்த இடைப்பட்ட காலத்தில் தமிழ் சினிமா இன்னும் ஆச்சரியமான கலங்களில் பயணிக்க துவங்கியிருக்கிறது. இதில் என் பங்களிப்பையும் இணைத்துக் கொண்டு என்னையும் மெருகேற்ற விரும்புகிறேன். பல அற்புதமான படைப்பாளிகளுடன் இணைந்து பணியாற்றவும் விரும்புகிறேன்" என்கிறார் கண்களில் கனவுகள் மின்ன. 


தன்னுடைய மனோதத்துவப் பின்னணியை சினிமாவிலும் பயன்படுத்தி நடிப்பில் அடுத்த பரிமாணத்தை எட்ட காத்திருக்கிறார் . படத்தில் எவ்வளவு நேரம் நடிக்கவிருக்கிறோம் என்பதை தாண்டி சில நிமிடங்கள் வந்தால் கூட தனக்கான கதாபாத்திரம் எவ்வளவு ஆழமாக உள்ளது , கதையில் தனது கதாபாத்திரம் எந்த அளவுக்கு முக்கியத்துவம் இருக்கும் என புரிந்து நடிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் யாஸ்மின் பொன்னப்பா.

No comments:

Post a Comment