Identity Movie Review
ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம identity ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். மலையாளம் ல ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ரன் ஆனதுக்கு அப்புறம் இப்போ இந்த படத்தை தமிழ் ல ரிலீஸ் பண்ணுறாங்க. akhil paul யும் anas khan யும் இயக்கி இருக்கற இந்த படத்துல tovino thomas யும் trisha வும் தான் lead role ல நடிச்சிருக்காங்க. இவங்கள தவிர்த்து Vinay Rai, Aju Varghese, Archana Kavi, and Shammi Thilakan லாம் நடிச்சிருக்காங்க. forensic படத்துக்கு அப்புறமா director யும் hero ஓட collaboration இந்த படம் ரெண்டாவுது. சோ வாங்க இந்த படம் எப்படி இருக்குனு பாப்போம்.
Identity Movie Video Review: https://www.youtube.com/watch?v=e7zMKhxURfI
மலையாளம் ல thriller படங்களுக்கு தனி ஆர்வம் மக்கள் காட்டுறாங்க னு தான் சொல்லணும். இந்த genre ல காட்டுற விஷயங்களுக்கு பின்னாடி ஒரு scientific ஓ இல்லனா psychological explanation கண்டிப்பா பின்னாடி இருக்கு னு காமிக்கறாங்க எக்காரணத்தை கொண்டும் logic இல்லாம இருக்க கூடாது ன்ற directors ஓட கவனம் நமக்கு நல்லாவே தெரியுது. அதா பக்கவா handle பண்ணி suspense யும் tension யும் கொண்டு வந்து audience க்கு அடுத்து என்ன நடக்க போகுது னு தெரியாம தவிக்க வைக்கிறது தான் இந்த genre படங்களோட வெற்றி னே சொல்லலாம். அந்த வகைல தான் identity படத்தோட directors குடுத்திருக்காங்க.
இந்த படத்தோட கதை என்னனா haran shankar அ நடிச்சிருக்காரு tovino thomas இவரோட குடும்பம் ரொம்ப toxic அ இவரை நடத்துனதுனால இவருக்கு சின்ன வயசுலயே ocpd ன்ற disorder ல பாதிக்கப்படுறாரு. இவரோட அம்மாக்கு sketch பண்ணுறது னா ரொம்ப பிடிக்கும் haran இந்த sketching அ தன்னோட அம்மாகிட்ட இருந்து கத்துக்கறாரு அதுமட்டுமில்லாம இந்த sketching ல popular யும் ஆகுறாரு. ரொம்ப வருஷம் கடந்து போயிடுது. haran யும் அவரோட family யும் kochi ல ஒரு apartment ல தாங்குறாங்க. அதே building ல தான் karanataka police CI allen jacob அ நடிச்சிருக்க vinay rai யும் investigative journalist alisha வ நடிச்சிருக்க trisha வும் அங்கேயே தாங்குறாங்க. actual அ ஜவுளி கடை ல வேலை பாத்துட்டு இருக்கற amar ன்ற ஒருத்தன மர்மமான ஆளு கொலை பண்ணிட்டு போயிடுவான். அந்த ஆலா alisha தான் பாத்திருப்பாங்க. இவங்களோட safety க்காக தான் trisha வ தன்னோட building ல தங்கவைக்கறாரு allen . allen க்கு haran ஓட sketching skills அ பாத்து alisha பாத்த அந்த ஆளு ஓட sketch அ வரைய சொல்லி கேட்குறாரு.
கதை போக போக alisha க்கு அந்த night ல நடந்த அந்த accident அ பாத்து face blindness ன்ற ஒரு விஷயத்துல பாதிக்க பட்டிருக்காங்க னு haran க்கும் allen க்கும் தெரிய வருது. alisha ஓட photographic memory இருக்கறதுனால கொலைகாரனோட physique எப்படி இருக்கும் ன்றது சரியாய் சொல்லிடுறாங்க ஆனா அவனோட முகம் எப்படி இருந்தது னு ஞாபகம் வரமாட்டீங்கத்து. அதுனால கொலைகாரனை கண்டுபிடிக்கிறது allen க்கு கஷ்டமா போயிடுது. விசாரணை எல்லாம் போக போக alisha witness பண்ண அந்த கொலையும் கொலை செய்யப்பட்டவனோட கதை என்னனு இவங்களுக்கு தெரிய வருது. இதுக்கு பின்னாடி நெறய விஷயங்கள் இருக்குனு தெரியவருது இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்த consequences யும் பயங்கரமா இருக்கும்னும் தெரியும். ஆனா இந்த உண்மைகள் வெளில வர்ரதுக்கு alisha அந்த கொலைகாரனோட முகத்தை ஞாபக படுத்தி identify பண்ணனும். alisha இதை கண்டுபிடிக்கறாங்களா இல்லையா ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையா இருக்கு.
இந்த கதையை பாக்கும் போது நெறய scientific terms அ use பண்ணி அதா explain பண்றது முக்கியமா alisha ஓட behaviour அ கதையோட அழகா பின்னி எடுத்துட்டு வராங்க. இந்த படத்தோட directors நெறய characters அ use பண்ணி நெறய information அ கொடுத்துருக்கறதுனால பாக்குற audience க்கு ரொம்ப இன்டெரெஸ்ட்டிங் அ கொண்டு வந்திருக்காங்க . இன்னொரு விஷயம் என்னனா இந்த கதைல வர கேரக்டர் ஓட டெப்த் யும் ஸ்வாரஸ்யமா கொண்டு போயிருக்காங்க. கதை போக போக characters ஓட emotions அ அருமையா வெளி படுத்திருக்காங்க. முக்கியமா alisha character ஓடுது இவங்களுக்கு உள்ள ஏற்படுற குழப்பம் தான் இந்த படத்துலயே main ஆனா விஷயம் அது தான் ultimate அ portray பண்ணிருக்காங்க . இந்த characters ஓட emotional side தான் superb அ செட் பண்ணிருக்காங்க .
கதையோட flow னு பாக்கும் போது அங்க அங்க flashbacks வர்றதும் இப்போ present ல நடக்கற இன்வெஸ்டிகஷன் scenes னு எல்லாமே பக்காவா குடுத்தருக்காங்க. ஒரு சில scenesபாத்தீங்கன்னா சஸ்பென்ஸ் ஆவும் கொண்டு போயிருக்காங்க . haran ஓட plan A முழுசா முடியரத்துக்கு முன்னாடியே plan b fail ஆயிடும். இதுக்கு அப்புறம் ஹாரன் என்ன பண்ண போறாரு னு விறுவிறுப்பா இருக்கும் . அதுக்கு அப்புறம் climax ல தான் haran யாரு ன்ற identity அ இவங்க சொல்லறாங்க. amal neerad ஓட படம் மாதிரி ஏ akhil அப்புறம் anas ஓட direction ல வெளி வந்த இந்த படத்துல twist அப்புறம் suspension எல்லாம் சேத்து பக்காவான த்ரில்லிங் படத்தை குடுத்திருக்காங்க னு சொல்லலாம்.
investigation எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் இந்த படத்துல வர action scenes எல்லாமே வேற level ல இருக்கு. அதுவும் car chase scene அ இருக்கட்டும் aeroplane ல நடக்கற climax fight scene னு எல்லாமே அசத்தல் அ இருந்தது. இந்த படத்தோட technical side னு பாக்கும் போது chaman chacko ஓட editing க்கு ஒரு பெரிய கைதட்டல் அ குடுத்தே ஆகணும். ஏன்னா excitement ஓட இருக்கற மாதிரி இந்த action scenes அ பக்கவா edit பண்ணி குடுத்திருக்காரு. இந்த படத்துல இன்னொரு highlight ஆனா விஷயமா இதுல வர visuals தான். Art director Saby Misra ஓட sets யும் amazing அ இருந்தது. Akhil George’ ஓட cinematography ஓவுவுறு frame யும் பக்கவா எடுத்துருக்காரு. அதே மாதிரி Ronex Xavier’ ஓட makeup யும் Gayathri Kishore and Malini ஓட costume design யும் characters க்கு நல்ல suitable அ குடுத்திருக்காங்க. அப்புறம் jakes bejoy ஓட music இந்த படத்தை vera level க்கு எடுத்துட்டு போகுது அதே மாதிரி yannick ben அப்புக்குரம் pheonix prabhu ஓட action chereography க்கு பெரிய கைதட்டல் அ குடுக்கலாம். ஏன்னா அவளோ அழகா ஓவுவுறு action scenes யும் கொண்டு வந்திருக்காங்க.
மொத்தத்துல ஒரு நல்ல thriller படம் தான் identity . கண்டிப்பா இந்த படத்தை பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.
No comments:
Post a Comment